வார ராசி பலன்: கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு அடிச்சது யோகம்?.. கிடைக்கும் பலன்கள் என்ன?
Weekly Rasi Palan: ஜனவரி 30 ஆம் தேதி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி வரை கடகம், சிம்மம் மற்றும் கன்னி ராசிக்கான பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அரசு அதிகாரிகளுக்கு சரியான நேரத்தில் உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும். நிலம், வீடு, மனை விற்பனை தொழில் துறை சார்ந்தவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். இதனால், மன சோர்வடைவீர்கள். சரியான நேரத்தில் கிடைக்கும் ஆலோசனைகளால் பணியில் சிறந்து விளங்குவீர்கள்.

தொழில் செய்து வருபவர்கள் தங்களது பிராண்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் புதிய விளம்பரம் செய்வார்கள். வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். பணிச்சுமையால் மனக்குழப்பம், தூக்கமின்மை ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான காலமாக இருக்கும். படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். உயர் கல்வி படிக்க விரும்புபவர்களுக்கு விரும்பும் துறை கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களை விட்டு போன பொருட்கள் எல்லாம் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். அம்மன் கோயில்களில் திங்கள்கிழமை நாட்களில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியைத் தரக்கூடிய காலமாக இருக்கும். உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். உங்களை கேட்டு பிறர் நடப்பார்கள். ஆன்மிக காரியங்களால் நல்ல பலனைப் பெறுவீர்கள். வீடு, மனை, வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டு. இருக்கும் வீடு, வாகனங்களை சீரமைக்கவும் நல்ல வாய்ப்பு சூழல் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர்களுக்கு செல்ல வேண்டியது வரும். மனதில் புதிய நம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
சக ஊழியர்கள் உங்களுடைய பேச்சை கேட்டு நடக்கத் தொடங்குவார்கள். வியாபாரம், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடு, மூலதனங்களை தொழிலில் செய்வதற்கான வாய்ப்பு உருவாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு அலுவலக நிர்வாகத்திடம் இருந்து சில சலுகைகள் கிடைக்கும். சேமிப்புகள் மூலமாக குடும்பத்தில் சுப செலவுகளைச் செய்வீர்கள்.
பெண்கள் தங்கள் உறவுகளுடனும், குடும்பத்தில் உள்ளவர்களுடனும் பிணைப்புடன் இருப்பதால் உறவுகள் வலுவடையும். குடும்பத்தில் மேன்மை கிடைக்கும். மாணவர்களுக்கு நல்ல வேலை, நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். கல்விச் செலவுகளைச் செய்வீர்கள். உரிய பொருளாதாரத் தேவைகள் கிடைக்கும். அறிவுசார்ந்த விஷயங்கள் குறித்து நண்பர்களுடன் பேசுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சிவன் கோயில்களுக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் சென்று வழிபட்டு வருவது நல்ல பலன்களைத் தரும். பிரதோஷம் நாட்களில் நெய் மற்றும் தேன் தானமாக அளிப்பது நல்லது. சூரிய நமஸ்காரம் நல்ல பலன்களை அள்ளித் தரும்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான வாரமாக இந்த வாரம் இருக்கும். உங்களுடைய இனிமையான பேச்சால் மற்றவர்கள் மனதில் இடம்பிடிப்பீர்கள். வீண் செலவுகளைக் குறைத்து சுபச் செலவுகலைச் செய்வீர்கள். எடுத்த காரியங்களில் தைரியமாக செயல்பட்டு அதில் வெற்றி காண்பீர்கள். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு விரயச் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சக ஊழியர்களிடம் அன்பாகப் பேசி வேலைகளை வாங்குவீர்கள். புதிய சிந்தனைகள், செயல்கள் பிறக்கும். சக ஊழியர்கள் மட்டுமல்லாமல் நிர்வாகத்தினரிடமும் நற்பெயரைப் பெறுவீர்கள்.
வியாபாரிகள், தொழில் செய்பவர்கள் நல்ல லாபம் மற்றும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். தெய்வீக காரியங்கள், நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். வீடு, மனை, நிலம் வாங்குவதற்கான யோகங்கள் உண்டு. கடன் சார்ந்த விஷயங்களிலும், எதிரிகளிடமும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய தொழில் செய்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். இதுவரை செய்த செலவுகள் குறித்து யோசிக்காமல் இருப்பது நல்லது. வரும் காலத்தில் நல்ல பல பலன்களைப் பெறுவீர்கள்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். வேலைகளில் புதிய உத்வேத்துடன் செயல்படத் தொடங்குவீர்கள். மனநிறைவு உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவதற்கு சாதகமான காலமாக இருக்கும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த காலமாக இருக்கும்.
ஐயப்பன் அல்லது சாஸ்தா கோயில்களில் புதன்கிழமை தினத்தில் நெய் தீபம் ஏற்றி வருவது நல்ல பலன்களைத் தரும். பெருமாள் அல்லது விநாயகர் அல்லது சாஸ்தா கோவிலில் 11 நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.












Click it and Unblock the Notifications