மேஷம், ரிஷப ராசியினருக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இந்த வாரத்தில் நடக்கும் முக்கிய மாற்றம்
வார ராசி பலன்: மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 21 முதல் 27 ஆம் தேதி வரை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் 12 ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம் - துர்க்கை வழிபாடு அருமையான பலன்களைத் தரும். எல்லா விதத்திலும் ஏற்றத்தைப் பெறுவீர்கள். தர்க்கம், கோபம், அதிகாரிகளுடன் சண்டைகளைத் தவிர்ப்பது நல்லது. பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. பிள்ளைகளுடன் ஆத்ம ரீதியாக மனம் விட்டுப் பேசுவது நல்லது. பிள்ளைகள் சிறு சிறு கோபப்படுவார்கள்.
தொழில் ரீதியாக நிறைய அலைச்சல்கள் காணப்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மை காணப்படும். எதிர்பார்க்காத பல நன்மைகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் படிப்படியாகத் தீரும். வழக்கு போன்ற பிரச்சனைகள் சாதகத்தை ஏற்படுத்தும். திடீர் பண வரவு உண்டாகும். அரசு அதிகாரிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் செய்யாத பழிக்கு சிக்கும் நிலை உண்டாகும் காலகட்டம்.
உள்ளூர், வெளியூர், விடுபட்ட தெய்வ வழிபாடுகள் எல்லாம் நிறைவேறும். இழுபறியில் இருக்கும் பணிகளை நடத்தி முடிப்பீர்கள். ஆச்சரியத்தக்க வகையில் முன்னேற்றம் ஏற்படும். தொடர்ந்து இருந்த வந்த மனப் பிரச்சனைகள், பண கஷ்டங்கள் தீரும். மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். நண்பர்களுடன் மீண்டும் இணைந்து மகிழ்வீர்கள்.
தொடர்ச்சியாக இருந்த கஷ்டங்கள் தீரும். நம்பிக்கை தைரியம் உண்டாகும். எதிர்பார்க்காத நன்மைகள் உண்டாகும். குடும்பத்தை விட்டு தொலைதூரம் பயணங்கள் செல்லும் நிலை உண்டாகும். சுப காரியத் தடைகளில் நிவர்த்தி உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக கொள்ள வேண்டும். கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. துர்கை வழிபாடு மேன்மையைத் தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு மகான்கள் வழிபாடு நன்மையைத் தரும். ஏற்றம், அற்புதம், சந்தோஷம், அனுகூலம் உண்டாகும். காது மூக்கு தொண்டை ஒற்றை தலைவழி, சைனஸ் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ரத்த பந்த உறவுகளால் சில செலவுகள் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவு, செலவுகளுக்கு கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் சில செலவுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும். ஆத்மரீதியாக தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும். அபிராமி அந்தாதியில் 40, 59, 75 ஆவது பாட்டை தொடர்ந்து படிப்பது நல்லது. பிள்ளைகளின் தேக ஆரோக்கியம், பழக்கவழக்கம், அவர்களின் வண்டி வாகனங்கள், வேலைவாய்ப்புகள், குடும்ப அமைதியில் சில பிரச்சனைகள் உண்டாகும்.
இந்த எல்லா பிரச்சனைகளும் எப்போது தீரும் என்று வருத்தப்பட்டுக் கொண்டே இருப்பதை தவிர்த்து பொறுமை காப்பது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு மனக் கவலை உண்டாகும். உறவுகளால் உண்டாகும் செலவுகளால் மன உளைச்சல் ஏற்படுவதைத் தவிர்ப்பது நல்லது. அனுகூலமான காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்களை தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications