Rasi Palan This Week: புது வீடு புது கார் கலக்கப் போறீங்க.. விருச்சிக ராசிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா
Viruchigam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு செவ்வாய், சூரியன் இணைந்திருப்பதால் வண்டி, வாகனங்கள், வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். எல்லா விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக நடக்கும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். பெண்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
நம்பிக்கை
குரு வக்கிரத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பாராத பண வரவு, எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். சுக்கிரன், புதன் நல்ல நிலையில் இருப்பதால் மத நம்பிக்கை, மன நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த வாரம் வீட்டுக்குத் தேவையான ஆடம்பர சிற்பங்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விற்க முடியாத நிலங்களை விற்கும் யோகம் உண்டு.
வெற்றி மேல் வெற்றி
மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. முதுகு தண்டுவடம், கழிவுப் பாதை தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. எதிரிகளை வெற்றி கொள்ளக் கூடிய அனுகூலம் உண்டாகும். வழக்குகளில், நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில், இடமாற்றத்தில் வெற்றி ஏற்படும். நல்ல ஏற்றங்கள் உண்டாகும்.
தொழில்
புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். எதிரிகளிடம் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறும் யோகம் உண்டு. இழுபறியாக இருக்கும் நிலைமைகள் பெரிய வெற்றியை ஏற்படுத்தும். பண வரவுக்கான உத்தரவாதம் உண்டாகும். உறவுகளில் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடலை படிப்பது, கேட்பது நன்மை பயக்கும்.
வழிபாடு
தொழில் அபிவிருத்தி ஏற்படும். தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பது நல்லது. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு குறித்து யோசித்துக் கொண்டே இருக்கத் தேவையில்லை. திடீரென நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும் ஆச்சரியமான காலகட்டமாக இருக்கும். விநாயாகர், முருகர் வழிபாடு தடைகளை தவிடுபொடியாக்கும்.
-
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
Thulam Rasi Palan: துலாம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. மறந்தும் இந்த விஷயங்களை செய்திடாதீங்க -
கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம் -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது












Click it and Unblock the Notifications