குரு சூரியனின் இணைவால் கும்பத்துக்கு சிவராஜ யோகம்.. வீடு நிலம் இடம் பணம் சும்மா கெத்தா வாழப்போறீங்க
மாத பலன்: ஜூன் மாதம் நிறைவடைந்து ஜூலை மாதம் தொடங்கவுள்ளது. இந்த ஜூலை மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகப் பெயர்ச்சிகளானது ஒவ்வொரு ராசியிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் ரிஷப ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் குருவும், சூரியனும் இணைந்திருக்கின்றனர். கடகத்தில் புதனும், சிம்மத்தில் கேதுவும், செவ்வாயும் உள்ளனர்.

கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும், மாதத் தொடக்கத்தில் சிம்ம ராசியில் சந்திர பகவானும் உள்ளனர். இந்த மாதத்தின் 17 ஆம் தேதி சூரியன் கடக ராசிக்கு வருகிறார். கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் மிதுன ராசிக்குச் செல்கிறார். 26 ஆம் தேதி சுக்கிர பகவான் மிதுன ராசிக்கும், 29 ஆம் தேதி சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் துலாம் ராசிக்குள் வருகிறார்.
அந்த வகையில், இந்த ஜூலை மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், தெய்வ வழிபாடுகள், பரிகாரங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிநாதனாகிய சனி பகவான் 2 ஆம் இடமான குடும்பம், தனம், வாக்கு ஸ்தானத்தில் இருக்கிறார். ராசியிலேயே ராகு பகவான் தற்போது இருக்கிறார். செவ்வாயும் உங்கள் ராசியை பார்க்கிறார். ராகுவும், செவ்வாயும் இணைந்திருக்கும்போது கோபம், ஆக்ரோஷம் இயல்பாகவே அதிகமாக காணப்படும் என்பதால் நிதானமாக இருப்பது நல்லது. குருவின் பார்வை ராசியின் மேல் விழுவதால் கோபத்தைக் குறைத்து சமப்படுத்தும்.
நிதானம் அவசியம்
புதிய விஷயங்களைச் செய்யும்போது யோசித்து, நிதானமாக செயல்படுத்துவது நல்லது. 2 ஆம் அதிபதியான குரு பகவான் 5 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ராசியாதிபதியும் அதே தன ஸ்தானத்தில் இருப்பதால் தன வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். நல்ல சிந்தனை சக்தி உருவாகும். மறைந்துள்ள விஷயங்களை தேடுவது, அறிவுப்பூர்வமாக சிந்திப்பது, எதை எப்படி செய்ய வேண்டும் என்று சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும்.
சிவராஜ யோகம்
பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. தனக்காரக கிரகமான குரு பகவான் உங்கள் ராசியைப் பார்க்கிறார். ராகு என்பது பிரம்மாண்டம் என்பதால் பிரம்மாண்டமான பண வரவு உங்களுக்கு கிடைக்கும். குருவின் பார்வை லாப ஸ்தானத்தின் மேல் விழுகிறது. குருவும் சூரியனும் இணைவதால் சிவராஜ யோகத்தை ஏற்படுத்துகின்றன. இரு கிரகங்களும் 11 ஆம் இடத்தைப் பார்ப்பது உங்களுக்கு அற்புதமான தன லாபத்தை ஏற்படுத்தும்.
ராஜயோகம்
உங்களுக்கு ராஜயோகத்தை தரும் சுக்கிரன் கெடாமல் இருக்க வேண்டும். அந்த சுக்கிரன் உங்களுக்கு ஆட்சி பலத்தோடு வலிமையாக இந்த மாதத்தில் இருப்பதால் நினைத்த காரியங்கள் ஜெயமாகும். பாக்கியங்கள் கிடைக்கும். தாய்க்கும், உங்களுக்குமான உறவு நன்றாக இருக்கும். தாயின் சொத்துகள் சார்ந்த விஷயத்தில் நன்மை ஏற்படும். தாய், தாய் வர்க்கம் ரீதியாக நல்ல பலன்கள் கிடைக்கும்.
வீடு, நிலம் வாங்கும் யோகம்
சுக்கிரன் வீட்டுக்கு காரக கிரகம் என்பதால் வீடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு வெற்றியைத் தரும். வீடு வாங்குவது, புனரமைப்பது, இடம், நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் நல்லவை நடக்கும். புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். பயணங்களை மேற்கொள்வீர்கள். நிலையாக இருக்கும் சில தொழில்களை நிர்வகிப்பீர்கள். அழகு சம்பந்தப்பட்ட பொருள்கள் தயாரிப்பது, டிபார்ட்மெண்ட் ஸ்டோர், கலைத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள், வாய்ப்புகள் கிடைக்கும்.
அனுகூலம்
மனதில் இருந்து வந்த குழப்ப நிலை நீங்கி தெளிவு பெறுவீர்கள். குலதெய்வத்தை வழிபடுவது நினைத்த காரியங்களை ஜெயப்படுத்திக் கொடுக்கும். குரு 5 ஆம் இடத்தில் வந்து அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை நலன்கள், குழந்தை சார்ந்த விஷயங்களில் அனுகூலம், அவர்களுடைய மேம்பாட்டுக்காக செய்யக்கூடிய விஷயங்கள் தடைகளில்லாமல் அருமையாக நடக்கும்.
திருமணம்
திருமணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த தடைகள், பிரச்சனைகள், கணவன் மனைவிக்குள் பிரச்சனை, பிரிந்து வாழும் தன்மை போன்ற அனைத்தும் மாறக்கூடிய காலகட்டமாக இருக்கும். 7 ஆம் இடத்தில் செவ்வாய், கேது இருப்பதால் கோபத்தை மட்டும் விட்டு விடுவது நல்லது. 9 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் நல்ல பாக்கியங்கள் கிடைக்கும்.
பாக்கியம்
தகப்பனால் பாக்கியம், அவருடைய தொழிலை எடுத்துச் செய்வீர்கள். வெளிநாடு, வெளிமாநிலம் செல்லும் யோகம் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள். செவ்வாய் தற்போது 7 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளதால் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். தொழிலை பெருக்குவீர்கள். கடந்த இரண்டு வருடங்களாக தொழில், வியாபாரத்தில் தொல்லைகளை அனுபவித்து வந்தவர்களுக்கு விடிவு காலமாகவும், லாபத்தை குவிக்கும் காலகட்டமாகவும் இருக்கும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். செட்டிலாகும் யோகம் உண்டு. துர்க்கை அம்மன், முருகன் வழிபாடு உங்களுக்கு அனைத்து விதத்திலும் ஏற்றத்தை தரும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
ராஜயோகம் பெறும் கடக ராசி.. ஜூன் மாதத்தில் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications