தங்க மோதிரத்தை எந்த விரலில் அணிய வேண்டும்.. தங்க நகை அணிவதால் இத்தனை நன்மைகளா?

Subscribe to Oneindia Tamil

Gold Secrets: உலகில் உள்ள அனைத்து மக்களாலும் விரும்பக்கூடிய தங்க நகைகளை அணிவதால் ஏற்படும் நன்மைகள், தங்க நகைகளை யார் யார் பயன்படுத்த வேண்டும், யார் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தங்கம் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கூட பிடித்த ஆபரணங்களாக தங்க நகைகள் உள்ளன. தங்கத்தை சிலர் அழகுக்காகவும், ஆடம்பரத்துக்காகவும், அதிர்ஷ்டத்துக்காகவும் அணிகின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் தங்க நகைகள் மக்களால் விரும்பப்படுகின்றன. பொதுவாக தங்கத்திற்கு ஆன்மீக சக்திகளை ஈர்க்கும் தன்மை உள்ளதோடு, தீய சக்திகளையும் அண்டவிடாது என்பதால் பெரும்பாலானோர் தங்க நகைகளை விரும்புகின்றனர்.

which-finger-should-you-wear-a-gold-ring-on-are-there-so-many-benefits-to-wearing-gold-jewelry

மகாலட்சுமியின் அம்சம்

இந்துக்களைப் பொருத்தவரை தங்கம் என்பது மகாலட்சுமியின் அம்சம் என்று கருதப்படுகிறது. அதனால் தான் மங்கள நிகழ்வுகள் அனைத்திலும் தங்கம் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. எல்லா மக்களாலும் விரும்பப்படும் ஆபரணமாக தங்கம் இருந்தாலும், தங்க நகை எல்லோருக்கும் பொருந்துமா என்றால் இல்லை. பெரும்பாலானோருக்கு தங்க நகைகள் அதிர்ஷ்டத்தை தந்தாலும், ஒரு சிலருக்கு தங்கத்தை அணிவதால் பிரச்சனைகள் மட்டுமே ஏற்படும்.

மவுசு குறையாத தங்கம்

எவ்வளவு விலை உயர்ந்த கற்கள், உலோகங்கள் வந்தாலும் இன்று வரை தங்கத்திற்கான மவுசு என்பது குறையவில்லை. இந்தியர்களைப் பொருத்தவரை தங்கம் என்பது மிகப்பெரிய முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. தங்கத்துடன் பலவிதமான ராசிக் கற்களைப் பயன்படுத்தும் பழக்கம் எல்லா மதத்தினரிடமும் உள்ளது. அமைதி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம், ஆன்மீக அமைதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் பயன்படுத்துகின்றனர்.

அந்த வகையில், தங்கத்தை எப்படி பயன்படுத்த வேண்டும், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தங்கம் அணிவதால் ஏற்படும் பலன்

தங்க மோதிரத்தை மோதிர விரலில் அணிவதால் ஆன்மீக சக்திகளை ஈர்க்க முடியும். அமைதி, உற்சாகம், மகிழ்ச்சி, தன்னம்பிக்கை அதிகரிக்கும். தீய சக்திகளால் ஏற்படும் தடைகள் விலகும்.

ஆன்மீக பலத்தைப் பெற பெண்கள் இடது கை மோதிர விரலிலும், ஆண்கள் வலது கை மோதிர விரலிலும் அணிவது நன்மைத் தரும்.

தங்கம் அனைத்து கிரகங்களுடனும் தொடர்பு கொண்டிருந்தாலும், குறிப்பாக சுக்கிரனுடன் தொடர்புடையது. எனவே, சுக்கிர தோஷம் உள்ளவர்கள், சுக்கிர பலம் குறைந்தவர்கள் தங்கத்தைப் பயன்படுத்துவது நல்லது.

தங்கம் ஒருவருக்கு ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அவர் துரதிர்ஷ்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக அர்த்தம்.

தங்கம் அதிர்ஷ்டத்தையும், செல்வ பலத்தையும் ஈர்க்க கூடியதாக இருக்கும்.

எந்த விரலில் அணிய வேண்டும்

சளி, இருமல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் தங்கத்தை சுண்டு விரலில் அணிவதன் மூலமாக குணமாகும்.

பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை தொடர்பான பிரச்சனைகளை சந்தித்தால் தங்க மோதிரத்தை நடுவிரலில் அணிவது நன்மை பயக்கும்.

கவனச் சிதறல், மனதில் அமைதியில்லாத நிலை இருந்தால் தங்கத்தை ஆட்காட்டி விரலில் அணிவது அற்புதத்தை ஏற்படுத்தும்.

திருமணத்தில் பிரச்சனை இருந்தாலும், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் நெருங்கிய உறவு ஏற்படவில்லை என்றால் கழுத்தில் செயினாகவோ, ஏதாவதொரு வகையிலோ தங்கத்தை அணிவது நல்லது.

குழந்தை பிறப்பில் பிரச்சனை உள்ளவர்கள் மோதிர விரலில் தங்கத்தை அணியலாம்.

தங்கத்தை லாக்கரில் வைப்பதாக இருந்தால் சிவப்பு நிற துணியிலோ, காகிதத்திலோ சுற்றி வைக்க வேண்டும்.

கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் தங்கத்தை வைப்பது நல்லது. இதன் மூலம் தங்கம் மென்மேலும் பெருக்கமடையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+