கும்பத்துக்கு குதூகலமான காலகட்டம்.. அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் சனி, குரு.. சொத்துகளை குவிக்கப் போறீங்க
சனி வக்ர பெயர்ச்சி பலன்: ஜூலை 13 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சனி வக்ர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
சனி பகவான் தற்போது மீன மனையில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். வரும் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தால் இனிமேல் நல்ல பலன்களை உங்களுக்கு கொடுப்பார்.

ஜூலை 13 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையிலான 83 நாட்கள் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அதேபோல, அக்டோபர் 4 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணிக்கிறார். அந்த வகையில், இந்த சனி வக்ர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்ப ராசி பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு லக்கினாதிபதி, ராசியாதிபதி, விரையாதிபதியாக சனி இருக்கிறார். தற்போது குடும்பம், வாக்கு, தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தற்போது வக்கிர நிலையில் சனி பகவான் பயணிக்கிறார். கடந்த இரண்டரை வருடங்களாக சனி பகவானின் ஏழரை சனியில் ஜென்ம சனியாக இருந்து கொண்டு பலவிதமான மனஅழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
பிரச்சனைகள் தீரும்
தற்போது பாத சனியாக குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். குடும்பத்தில் மனதளவில் சில பிரச்சனைகளை சந்தித்து வந்து கொண்டிருப்பீர்கள். இந்த வக்கிர காலத்தில் அந்தப் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கூடிய காலகட்டமாக இருக்கும். சனி என்பது மந்தன். இதுவரை செயல்படுத்த முடியாமல் இருந்து விஷயங்களை எடுத்துச் செய்வீர்கள். இனி சுறுசுறுப்பாக மாறுவீர்கள். வக்கிரம் என்பது இயல்புக்கு மாறிய நிலை. மந்தமாக இருந்த விஷயங்கள் இனி வேகமெடுக்கும்.
மனதில் தெளிவு
முடிவுகளை எடுப்பதில், மனதில் தெளிவு உண்டாகும். எதைச் செய்ய வேண்டும் என சிந்தித்து செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனை, கருத்து வேறுபாடுகள் போன்றவை தீரக்கூடிய காலகட்டமாக இருக்கும். பிரிந்திருக்கும் கணவன் மனைவிகள் மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பு வரும். தனத்தில், பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பணம் மீண்டும் திரும்பி வரும் சந்தர்ப்பம், சூழல் உருவாகும்.
விடுதலை
வாக்கால் பிரச்சனை, ஜாமீன் கையெழுத்து போட்டு சிக்கிக் கொண்டிருந்தவர்கள் அதிலிருந்து விடுதலை பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். தொட்டதெல்லாம் விரையமாகிக் கொண்டிருந்த காலகட்டம் இனி மாறும். சேமிப்புகளை செய்யக்கூடிய காலகட்டமாக இந்த வக்கிர காலம் அமையும். திடீர் பண வரவு உண்டாகும். சிக்கிக் கொண்டிருந்த பணம் திரும்பி வரும்.
சொந்த வீடு யோகம்
சனி வக்கிரமடைந்து சுக ஸ்தானத்தை பார்ப்பதால் சுகத்தில் சிறு குறை, ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தாயால் பிரச்சனை, தாயுடன் கருத்து வேறுபாடு, தாயின் விஷயத்தில் இருந்து வந்த பாதிப்புகள், தொந்தரவுகள் அனைத்தும் சரிசெய்யக் கூடிய காலகட்டம் அமையும். வீடு வாங்குவதில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி, வீடு வாங்குவீர்கள். வீடு விஷயத்தில் இருந்த குழப்பம், சோம்பல் தன்மை, தடை நீங்கி வீடு வாங்குவது, நிலம் வாங்குவது, பழைய வாகனத்தை கொடுத்து புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
பண வரவு அதிகரிக்கும்
சனி 2 ஆம் வீட்டில் இருந்து 8 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பணம் சார்ந்த விஷயங்களால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். பண வரவு உண்டாகும். வழக்குகளில் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நோயில் இருந்து விடுதலை கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரும். வெளிநாட்டு முயற்சிகள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.
வெளிநாட்டில் பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். நல்ல பாக்கியங்கள் கிடைக்கும் அமைப்பு உள்ளது. நல்ல நேரம் ஆரம்பாகிவிட்டது. நீங்கள் நினைத்த காரியங்கள் நடக்கும். குழந்தை பாக்கியத்திற்கான யோகம் உண்டாகும். பெரிய லாபம் வரவில்லை என்பவர்களுக்கு இனி லாபங்கள் கிடைக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு அடிக்கும் லாக் ஜாக்பாட்.. எல்லா யோகமும் உங்களுக்கு தான் -
தமிழ் புத்தாண்டு பலன்: சிம்ம ராசியை ஆட்டிப் படைக்கும் அஷ்டமசனி.. அதிர்ஷ்டமும் காத்திருக்கு -
Mesham: மேஷம் ராசிக்கு புத்தாண்டில் வரப்போகும் அற்புதமான மாற்றங்கள்.. இதை மட்டும் கடைப்பிடிங்க -
தமிழ் புத்தாண்டு பலன்: மிதுன ராசிக்கு தொழில், பணத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. பேச்சில் தான் பிரச்சனையே -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications