தை மாத பலன் 2026: மிதுன ராசிக்கு திடீர் அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. வாகனத்தில் ஆபத்தும் காத்திருக்கு
தை மாத ராசி பலன்: தை மாத பலன்கள்: தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது நம்பிக்கை. மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். இதனால் தான் தை மாதம் மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சூரியனுடைய தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் மாதமே மகர மாதம். தை மாதம் பிறந்தால் வழி பிறக்கும் என்று பலர் காத்துக் கொண்டிருப்பார்கள். மகாபாரதத்தின் பிதாமகனான பீஷ்மர் இந்த தை மாதத்துக்காகவே அம்பு படுக்கையில் தன் உயிர் போவதற்காக காத்துக் கொண்டிருப்பாராம். அந்த அளவுக்கு புனிதமான மாதம்.

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதம். சூரியனை வழிபடும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. சூரியன் இல்லை என்றால் இந்த உலகமே இல்லை. கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் பொங்கல் பண்டிகை அமைந்துள்ளது. இந்த தை மாதத்தில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு 8 ஆம் இடத்தில் ராசிநாதன் அமர்ந்திருக்கிறார். 4 கிரகங்கள் அமர்ந்திருக்கின்றன. உங்களுடைய துணைக்கு நிறைய நல்லவை நடக்கும் காலகட்டமாக இருக்கும். துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் சிறு சிறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வர வேண்டிய பணங்கள் எல்லாம் உங்களுக்கு வந்து சேரும்.
திடீர் அதிர்ஷ்டம்
திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். லாட்டரி மூலமாக பணம் வந்து சேரும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களில் பழுதுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பொறுப்புகள் அதிகரிக்கும். இதுவரை இல்லாத அளவுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய காலகட்டமாக இருக்கும். நம்பிக்கை ஏற்படும். லாபத்தை தரக்கூடிய விஷயங்கள் நடக்கும்.
லாபம் கொட்டும்
8 ஆம் இடத்தின் மூலமாக மற்றவர்கள் மூலமாக லாபங்கள் கிடைக்கும். நண்பர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் மலைப் பகுதிக்குச் செல்வது, கிரிவலம் செல்வது போன்ற யோகங்கள் ஏற்படும். 3 ஆம் வீட்டு அதிபதி செவ்வாயுடன் சேர்ந்து 10 ஆம் வீட்டில் இருப்பதால் வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மாற்றம் முன்னேற்றம்
வேலை இடமாற்றம், மனை மாற்றம், வீடு மாற்றம் ஏற்படும். கம்யூனிகேஷன் அதிகரிக்கும். நண்பர்களால் வேலையில் நல்லவைகள் கூடிவரும். படிக்கும் மாணவர்களுக்கு அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் சொல்வதைக் கேட்கும் சூழல் ஏற்படும். ஆழ்ந்த அறிவு கிடைக்கும். வேலையில் இருக்கும் பிரச்சனையில் இருந்து வெளியில் வரக்கூடிய அமைப்புள்ளது.
கவனம்
செல்போன்கள் மூலமாக சில பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. வேலையில் பளு அதிகரிக்கும். நிறைய லாபங்கள் கிடைக்கும். அபிலாஷைகள் பூர்த்தியாகும். பரிசுகள் கிடைக்கும். குரு வக்கிரமாக இருப்பதால் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கும் யோகம் ஏற்படும். சுப விரயங்கள் ஏற்படும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்
-
ராஜயோகம் பெறும் கடக ராசி.. ஜூன் மாதத்தில் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications