நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரை மிதுனம், கடக ராசியினருக்கு பலன்கள்.. அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா?
நவம்பர் மாத பலன்: அக்டோபர் மாதம் நிறைவடைந்து நவம்பர் மாதம் பிறக்கவுள்ளது. நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான மாதத்தின் முதல் பாதி மிதுனம் மற்றும் கடகம் ராசியினருக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்காலம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றமானது 12 ராாசிக்காரர்களுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மிதுனம், கடகம் ராசியினருக்கு நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கிடைக்கும் பலன் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வயிறு மற்றும் கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் தேவையில்லாத மன வருத்தத்தை ஏற்படுத்தினாலும் வெற்றிகள் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். இடமாற்றம், தொழில் மாற்றம் வந்தால் அதனைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் மாற்றம், படிப்பில் மாற்றம் என அடுத்தடுத்து நல்ல மாற்றங்களைப் பெறுவீர்கள்.
தடைகள் நீங்கும்
சுப காரித்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். மன வருத்தங்கள் எல்லாம் தீரும். பழைய எதிரிகள் விஷயத்தில் இருந்த பாதிப்புகள் நிவர்த்தியாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நிம்மதியான தூக்கம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் சிறு சிறு விரையங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், அவற்றை சுப விரையமாக மாற்றிக் கொள்வது நல்லது.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வாராஹியை வழிபாடு செய்வது விசேஷ பலன்களையும், அனுகூலத்தையும் அள்ளித் தரும். வாராஹி காயத்ரி, வாராஹி மந்திரங்களைக் கேட்பது ஜெயத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் ஏற்றத்தைப் பெறுவீர்கள். ரத்த பந்த உறவுகள் மேன்மை அடையும். ரத்தத்தில் ஏற்படும் தொற்று நோய்கள், கொசுக்களால் ஏற்படும் நோய்களில் சிக்கும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. திடீரென தாய் வழி உறவு, சொத்துப் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
அனுகூலம்
பிள்ளைகளுக்கும், உங்களுக்கும் இருந்து வந்த மனத் தாங்கல்கள் நீங்கும். பிள்ளைகளின் திருமணம், படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். சுப காரியத் தடைகள் நீங்கும். திருமண பந்தத்தில் பிரச்சனையாகி பிரிந்திருந்த கணவன், மனைவி மீண்டும் ஒன்று சேரும் ஆச்சரியமான காலகட்டம். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
விட்டுக் கொடுப்பது நல்லது
சில விஷயங்களில் குடும்பத்தில் விட்டுச் செல்வது நல்லது. விட்டுக் கொடுப்பது பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும். அரசியல், தனிப்பட்ட துறையில் பதவி உயர்வு வரவில்லை என்று காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு டிசம்பருக்குப் பிறகு கட்டாயம் உங்களை வந்து சேரும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உங்களுக்கு மிகவும் சாதகமான காலகட்டமாக இருக்கும். தெய்வ வழிபாடுகளில் உங்களுக்கு துர்க்கை வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வயிறு, முதுகுத் தண்டுவடம் தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருப்பது நல்லது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications