Rasi Palan This Week: கோடியில் புரளும் யோகம்.. துலாம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்
வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக் கூடிய அனுகூலமான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொலைத்தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும்.
பண வரவு
எதிர்பார்க்காத அனுகூலம் காணப்படும். வியாபாரத்தில் இருந்த மனத் தாங்கல்கள் தீரும். பண வரவுக்கான உத்தரவாதம் ஏற்படும். முதலீடுகளுக்கு குறைவிருக்காது. தொட்டது துலங்கும் காலகட்டமாக இருக்கும். எதிர்பார்த்த அனைத்து விஷயங்களும் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும்.
யோகமான காலம்
யோகத்தையும், நம்பிக்கையையும் பெறக்கூடிய ராசியாக இருப்பீர்கள். எடுக்கக் கூடிய முடிவுகள் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும். சுப காரியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பழைய கடன்கள் தீருவது, வழக்குகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீருவது போன்றவை ஏற்படும். ஏற்கனவே கடன் அமைப்பில் இருந்து வந்தவர்களுக்கு திடீரென நல்ல உதவிகள் கிடைக்கும்.
அடுத்தடுத்து சூப்பர் மாற்றம்
முதலீடுகளுக்கு குறைவில்லாமல் இருக்கும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் போன்ற நல்ல மாற்றங்கள் ஏற்படும். துணைவியாருக்கு உங்கள் மீதான தவறான அபிப்ராயம் நீங்கும். குடும்பத்தில், வெளியிடத்தில் அந்நியோன்யம் ஏற்படும். விடுபட்ட தெய்வ வழிபாடுகள் நிவர்த்தி ஏற்படுத்தக் கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
வழிபாடு
காது, மூக்கு, தொண்டை, பற்கள் தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் தேவை. எதுக்களிப்பு போன்ற பிரச்சனைகளால் தொண்டை பாதிப்புகளால் ஏற்படும் வாய்ப்புள்ளது. மசாலா உணவுகளில் மிகுந்த கவனம் தேவை. லாபத்தின் அளவு பலமடங்காக அதிகரிக்கும். தெய்வீக வழிபாடுகள் அனுகூலத்தை தரும். நரசிம்மர் வழிபாடு ஏற்ரத்தை ஏற்படுத்தும்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்












Click it and Unblock the Notifications