திடீர் அதிர்ஷ்டம் பெறும் கன்னி ராசி.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. என்ஜாய்
ட்Kanni Rasi Palan: மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். வைகாசி மாதம் ஆரம்பிக்கும்போது அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் மேஷ வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும்.
அந்த வகையில், மே 25 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை, வைகாசி 11 முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கன்னி ராசி பலன்கள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன் (Kanni Rasi Palan)
கன்னி ராசி, லக்கினம் சார்ந்த நபர்களுக்கு உத்தியோகம், வேலை, தொழில், அந்தஸ்து அருமையாக இருக்கும் காலகட்டம். உங்களுடைய ஆரோக்கியம், தந்தையின் ஆரோக்கியம், பெரியவர்கள் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. பயணங்களில் தடை, தாமதங்கள், சிறிய சிறிய வருத்தங்கள், விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது .
தொழில்
தொழில் நன்றாக இருக்கும். பெரிய மேன்மை ஏற்படும். மற்றவர்கள் உங்களைப் பாராட்டுவது, விருது கிடைக்கும் வாய்ப்புள்ளது. நினைத்த காரியங்கள் எல்லாம் நன்றாக நடக்கும் காலகட்டம். பல பிரச்சனைகள் வந்து போகும். மனதில் திருப்தி ஏற்படும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. சிறு நரம்புகள் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
திடீர் அதிர்ஷ்டம்
குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நட்பு, உறவுக்குள் இருந்த தகராறுகள் படிப்படியாக மாறும். திடீர் அதிர்ஷ்டம் பெரிய செல்வாக்கையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். உத்தியோகத்தில் காணப்பட்டிருந்த பலவிதமான சங்கடங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்,
யோக பலன்
லாபம், சந்தோஷம், யோக பலன்கள் கிடைக்கும் காலகட்டம். பிரிந்தவர்கள் ஒன்று சேரக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் காணப்பட்டிருந்த கஷ்டங்கள், சிக்கல்கள் பரிபூரணமா நீங்கும். அஷ்டமத்தில் செவ்வாய் இருப்பதால் உடம்பில் சூடு ஏற்படும். அடிவயிறு, கழிவுப் பாதையில் பிரச்சனைகள் வருவதற்கான பாதிப்புள்ளது.
வழிபாடு
பெரிய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. அனுகூலமான காலகட்டம், குருவாயூர் கிருஷ்ணர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 80 சதவீதம் நன்மைகள் ஏற்படும் காலகட்டம். வெள்ளிக்கிழமையில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது தடைகளை தகர்த்தெறியும்.
-
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
மகரம், கும்பம், மீனம் ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா?.. ஜூன் மாதம் வரும் அற்புத மாற்றம் -
குரு - சுக்கிரன் இணைவு: கஜலட்சுமி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications