Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. தொழிலில் அற்புதமான முன்னேற்றம்
Thulam Rasi Palan: மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 23 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை, பங்குனி 9 ஆம் தேதி முதல் பங்குனி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய நல்ல காலகட்டம். நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு அனுகூலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். வயிறு, முதுகு தண்டுவடக் கோளாறுகளில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகள் விஷயத்தில் இருந்து வந்த அனைத்து தடைகளும் தவிடு பொடியாகும்.
புதிய முயற்சி
எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறக்கூடிய அற்புதமான அமைப்பு உண்டாகும். செல்வாக்குகள் கூடும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறுவது யோக பலத்தை அதிகளவில் பெற்றுத் தரும். புதிய முயற்சிகள் அனுகூலத்தை ஏற்படுத்தித் தரும். பிள்ளைகள் விஷயத்தில் நன்மைகள் அதிகரிக்கும். அவர்களுடைய படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
நினைத்தது நடக்கும்
பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும் நல்ல காலகட்டம். சொத்துகளை விற்பது, வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். பங்குனி மாதத்தில் நிறைய விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடைபெறும். மனதில் இருந்து வந்த குறைகள் நீங்கும். தைரியம் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
நம்பிக்கை
வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் அடுத்தடுத்து நன்மைகள் கைகூடும். மிகப்பெரிய ஏற்றமும், நம்பிக்கையும் உண்டாகும். தலை, சளி பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. புதிய கண்ணாடிகளை வாங்குவீர்கள். பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்து தீரும்.
சாதகமான அமைப்பு
திரிகோணத்தில் குரு இருப்பது பெரிய ஏற்றத்தைத் தரும். பொறுப்புகள் வந்து சேரும். வெளியூர் செல்லும் யோகம் உண்டு. மனதிடம் அதிகரிக்கும். பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள். மிகப்பெரிய தன்னம்பிக்கை ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் வெற்றி ஏற்படும். வீட்டில் எதிராக இருந்த பெரியவர்கள் உங்களுக்கு சாதகமாக மாறுவார்கள். மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.












Click it and Unblock the Notifications