துலாம், விருச்சிகத்துக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. தொட்டதெல்லாம் இனி வெற்றி.. அதிர்ஷ்டம் நிறையும்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 21 முதல் 27 ஆம் தேதி வரை எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் துலாம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-thulam-viruchigam-libra-scorpio-people-will-get-in-apri

துலாம்

யோக பலத்தை அதிகம் பெறும் ராசியினர் துலாம் ராசிக்காரர்கள். யோக பலம் அதிகளவில் உண்டாகும். துணையிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. சந்தோஷமாக பயணம் செய்யக்கூடிய காலகட்டம். ஏற்றம் பெறுவீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து அனுகூலம் காணப்படும்.

குடும்பத்தில் அந்நியர் தலையீடு

மகலாட்சுமி வழிபாடு அனுகூலமான பலன்களைத் தரும். மகாலட்சுமி காயத்ரி கேட்பது நன்மையைத் தரும். கடும்பத்தில் அந்நியர் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. அதேபோல, நீங்களும் மற்றவர்களின் குடும்ப விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும். பதற்றத்தை தவிர்ப்பது நல்லது. பல்வேறு பாதிப்புகளால் கஷ்டப்பட்டு வந்த உங்களுக்கு திடீரென நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும்.

தெய்வ வழிபாடு

காளி, வாராஹி, மகாலட்சுமி, சூளினி வழிபாடு செய்வது நல்லது. எட்டு தாமரை கொடுத்து அர்ச்சனை செய்வது நல்லது. அடுத்தடுத்து முன்னேற்றங்கள், திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். மகான்கள், சித்தர்கள், தாயின் ஆசிர்வாதம் உண்டாகும். அபரிமிதமான வளர்ச்சியைக் காண்பீர்கள். நல்ல அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளுடன் கோபத்தை தவிர்ப்பது நல்லது.

தைரியம், நம்பிக்கை

படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். அபிராமி அந்தாதி கேட்பது, சொல்வது நல்லது. ஞான மார்க்கம், தெய்வ மார்க்கம் உண்டாகும். விடுபட்ட தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தை விட்டு பயணத்தை மேற்கொள்வீர்கள். அந்தப் பயணம் அபரிமிதமான சந்தோஷம், அற்புதமான அமைப்பையும் ஏற்படுத்தும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். தைரியத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி தரும். வார்த்தைகளில் மட்டும் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாருக்கும் அறிவுரை கொடுக்காமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு பெருமாள் வழிபாடு, திருப்பதி சென்று வழிபடுவது சந்தோஷத்தை தரும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்குச் சென்று தாமரை, துளசியை கொடுத்து வழிபடுவது நல்லது. அசிடிட்டி, குறை ரத்த அழுத்தம் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரம், படிப்பில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சித்திரை மாதத்தில் நல்ல பலன்கள் உண்டாகும்.

வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது

அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும். எந்தவொரு பரிகாரமும் தேவையில்லை. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் சென்று வரும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் தேவையில்லாத சண்டைகளில் ஈடுபடுவீர்கள். வண்டி வாகன மாற்றம் அனுகூலத்தை தரும். தாய் வழி தந்தை வழி உறவுகளில் வாக்குவாதம் இல்லாமல் இருப்பது நல்லது. அதில் மட்டும் கவனமாக இருந்தால் மகிழ்ச்சி உண்டாகும்.

முன்னேற்றம்

எதிர்பார்க்காத நன்மைகள் அதிக அளவில் கிடைக்கும். பூமி, வியாபாரம், தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதீத நன்மை உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஆனந்தத்தை உண்டாக்கும். தொழில் ரீதியாக நிம்மதி, சந்தோஷம், ஏற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

பண வரவு அதிகரிக்கும்

பண வரவு உண்டாகும். யோகமான கால கட்டமாக இருக்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. வாக்குவாதம், பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்டமும், அனுகூலமும் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+