Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம்
Weekly Rasi Palan: ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் பிறந்துள்ளது. வைகாசி மாதம் என்றாலே சிறப்பான மாதமாகும். முருகர் அவதரித்த மாதம். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரத்தை தொடங்குகிறார். 12 ஆம் இடத்தில் சனி தன் இருப்பை நிலை நிறுத்தியிருக்கிறார். செவ்வாய் ரிஷப வீட்டில் ஆட்சியாகி இருக்கிறார். சுக்கிரன் மீன வீட்டில் இருக்கிறார். சூரியன் ரிஷப வீட்டில் இருந்து இந்த மாதத்தில் தனது சஞ்சாரத்தை தொடங்குவதே வைகாசி மாதமாகும். ஜூன் 2 ஆம் தேதி எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது.
அந்த வகையில், ஜூன் 8 முதல் 14 ஆம் தேதி (வைகாசி 25 முதல் 31 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசியினருக்கு மன அழுத்தம் இருக்கும் காலகட்டம். சூரியன் இந்த வாரத்துடன் மாறப்போவதால் நிலைமை கண்டிப்பாக மாறும். அதுவரை பொறுமை காப்பது அவசியம். ஜூன் 14 ஆம் தேதி வரை தேவையில்லாத மன அழுத்தம், தேவையில்லாத பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. அனுமனை வழிபாடு செய்வது, அனுமன் சாலிஷா கேட்பது உங்களுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தித் தரும்.
சங்கடம் ஏற்படும்
உத்தியோகம், தொழில், வியாபாரம் என அனைத்து விஷயங்களிலும் ஏதாவதொரு சங்கடங்கள் காணப்படும். மேலதிகாரிகள் விஷயத்தில் பதட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இழுபறியாக இருந்த சிக்கல்கல் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்படும். தனிப்பட்ட செல்வாக்குகள் கூடும். வெளியிடம், உத்தியோகம், வியாபாரம், குடும்பம், தொழில் என அனைத்து விஷயத்திலும் பதட்டப்படாமல் இருப்பது நல்லது.
நிதானம் அவசியம்
எல்லா விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. நரம்பு, கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. ரத்த அழுத்தம் அதிகமாவது, தூக்கமின்மை ஏற்படுவது போன்ற விஷயங்களில் கவனம் தேவை. ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்
பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். செலவுகள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது ஏற்றத்தை ஏற்படுத்தும். செவ்வாய்க்கிழமை தோறும் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது முன்னேற்றத்தைத் தரும். விலையுயர்ந்த பொருள்கள் காணாமல் போவது, நஷ்டமாகும் நிலைமைகள் மாறும்
-
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
Meenam: மீன ராசியினரே கவனம்!.. ஜூன் மாதத்தில் வரப்போகும் சோதனைகள் என்ன? -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications