Rasi Palan This Week: திடீர் பண வரவை அள்ளும் விருச்சிக ராசி.. இனி சிங்கப் பாதை தான்
Viruchigam Rasi Palan: மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். [Viruchigam rasi palan]

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி ஆகியுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். இந்த வாரத்தில் பங்குனி மாதம் பிறக்கவுள்ளது. பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் மற்றும் ஸ்ரீராம நவமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், ராமர், அனுமன், பெருமாளுக்கு விசேஷமான மாதம்.
அந்த வகையில், மார்ச் 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை, மாசி 25 ஆம் தேதி முதல் பங்குனி 1 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிகம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பிள்ளைகளிடம் கோபப்படாமல் இருப்பது நல்லது. அவர்களுடைய பழக்க வழக்கங்களைக் கண்காணிப்பது நன்மையைத் தரும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனுகூலத்தை ஏற்படுத்தித் தரும். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் மாறி பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
தூக்கம் அவசியம்
சிறு சிறு வாக்குவாதங்களை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம், வியாபாரம் ரீதியாக வளர்ச்சிகள் ஏற்படும். மன அழுத்தம் மட்டும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தூக்கமின்மை தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் அதில் கவனம் தேவை. தூக்கத்தை முறைப்படுத்திக் கொள்வது நல்லது.
குரு வக்கிர நிவர்த்தி
அஷ்டமத்தில் குரு வக்கிரமாக இருப்பதால் நீங்கள் நினைப்பதற்கு எதிரான விஷயங்கள் நடக்கும். பிள்ளைகளால் செலவு வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆனால், வரும் 12 ஆம் தேதியில் இருந்து குரு வக்கிர நிவர்த்தியாவதால் நீங்கள் விரும்பிய விஷயங்கள், கஷ்டப்பட்டு வந்த விஷயங்கள் அனைத்தும் இனி கைகூடும். குடும்பத்தில் மட்டும் பிள்ளைகளிடத்தில் தோழனாக மாறுவது நல்லது.
வீடு நிலம் வாங்கும் யோகம்
சாதகமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு விருதுகள், எதிர்பாராத பண வரவு உண்டாகும், திடீர் பண வரவுகள் கிடைக்கும். 4 ஆம் இடத்தில் குரு அமைவதால் சொந்த வீடு, எதிர்பார்த்த வீடு, நிலம், வாசல் அமையும். திட்டமிட்ட விஷயங்கள் அனைத்தும் நடக்கும். ஏ கிளாஸ் யோகம் உண்டாகும் காலகட்டம். எந்த விஷயங்களாக இருந்தாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு, நிலைமையை சமாளித்துக் கொண்டு செல்வது நல்லது.
திடீர் பண வரவு
பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பெரிய அளவுக்கு வெற்றிகள் கிடைக்கும். வீடு, நிலம் வாங்குவீர்கள். பெரிய பெரிய முக்கியமான இடங்களில் வாங்குவீர்கள். மருத்துவர்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். திடீர் பண வரவு 12, 13 ஆம் தேதிகளில் வந்து சேரும். இந்த இரண்டு நாள்களில் தன பிராப்தம், குடும்பத்தில் அந்நியோன்யம், நினைத்தது வெற்றியாகும் யோகம் உண்டு.
ஆரோக்கியம்
பெரிதாக கவலைப்படும் விஷயங்கள் எதுவும் நடக்காது. ஜெயிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். நினைத்த காரியங்களை சாதிப்பீர்கள். ரத்தத்தில் பரவும் தொற்று நோய்கள், சளி தொந்தரவுகள், சுவாசக் கோளாறு, தொற்று நோய்களில் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது.
வழிபாடு
சந்தோஷம் 70 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதம் நன்றாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு அற்புதமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும். நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.












Click it and Unblock the Notifications