Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை

Subscribe to Oneindia Tamil

Weekly Rasi Palan: ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

weekly-rasi-palan-what-kind-of-benefits-will-get-kadagam-rasi-people-from-june-8-to-14th

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் கடக வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.

அந்த வகையில், ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கடகம் ராசி பலன்

கடக ராசியினருக்கு அற்புதமான வாரமாக இந்த வாரம் அமையும். புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். தொடர்ச்சியாக இருந்து வந்த சங்கடங்கள் தீரும். இதுவரை இருந்து வந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். தொழில் முறையில் ஏற்றம் ஏற்படும். பண வரவு உண்டாகும். புதிய தொழில் அமைப்புகள் உள்ளது. புதிய வியாபாரங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அனுகூலம்

பிள்ளைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் முன்னேற்றமும், சந்தோஷமும் உண்டாகும் காலகட்டம். உறவுகள் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காணப்படும். புதன்கிழமை மதியம்தோறும் உணவு தானமளிப்பது விரயத்தில் இருந்து காப்பாற்றும். மன அழுத்தம் குறையும். தெய்வ பலத்தை பெறக்கூடிய மைப்பு உள்ளது. ராகவேந்திரர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

ஆரோக்கியம்

அடிவயிறு, கழிவுப் பாதை, முதுகு தண்டுவடம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஓராண்டுக்கு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 2 ஆம் இடத்தில் கேது இருப்பதால் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். பேசும்போது மற்றவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் பேசுவது நல்லது. பேச்சில் இனிமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மன அழுத்தம் கொள்ளாமல் இருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் உங்கள் செல்வாக்குகள் கூடும்.

சிக்கல் தீரும்

இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும் யோகம் உண்டு. பெற்றோரின் நீண்டநாள் கனவுகள் நிறைவேறும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். பிரச்சனைகளில் இருந்து விடுவட்டு முன்னேற்றம் அடைவீர்கள். மண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குரு, சுக்கிரன் சேருவதால் சிறப்பான பலன்கள், பொருளாதாரத்தில் ஏற்றத்தைத் தரும்.

வழிபாடு

எல்லா விஷயங்களும் சிறந்து விளங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கிரக அமைப்புகள் அற்புதமாக இருக்கிறது. குடும்பம் ஒன்றுசேரக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். பணத்தை வெளியில் கொடுத்து ஏமாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கால் முட்டி,சகோதரியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷம் ரீதியாக 90 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதமும் நன்மைகள் ஏற்படும். மாசாணியம்மன் வழிபாடு சகலவித நன்மைகளைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+