Viruchigam: விருச்சிக ராசிக்கு மார்ச் மாதத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. யோகம் கொட்டப் போகுது
மார்ச் மாத பலன்கள்: பிப்ரவரி மாதம் நிறைவடைந்து மார்ச் மாதம் பிறந்துள்ளது. மார்ச் மாதத்தில் சந்திரகிரகணம் நேற்று நிறைவடைந்துள்ளது. மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய கிரகங்களின் மாற்றம் நடைபெறும் நிலையில், இந்த மார்ச் மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மார்ச் மாதம் ஆரம்பிக்கும்போதே சுக்கிரன் தனது உச்ச வீடான சிம்மத்தில் அமரப்போகிறார். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சுகங்களையும், செளபாக்கியங்களையும் தரக்கூடிய மாதமாக இருக்கும். 13 ஆம் தேதிக்குப் பிறகு குரு பகவான் வக்கிர நிவர்த்தி அடையவுள்ளார். 22 ஆம் தேதி செவ்வாயும் அமருகிறார். 14 ஆம் தேதி சூரியன் சனியோடு இணைந்து மீனத்தை நோக்கி பயணிக்கப் போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன், சனி, செவ்வாய் இணைவுகள் நிகழப் போகிறது.

5 ஆம் வீட்டில் கேது, 11 ஆம் வீட்டில் ராகு இருக்கிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் இந்த மாதம் பிறக்கிறது. சந்திரன் தன்னுடைய பயணத்தை தனது சொந்த வீடான கடகத்தில் இருந்து ஆரம்பிக்கிறார். அந்த வகையில், இந்த மார்ச் மாதத்தில் விருச்சிகம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசியினருக்கு மார்ச் மாதம் அற்புதமான மாதமாக இருக்கும். சுக்கிரன் உச்சம் பெற்று 5 ஆம் இடமான யோகத்தில் அமர்ந்திருக்கிறார். 7க்கு உடைய சுக்கிர பகவான் 5 ஆம் இடத்தில் உச்சம் பெறுவதால் கோபுர கலச யோகத்தைப் பெறுவீர்கள். மிக அற்புதமான பலன்கள் கிடைக்கும். சனி பகவான் 5 ஆம் இடமான யோக ஸ்தானத்துக்கு வருகிறார்.
தொழில்
சுக்கிரனோடு சனி சேரும்போது அமோகமான யோகங்கள் கிடைக்கும். இசை, பாடல், நடனத் துறையில் இருப்பவர்கள், திருமணம் தொடர்பான துறைகளில் இருப்பவர்கள், டெக்கரேஷன், பேன்சி ஸ்டோர், சினிமா துறை, கேமரா வைத்து பணிபுரிபவர்கள், எழுத்தாளர்கள், ஐடி துறை, ஆட்டோமேஷன், மெக்கானிக் ஷாப், ஸ்பேர்பார்ட்ஸ், செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் இருப்பவர்களுக்கு நன்மை தரும் காலகட்டமாக இருக்கும்.
காதல் மலரும்
சுக்கிரனைத் தொடர்ந்து 10 ஆம் இடத்துக்கு சூரிய பகவான் வருகிறார். வேலையில் உங்களை பிஸியாக வைத்திருப்பார். 7க்கு உரியவன் 5 ஆம் இடத்தில் உச்சம் பெற்று உங்களுக்கு யோகத்தையும், காதலையும் தருவார். உங்களுடைய நண்பர்களை எல்லாம் சந்திக்கும் யோகம் உண்டாகும். கிரிக்கெட் விளையாடுவீர்கள். வேலை வேலை என்று சுத்தாமல் உங்களுக்கான நேரத்தை செலவிடுவீர்கள்.
யோகம்
இளமையாக மாறுவீர்கள். மாடலிங், பேஷன் துறையில் இருப்பவர்களுக்கு புதிய ஜர்னல்கள் கிடைக்கும். உலக அழகன், அழகிப் போட்டிகளுக்குச் செல்வீர்கள். பழைய காதல்கள் மீண்டும் சேரும். நேரமே இல்லாத அளவுக்கு பல்வேறு பிசினஸ்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. 4 ஆம் இடத்தில் இத்தனை கிரகங்கள் இருப்பதால் மிகவும் சோர்வாக காணப்படுவீர்கள்.
வழிபாடு
வேலை டென்ஷன் அதிகமாக இருக்கும். அதனால், ஒரு வேலையை மட்டும் செய்வது நல்லது. 4 ஆம் இடத்தில் ராகு அமர்ந்துள்ளதால் அறிமுகமில்லாத நபர்களிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. ஜாக்கிரதையாக இருப்பது நன்மையைத் தரும். போட்டோ, வீடியோக்களை அனுப்புவதைத் தவிர்ப்பது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் ரகசியங்களைத் தவிர்ப்பது நல்லது. லட்சுமி வழிபாடு முன்னேற்றத்தைத் தரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கட்டம் சரியில்லை.. வச்சு செய்யும் சனி, குரு.. ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications