வார ராசி பலன்: குருவின் அருளால் விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. வீடு, நிலம் வாங்கும் யோகம்
Viruchigam Rasi Palan: பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கிரக நிலைகள்
புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் நிறைவடைந்து பிப்ரவரி 13 ஆம் தேதி மாசி மாதம் பிறக்கவுள்ளது. சூரியன் கும்பத்திற்கு பிரவேஷம் ஆகிறார். சூரியன், புதன், சுக்கிரன், ராகு, திரிகோணத்தில் குரு வக்கிரமாக அமர்கிறார். இந்த 4 கிரகங்கள் சேருவது நல்லது இல்லை. அதுவும், புதனும் ராகுவும், சுக்கிரனும் ராகுவும், சூரியனும் ராகுவும் சேருவது மோசமான நிலையாகும். இப்போது 4 கிரகங்களும் சேருவது பொதுவாக நன்மையைத் தராது. சனியின் வீட்டில் 4 கிரகங்கள் இருந்தாலும் குருவின் பார்வை பலத்தால் இருப்பதால் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கும்.
இந்த வார ராசி பலன்
சிங்கப்பூர், சிவகங்கை, தேவக்கோட்டை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் கோயில்களில் தீ விபத்து, அசம்பாவிதங்கள், சிலிண்டர் வெடிப்பது, அரசியல் கட்டடங்களில் தாக்குதல், விமான விபத்து போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கலை உலகம் சார்ந்த நபரின் உயிரிழப்பு ஏற்படும். இந்த வாரத்தில் மகரம், ரிஷபம், கன்னி ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, தை 26 ஆம் தேதி முதல் மாசி 3 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். எதற்காகவும் கவலைப்படத் தேவையில்லை. மனதில் ஆற்றல், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் நஷ்டம், தொழிலில் மாற்றம், தொழிலில் இடமாற்றம், தொழிலில் தேவையில்லாமல் சிக்குவது போன்ற அமைப்புகள் ஏற்படும். அதனால் கவனமாக இருப்பது நல்லது. அரசு வேலை செய்பவர்களாக இருந்தாலும் சிக்கலில் சிக்கும் சூழல் உண்டு.
தன்னம்பிக்கை
மருத்துவர்களுக்கு தொழிலில் தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். அஷ்டமத்தில் குரு வக்கிரமாக இருப்பதால் வேலைக்குப் போகலாமா வேண்டாமா என்கிற எண்ணம் ஏற்படும். சம்பளம் வருமா, வராதா என்கிற கேள்வி ஏற்படும். மூன்றாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் உங்கள் மீதான தன்னம்பிக்கை அபரிமிதமானதாக இருக்கும்.
முன்னேற்றம்
4 ஆம் இடத்தில் நிறைய கிரகங்கள் இருப்பது அற்புதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குருவின் பார்வை பலத்தில் இருப்பதால் வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, பொறுப்புகள் தேடி வருவது போன்ற யோகங்கள் உண்டாகும். கிரகப்பிரவேஷம் செய்வீர்கள். ரத்தபந்த உறவுகள் மூலம் சங்கடம் வரும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. எந்தவித பெரிய பாதிப்புகளும் ஏற்படாது.
மேன்மை
வியாபாரத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகளை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. ரத்தபந்த உறவுகளுடன் எந்தவித பிரச்சனைகளும் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை உறவுகளில் மேன்மை ஏற்படும்.
வழிபாடு
பெற்றோர் ஆரோக்கியம், பெரியவர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. அந்த விஷயங்களில் மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அடிவயிறு, ரத்த அழுத்தம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. துர்க்கை வழிபாடு, துர்க்கை கவசம் கேட்பது, சொல்வது, உக்கிர நரசிம்மர் வழிபாடு அற்புதமான மேன்மையை ஏற்படுத்தும். சந்தோஷம் 70 சதவீதம், பொருளாதார ஏற்றம் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications