துலாம் முதல் மீனம் வரை.. 6 ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி?.. எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?
Rasi palan this week: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 ஆம் தேதி முதல் ஐப்பசி 8 வரை) காலகட்டத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கன்னியில் இருக்கும் சூரிய பகவான் துலாம் ராசிக்கு வரக்கூடிய மாதமே ஐப்பசி மாதமாகும். இந்த மாதத்தில் நிறைய பிரச்சனைகள் தீரும். கும்பம், ரிஷபம், கன்னி ஆகிய ராசிக்கு இந்த வாரத்தில் அபாரமான முன்னேற்றம் ஏற்படும். சந்திரன் தனுசு ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார். செவ்வாய், குரு இணைவதால் இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் அபரிமிதமான மாற்றமும், எதிர்பாராத சுப நிகழ்ச்சியும் நடக்கும் வாய்ப்புள்ளது.
அதன்படி, அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான (ஐப்பசி 3 முதல் 8 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு லாபம், சந்தோஷம், அனுகூலம் ஏற்படக்கூடிய காலகட்டம். சந்தோஷமாக நண்பர்களுடன் வெளியில் செல்லும் அமைப்பு. கோயில்களுக்குச் செல்வது, ஷாப்பிங் செல்வது போன்றவை ஏற்படும். லாபத்தின் அளவு அதிகரிக்கும். பிள்ளைகள் விஷயத்தில் காணப்பட்டிருந்த சங்கடங்கள் மன வருத்தங்கள் படிப்படியாக குறையும்.
எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த பலவித சங்கடங்கள் நீங்கும். வெளிநாட்டில் இருந்து நன்மைகள் ஏற்படும். அசையும், அசையா பொருள் சேர்க்கை ஏற்படும். கஷ்டங்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். ஆரோக்கியத்தில் மட்டும் சிறிது கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. வயிறு, முதுகுத் தண்டுவடம், பாதம் தொடர்பான பாதிப்புகளைப் பார்த்துக் கொள்வது நல்லது.
லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு ஏற்றத்தைத் தரும். மாணவ, மாணவிகளுக்கு அற்புதமான வளர்ச்சியைத் தரும். கண், காது, மூக்கு, நரம்பு, தலைவலி சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. துணை விஷயத்தில் ஏற்றங்களும், அனுகூலமும் ஏற்படும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிகம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். மேலதிகாரிகள், உடன் வேலை செய்பவர்கள் விஷயத்தில் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். ஆதித்ய ஹிருதயம் கேட்பது, அனுமன் சாலிஷா கேட்பது அனுகூலத்தைத் தரும்.
உறவுகளுக்குள் கோபம், சண்டை போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். முதுகுத் தண்டுவடம், தோள்பட்டை தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் கோபப்படாமல் பொறுமையாச் செல்வது நல்லது. பிள்ளைகள் திடீரென வெளியில் இருக்கும் கோபத்தை உங்கள் மீது காட்டக்கூடிய வாய்ப்புள்ளது. அவர்களை அரவணைத்துச் செல்வது நன்மை பயக்கும்.
அற்புதமான வாரமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாயும், குருவும் இணைந்திருப்பது அற்புதமான யோகத்தைத் தரும். சனி வக்கிரமாக இருக்கிறது. பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இடமாற்றம், காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பொறுப்புகள் மாறும். புதிய இடங்கள் மாறுவதற்கான வாய்ப்புள்ளது. புதிய நபர்கள் வருவார்கள். எல்லா விஷயத்தையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசியினருக்கு வெற்றி மேல் வெற்றி வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். பணம், பொருளாதாரத்திற்குப் பஞ்சம் இருக்காது. செவ்வாய், சுக்கிரன் வக்கிரமாக, புதன் மூன்றுமே சுக்கிரன் வீட்டில் சேர்ந்திருக்கிறது. பெரியவர்கள் மூலமாக பணம் வரும். அஷ்டமத்தில் செவ்வாய், குரு இந்த மாதம் முழுவதும் இருப்பதால் அம்மாவுடைய ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
புரோட்டீன் சார்ந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வண்டி, வாகனம் சார்ந்த விஷயங்களை மேற்கொள்வோர் கவனமாக செல்வது நல்லது. பணங்களின்போது மிகுந்த கவனம் தேவை. தேவையில்லாத வம்பு, வழக்கு என போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சண்டை, பஞ்சாயத்துகள், அண்ணன், தம்பி சொத்து விஷயத்திற்குள் சிக்காமல் இருப்பது நன்மை பயக்கும்.
தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். சுப விரயங்கள் ஏற்படும். தெய்வ தரிசனம் செய்வீர்கள். உறவுகள், நண்பர்கள் வீட்டிற்கு வந்து செல்வார்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இல்லாத நிம்மதி இனி ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே தவிர்ப்பது நல்லது. வயிறு, கழிவுப் பாதையில் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யோக பலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
மகரம் ராசி பலன்
மகரம் ராசியினருக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியின் உடல்நிலையிலும், மனைவி கணவர் உடல்நிலையிலும் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றும் அமைப்பு உள்ளது.
பெரும் செல்வாக்கு ஏற்படக்கூடிய காலகட்டம். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள், பாதிப்புகள் நீங்கும். வண்டி வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக வாகனங்களை இயக்குவது நல்லது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மருந்து, மாத்திரைகளை அலட்சியப்படுத்தினால் பெரும் சிக்கலில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது.
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு, பயணங்களில் அனுகூலம் காணப்படும். சம்பள உயர்வு கிடைக்கும். படிப்பில் இருந்த தடை பரிபூரணமாக நீங்கும். இதுவரை இருந்து வந்த சங்கடங்கள் நீங்கும். பெரும் செல்வாக்கும், கெளரமும் ஏற்படும். சிக்கல்களில் இருந்து பரிபூரணமாக நிவர்த்தியாகும். பெரும் செல்வாக்கு ஏற்படக்கூடிய அமைப்பு.
கும்பம் ராசி பலன்
கும்பம் ராசியினர் இந்த ஆண்டாடோடு உங்களுக்கான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். 21 ஆம் தேதி முதல் நிறைய மாற்றங்கள் ஏற்படும். திருமண யோகம் உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது. அற்புதமான மாற்றங்கள் ஏற்படும்.
நிறைய பேருக்கு நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும். பெரிய பதவிகள் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும் யோகம் உண்டாகும். பெரிய பெரிய வெற்றியைக் கொண்டாடக்கூடிய யோகம் ஏற்படும். எந்த விஷயத்தை குறிவைத்தாலும் அவை உங்களை கைவிட்டுப் போகாது. மற்றவர்கள் செய்த தவறு கூட உங்களை எந்த விதத்திலும் பாதிக்காது.
கடல் கடந்து பயணங்களை மேற்கொள்வது சந்தோஷத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும். இயற்கையாக இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பெரும் செல்வாக்கு ஏற்படும். தான் உண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பது நன்மை பயக்கும். 23 முதல் 25 ஆம் தேதி வரை குழப்பமான மனநிலை இருக்கும் என்பதால் கவனம் தேவை. நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம நன்றாக நடக்கும்.
மீனம் ராசி பலன்
மீனம் ராசி லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அஷ்டமத்தில் கிரகங்கள் சேருகின்றன. நீச்சம் பெறக்கூடிய சூரியனால் பின்புறப் பகுதியில் வலி, வயிறு சார்ந்த பாதிப்புகள், கழிவுப் பாதை தொடர்பான பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அப்பாவுக்கும், உங்களுக்கும் பிரச்சனை வரும் அமைப்பு உள்ளது. அல்லது பிள்ளைகள் நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ளாத தன்மைகள் ஏற்படும்.
எல்லாவிதமான சங்கடங்களும் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் அனைத்தும் நன்மையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். தினந்தோறும் உடற்பயிற்சியை மறக்காமல் செய்வது, அனுமன் வழிபாடு செய்வது பலத்தைத் தரும். ராகுவால் திடீர் அதிர்ஷ்டம், திடீர் பண வரவு உண்டாகும். தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழும் அமைப்பு உள்ளது. வீடு, நிலம், வாசல், சொத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
