தை மாத பலன்: மிதுன ராசியை வெச்சு செய்யப் போகும் கிரகங்கள்.. ஆபத்து காத்திருக்கு ரொம்ப கவனம்
தை மாத ராசி பலன் 2026: புத்தாண்டில் 2026 ஆம் ஆண்டில் வரும் முதல் தமிழ் மாதம் தை பிறக்கவுள்ளது. தை மாதம் மகர மாதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மகர மாதம்
சூரியன் மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம். மகர மாதம் என்றும் கூறப்படுகிறது. சூரியனின் தேர் பாதை தெற்கு திசையில் இருந்து வடக்கு திசைக்கு மாறும் காலம் தான் தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம். மகாபாரதத்தின் பிதாமகரான பீஷ்மர் தை மாதத்தில் தனது உயிர் போவதற்கு அம்பு படுக்கையில் காத்துக் கொண்டிருந்தாராம். அந்த அளவுக்கு சிறப்பு பெற்றது தை மாதம். தேவர்களின் உதயகாலம் தை மாதம்.

சூரியன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக தை மாதம் உள்ளது. சூரியன் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை. தை மாதம் 1 ஆம் தேதியான ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக ராசியில் சித்த யோகத்தில் அமையக்கூடிய நாளே பொங்கல் பண்டிகை. இந்தப் பண்டிகையின் விசேஷமே சூரியன், விவசாயிகள், கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதாகும்.
பொங்கல் வைக்க நல்ல நேரம்
பொங்கல் தினத்தன்று காலையில் நேரமாக எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிந்து சுவாமி கும்பிட்டுவிட்டு, சூரிய பகவானை வழிபாடு செய்து கிழக்கு நோக்கி அமர்ந்து பொங்கல் சாப்பிட வேண்டும். தை மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் பொங்கல் வைக்கலாம். காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பொங்கல் வைத்து இறைவனை வழிபாடு செய்வது நன்மை பயக்கும். சுக்கிர ஓரை, புதன் ஓரையாக இருந்தாலும் குளிகை நேரத்தில் பொங்கல் வைப்பது விசேஷமாகும்.
மிதுனம் தை மாத ராசி பலன் (Mithunam)
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு வக்கிரமாக உங்கள் ராசி, லக்கினத்தில் இருப்பது எதிர்மறையான விஷயமாகும். அஷ்டமத்தில் நிறைய கிரகங்கள் சேருவதால் விபத்துகளில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள கூடாது. இரவு நேர பயணத்தில் கவனம் தேவை.
பிரச்சனை வரும்
வண்டி வாகனத்தில் பழுதுகள் வந்தால் அதனை உடனடியாகப் பார்த்துக் கொள்வது நல்லது. யாரோ செய்த பிரச்சனைகளுக்கு நீங்கள் சிக்கும் சூழல் ஏற்படும். வண்டி வாகனங்களில் பிரச்சனைகள் வந்தால் உடனடியாகப் பாரத்துக் கொள்வது நன்மை. தேவையில்லாத செலவுகள் ஏற்படும். அஷ்டமத்தில் இவ்வுளவு கிரகங்கள் காலபுருஷனுக்கு 10 ஆம் வீடு என்பதால் நீங்கள் படும் அசிங்கம், அவமானத்திற்கு பதில் கிடைக்கும்.
வேலைப் பளு
வேலையில் பளு அதிகமாக இருக்கும். சைபர் செக்யூரிட்டி துறைகளில் இருப்பவர்கள், சாட்டிலைட், தீயணைப்புத் துறை, ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள், பிணவறையில் வேலை செய்பவர்கள், எமர்ஜென்சி துறை, சேவைத் துறை போன்றவற்றுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பெரிய வருமானத்தையும், பண வரவையும், பொருளாதார ஏற்றத்தையும் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கியம்
மற்ற எல்லோருமே ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய், தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது ஏற்றத்தைக் கொடுக்கும். எந்தவொரு விஷயத்தையும் வெளிப்படையாகப் பேசுவது தவிர்ப்பது நல்லது. நீங்கள் ஒன்று பேச மற்றவர்கள் வேறொரு விதமாகப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
லாபங்கள் கிடைக்கும் காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஏற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும். வைத்தீஸ்வர சுவாமியை வழிபாடு செய்வது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 70 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications