விருச்சிக ராசிக்கு நல்ல நேரம் ஸ்டார்ட்.. திடீர் அதிர்ஷ்டம் நிச்சயம்.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்
வார ராசி பலன்: அம்மனுக்குரிய ஆடி மாதம் தொடங்கியுள்ளது. இந்த வாரம் ஆடி 5 முதல் 11 ஆம் தேதி வரையிலான (ஜூலை 21 முதல் 27 வரை) விருச்சிக ராசிக்கு இந்த வாரத்திற்கான பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
அம்மனுக்கு விசேஷமான மாதமான ஆடி மாதம் பிறந்துள்ளது. நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் மட்டும் மிக கவனமாக இருப்பது நல்லது. பெற்றோர் மற்றும் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கால், மூட்டுவலி, ஜாயின்ட் பெயின், நகங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எடுத்த காரியங்களில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். பெரிய பாதிப்புகளைக் கொடுக்காது.
வேலை ஆரம்பித்தல்
எந்தவொரு காரியத்தைச் செய்தாலும் காரியசித்தி மாலை மந்திரத்தை தினமும் கேட்டுவிட்டு, பிள்ளையார்பட்டி விநாயகரின் படத்தை வைத்து கும்பிட்டு வேலைகளை ஆரம்பிப்பது ஏற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்த தேக்க நிலைகள் சரியாகும். மன அழுத்தம் நீங்க குடும்ப மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றுக் கொள்வது நல்லது.
தொழில்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பெற்றோர் பெரியோரிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். பொறுமையுடன் இருப்பது நல்லது. அனைத்துவிதமான யோக பலன்களும் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
திடீர் அதிர்ஷ்டம்
எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்தி, திடீர் அதிர்ஷ்டம், ஏற்றம், நம்பிக்கை கண்டிப்பாக ஏற்படும். தொழில் சார்ந்த விஷயங்களில் பெரிய அனுகூலமும், மகிழ்ச்சியும் ஏற்படும். திட்டமிட்டு செய்யக்கூடிய அனைத்து காரியங்களிலும் ஏற்றம் பெறுவீர்கள். செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபடுவது நன்மைகளைத் தரும். அன்னதானங்களுக்குப் பொருள்கள் வாங்கிக் கொடுப்பது நல்லது.












Click it and Unblock the Notifications