Rasi Palan This Week: துலாம் ராசிக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் துலங்கும்..மிஸ் பண்ணாதீங்க
வார ராசி பலன்: செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான ஆவணி 23 முதல் ஆவணி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான துலாம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பொதுவாக இந்த மாதம் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
சூரிய கிரகணம், குரு வக்கிர பெயர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில், வேலையில் நல்ல ஏற்றத்தைப் பெறுவீர்கள். சுப காரியங்களில் இதுவரை இருந்து வந்த தடைகள் எல்லாம் நிவர்த்தியாகும். அடுத்தடுத்து நல்ல சுப காரியங்கள் நடக்கக்கூடிய அருமையான காலகட்டமாக இருக்கும். சுப விரையங்கள் அதிக அளவில் ஏற்படும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும்.
நன்மைகள் நடக்கும்
தாய் வழி, தந்தை வழியிலான உறவுகள் மேன்மை அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இதுவரை எல்லா விஷயங்களிலும் தொடர்ந்து இருந்து வந்த தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறி இனி அடுத்தடுத்து நன்மைகள் நடக்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடைபெறும்.
அனுகூலம்
வியாபாரம், தொழிலில் அனுகூலம் காணப்படும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தனிப்பட்ட முறையில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். அரசு மரியாதை அதிகரிக்கும். தொடர்ச்சியாக இருந்த மனத் தாங்கல்கள், மனக் கசப்புகள் நீங்கும் அற்புதமான காலகட்டம். அடுத்தடுத்து எல்லா விதமான சுப காரியத்துக்கும் சரி என்று சொல்லக்கூடிய அமைப்பு உண்டாகும்.
சுப காரியங்கள்
யோசனை செய்து கொண்டு நேரத்தை விரையமாக்காமல் சுப காரியங்களுக்கான வாய்ப்பு வந்தால் உடனடியாக ஏற்றுக் கொள்வது நல்லது. நேரம் நன்றாக இருப்பதால் ஒத்தி வைத்துக் கொண்டே இருப்பது நல்லது. இல்லையெனில் மனக் கஷ்டங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால் , காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வது உங்களுக்கு நல்லது. பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள்.
ஆரோக்கியம்
பண வரவு நன்றாக இருக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். அசிடிட்டி, அடிவயிறு, பற்கள் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். அபிராமி அந்தாதியில் இருக்கக்கூடிய 40, 59, 75 ஆவது பாடல்களை சொல்வது நல்ல பலன்களைத் தரும். நரசிம்மர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். நரசிம்மர் காயத்ரி மந்திரம், நரசிம்மர் கவசத்தை சொல்வதும், கேட்பதும் நன்மையான சூழ்நிலையை ஏற்படுத்தும்.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?











Click it and Unblock the Notifications