தனுசு ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் தேவதை.. யோகம் கொட்டும்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 16 முதல் 22 ஆம் தேதி வரை அதாவது ஆனி 2 இல் இருந்து 8 வரையிலான இந்த வாரத்திற்கான தனுசு ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் அந்நியர் தலையீடு, பிறர் குடும்ப விஷயத்தில் உங்கள் தலையீடு கூடவே கூடாது. ஞாயிற்றுக்கிழமைகளில் பசு மாடுகளுக்கு உணவளிப்பது அனுகூலத்தைப் பெறுவீர்கள். வெள்ளிக்கிழமைகளில் தெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய தனுசு ராசிக்காரர்கள் அபரிமிதமான யோக பலத்தையும், அற்புதத்தையும் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
அதிர்ஷ்டம்
லாபம், சந்தோஷம், அனுகூலம், அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். முதலீடுகள் குறைவில்லாமல் இருக்கும். ரத்த பந்த உறவுகள், தாய் வழி உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவது நன்மையையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வருவது ஆச்சரியத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
பாதிப்புகளில் இருந்து விடுதலை
இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறுவது கண்கூடாகப் பார்க்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். உத்தியோகத்திலும், தொழிலிலும், வியாபாரத்திலும் இருந்து வந்த பாதிப்புகள் பரிபூரண நிவர்த்தி ஏற்படுவது சந்தோஷத்தை ஏற்படுத்தும். தலைநிமிர்ந்து செல்லக்கூடிய அமைப்பு ஏற்றத்தைக் கொடுக்கும். துணை அல்லது துணைவியாருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது.
அனுகூலம்
வாரத்திற்கு ஒரு நாளாவது உங்கள் குடும்பத்தில் யாருடைய தலையீடும் இல்லாமல், குடும்பத்திற்கும், உறவுகளுக்கும், குழந்தைகளுக்கும் நேரத்தைச் செலவிடுவது நல்லது. குடும்பத்தில் இருந்த இளம் சூடான நிலைமை மாறி தென்றல் வீச ஆரம்பிக்கும். வியாபாரத்தில் அனுகூலத்தை அதிகமாகப் பார்க்கக்கூடிய பெறுவீர்கள்.
ஜெயம்
கூட்டுத் தொழிலில் இருந்து தனித்தொழில் தொடங்கும் அனுகூலத்தைப் பெறுவீர்கள். எடுத்த காரியத்தில் ஜெயம், நம்பிக்கை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் அதி அற்புதமும், நம்பிக்கையும் நீண்டநாட்களாக இருந்த தடைகள் தவிடுபொடியாகும் நல்ல காலகட்டமாக இருக்கும். திருமணத்தில் இருந்த பாதிப்புகளை சரிசெய்து கொள்ளக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
தடைகள் நீங்கும்
சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். அரசு கெளரவம் ஏற்படக்கூடிய அமைப்பு உண்டாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உண்டாகும். உள்ளூர், வெளியூர், கடல் கடந்த பயணங்களால் ஏற்றமும், முன்னேற்றமும் ஏற்படக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications