தை மாத பலன் 2026: கடக ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி.. 1 விஷயத்தில் மிக கவனம்
தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் மாதமே மகர மாதம். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். மகாபாரதத்தின் பிதாமகனான பீஷ்மர் இந்த தை மாதத்துக்காகவே அம்பு படுக்கையில் தன் உயிர் போவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். அந்த அளவுக்கு புனிதமான மாதம்.

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதம். சூரியனை வழிபடும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியன் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. இந்த தை மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு மாற்றத்தை தரும் காலகட்டமாக இருக்கும். பெயர், புகழ், அந்தஸ்தம், கெளரவம் கிடைக்கும். காதல் மலரும். 7 ஆம் இடத்தில் 4 கிரகங்களின் சேர்க்கை உள்ளது. 5, 10க்கும் உடையவர் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். செவ்வாய் வலுத்திருப்பதால் ஆண்கள் வலிமையுடன் இருக்கக்கூடிய நேரமாக இருக்கும்.
இடம் வாங்கும் யோகம்
உடல் வலிமை அதிகரிக்கும். நம்பிக்கை கூடும். இடம் வாங்கக்கூடிய எண்ணம் தோன்றும். விட்ட தொழிலை மீண்டும் செய்யக்கூடிய குழப்பங்கள் வரக்கூடும். வருமானம் குறித்து அதிகளவில் யோசிக்கத் தொடங்குவீர்கள். 11 ஆம் இடத்தில் லாபத்தில் குரு அமர்ந்துள்ளார். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.
செல்வாக்கு கூடும்
சமுதாயத்துடன் தொடர்பு ஏற்படும். உங்களுடைய மதிப்பு, மரியாதை செல்வாக்கு கூடும். பேசும் வார்த்தையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்கள் செய்யும் தவறுக்கு உங்களை நீங்களே வருத்திக் கொள்ளும் சூழல் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் சிறிது பொறுமையுடன் இருப்பது நன்மை பயக்கும். எல்லோரிடமும் கணிவாகப் பேசுவது நல்லது.
நல்ல நேரம்
தோல்பட்டை வலி குறையும். உடல் வலிமை அதிகரிக்கும். 7 ஆம் இடம் வலுக்கப் போவதால் எதிரிகளால் நமக்கு நன்மைகள் நடக்கும். எதிரிகள் பேச்சுவார்த்தைக்கு சமரசத்திற்கு வருவார்கள். உங்களுடைய பழைய ஆவணங்களை எடுத்து வைப்பீர்கள். காணாமல் போன ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். சனி பாக்கியத்தில் அமர்ந்திருப்பதால் கோயில்களுக்குச் சென்று வரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
கவனம்
8 ஆம் இடத்தில் ராகு இருப்பதால் பேராசைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 2 ஆம் இடத்தில் கேது வரும்போது வருமானம் வரக்கூடிய இடத்தில் தடைகள் ஏற்படும். முதலீடுகள் செய்வதற்கு முன்பு யோசித்து செய்வது நல்லது. இல்லையெனில் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புலம்பல்கள் தீரக்கூடிய காலகட்டமாக இருக்கும். எல்லாவிதமான துன்பங்களில் இருந்தும் விலகி வரும் காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
ராகுவுடைய நிலை நன்றாக இல்லாமல் இருப்பதால் எதிர்பாலினத்தவர் விஷயத்தால் அவமானங்கள் நேரும் வாய்ப்புள்ளதால் சமூக வலைதளங்களில் கவனமாக இருப்பது நல்லது. இதுவரை இல்லாத அளவுக்கு கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தெய்வ கடாட்சம் உண்டாகும். இறையருள் கிடைக்கும். பெண் தெய்வத்தின் மூலமாக அனுகூலம் காணப்படும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications