வார ராசி பலன்: துலாம், விருச்சிகம் ராசிக்கு தொழில், வேலையில் அதிர்ஷ்டம்.. இதுல மட்டும் கவனம்
வார ராசி பலன்: பங்குனி மாதத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த தெய்வங்களை வழிபட வேண்டும், பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மார்ச் மாதத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். இந்த கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில், மார்ச் மாதத்தில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் சில ராசிகளுக்கு அபரிமிதமான நல்ல சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் தரப்போகிறார். மாதத்தில் சிறந்த மாதமான பங்குனி மாதம் தற்போது தொடங்கியுள்ளது. பங்குனி மாதத்தில் மார்ச் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை துலாம், விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
துலாம்: ஏற்றம், அனுகூலம் கிடைக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். திருநள்ளாரில் இருக்கும் சனி பகவானை நினைத்து நவக்கிரகங்களில் வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். ஆச்சரியமான முன்னேற்றம் ஏற்படும். தேக ஆரோக்கியத்தில் முதுகு, கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். நாராயணியத்தில் உள்ள 100 வது பாட்டை கேட்பது நல்ல பலன்கள் கிடைக்கும்.
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ரீதியாக நினைத்த காரியங்கள் நடக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 2, 3 வருடங்கள் மிகவும் போராட்டமான காலமாக இருந்திருக்கும். கிரீன் கார்டு பிரச்சனைகள் தீரும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும். பெரிய பொறுப்புகளுக்கு வரும் வாய்ப்புள்ளது.
அரசு கெளரவம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு நம்பிக்கை ஏற்படும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உண்டாகும். சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் படிப்படியாக நிவர்த்தி ஏற்படும். துணை, பிள்ளைகள் இருந்த விஷயத்தில் இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். நம்பிக்கை ஏற்படும். உத்தியோகத்தில் அதிமான சந்தோஷம், ஏற்றம், நம்பிக்கை ஏற்படுத்தும் காலகட்டம்.
தாய் வழி, தந்தை வழி உறவில் இருந்து வந்த இழுபறியான நிலைமை மாறும். தொழில் ஏற்றம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டாகும். புதிய வேலைகள் கிடைக்கும். புது தொழில் அமைக்கும் யோகம் உண்டாகும். பயணங்களை ஏற்றுக் கொள்வது அனுகூலமான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் மேன்மை, புதிய பொறுப்புகள், மேலதிகாரிகள் நம்பிக்கை, தொடர் பயணம் , நல்ல பண வரவு உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு நவக்கிரகத்தில் இருக்கக்கூடிய குரு பகவான் வழிபாடு, மகான்கள் வழிபாடு, ராகவேந்திரர் வழிபாடு, குரு காயத்ரி ஜெபிப்பது நல்ல பலன்களைத் தரும். மன அழுத்தம், அசிடிட்டி, அலர்ஜி தொந்தரவுகள் ஏற்படும். தூக்கமின்மை உண்டாகும். செவ்வாய் ஸ்தானம் சரியில்லாததால் தூக்கம் தடைபடும். அபிராமி அந்தாதியில் உள்ள 40, 59, 75 ஆவது பாடல்களை படிப்பது நல்லது.
பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் தரும். குடும்பத்தில் துணையுடன் தேவையில்லாத குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பிரச்சனைகள் ஏற்படும். உணவு முறை, செரிமான விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் காணப்பட்ட பிரச்சனைகளில் பரிபூரண நிவர்த்தி உண்டாகும். முதலீடுகளில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
நிலம், வீடு, மண் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாய் வழி, தந்தை வழி உறவில் மேன்மை உண்டாகும். எதிர்பாராத இடத்தில் இருந்து நல்ல செய்திகள், லாபம், சந்தோஷம், அனுகூலம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications