மிதுனம், கடக ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது.. தங்க நகைகளை குவிப்பீங்க.. இதில் மட்டும் கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: மிதுனம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 21 முதல் 27 ஆம் தேதி வரை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் 12 ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Weekly rasi palan Lucky zodiac signs

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு அதி அற்புதமான காலகட்டமாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும். எதிர்பார்க்காத நன்மைகள் எல்லாம் இந்த காலகட்டத்தில் உண்டாகும். சிவன் கோவில்களில் சுவாமியை தரிசனம் செய்வது நல்ல பலன்களைத் தரும். குறிப்பாக நல்லெண்ணெய் வாங்கி கொடுப்பது குடும்பத்தில் மகிழ்ச்சி, பேரானந்தத்தை உண்டாக்கும். முதுகு வலி, பாத வலி விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

லாபம் கொட்டும்

அரசு உத்தியோகம், அசியல் வாதிகள் வெளிச்சத்திற்கு வருவீர்கள். தொலைத் தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். முன்னேற்றம், வளர்ச்சி உண்டாகும். லாபத்தின் அளவு பன்மடங்காக உயரும். பசு மாடுகளுக்கு சனிக்கிழமை தோறும் உணவளித்து வந்தால் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள்.

மகிழ்ச்சி ஏற்படும்

தொடர்ச்சியாக இருந்து வந்த மனத் தாங்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் அனுகூலம் ஏற்படும். வண்டி வாகன மாற்றங்கள் நன்மையை ஏற்படுத்தும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். லாபம், ஏற்றம், பணவரவு, நம்பிக்கை, சந்தோஷம் எல்லாமே ஏற்படும். நினைத்து பார்க்காத அளவுக்கு நன்மை உண்டாகும்.

வெற்றி மேல் வெற்றி

பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அரசுத் துறையில் இருப்பவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மிக நீண்டநாள்களுக்குப் பிறகு நல்ல விஷயத்தை செய்யும் பிராப்தம் உண்டாகும். தொழில் நிமித்தமாக வெளியூர், வெளிநாடு, கடல் கடந்த பயணங்கள் ஏற்படும். அரசுத் துறைக்கான தேர்வுகளை எழுதிவிட்டு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். ஆச்சரியத்தக்க முன்னேற்றம் உண்டாகும்.

நகை பொருள் வாங்கும் யோகம்

கொடுத்த வாக்கை சமுதாயத்திலும், குடும்பத்திலும் காப்பாற்றும் அமைப்பு ஏற்படும். பண வரவு உண்டாகும். அக்ஷய திருதியை வரக்கூடிய காலகட்டத்தில் நிறைய குடும்பத்துக்கு பொருள், நகைகளை வாங்கி கொடுப்பீர்கள். வாகனத்தில் செல்லும்போது மிகுந்த பொறுப்பு, கவனம் தேவை. வாகனத்தில் வேகத்தைக் குறைப்பது நல்லது. பாதகாதிபதி குரு வருவதால் வாகனம், ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கடகம்

ஏற்றம், நம்பிக்கை உண்டாகும் காலகட்டம். வயிறு தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. குறை ரத்த அழுத்தம், அனிமிக், ஹிமோகுளோபின் விஷயங்களைப் பார்த்துக் கொள்வது நல்லது. தொட்டது துலங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். அடுத்தடுத்து உயர்ந்து செல்லக்கூடிய பிராப்தம் உண்டாகும். சமுதாயத்திலும் குடும்பத்திலும் உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அற்புதமான அமைப்பு ஏற்படும்.

குட் நியூஸ் நிச்சயம்

புதிய பொறுப்புகள் உண்டாகும். எதிர்பார்க்காத அளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். விரையம் அதிகமாக இருக்கும். எனவே, புதன்கிழமை தோறும் மதியம் ஏழைகளுக்கு எலுமிச்சை சாதம் தானமாக கொடுப்பது நல்லது. விலையுயர்ந்த பொருள்களை கையாளும் கடகம் கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு

நரசிம்மர் வழிபாட்டை கடைப்பிடிப்பது நல்லது. நம்பிக்கை தைரியம் உண்டாகும். மன அழுத்தம் தீரும். எல்லா விஷயத்திலும் மகிழ்ச்சி உண்டாகும். தொடர்ச்சியாக இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் தீரும். ஏற்றத்தின் அளவு பன்மடங்கு உயரும். திடீர் நம்பிக்கை, பெரிய அளவு ஆச்சரியத்தை தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் அமைப்பு உண்டாகும்.

மதிப்பு, மரியாதை

கேது 2இல் ராகு 8 இல் வருவதால் கோளார் பதிகத்தை சொல்லிக் கொண்டே இருப்பது நல்லது. ஆச்சரியத்தக்க அளவு முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்த பாரம் குறையும், தொடர்ச்சியாக ஏற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றியைக் காண்பீர்கள். வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

வாக்கு கொடுப்பதை தவிர்க்கவும்

அரசுத் துறை, அரசியல்வாதிகள் அனுகூலத்தைப் பெறுவார்கள். அடுத்தடுத்து நன்மைகள் உண்டாகும் காலகட்டம். அதுவே ஆத்மரீதியாக நம்பிக்கையை ஏற்படுத்தும். பண வரவு அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். சுப விரையங்கள் உண்டாகும். அது உங்களுக்கு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும், வாக்கு கொடுப்பது, உத்தரவாதம் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நன்மை பயக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+