இவி வாகனங்கள் வாங்க ஆசையாக இருந்தவர்களுக்கு.. பெரிய ஷாக்.. நிலைகுலைய போகிறார்கள்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, எதிர்வரும் நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் (EV) விலைகள் பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாகிவிடும் என்று அறிவித்து உள்ளார்.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பேசிய நிதின் கட்கரி, நாம் கச்சா எண்ணெயை நம்பி நீண்ட காலம் இருக்க முடியாது. அடுத்த 4-6 மாதங்களுக்குள், மின்சார வாகனங்களின் விலை பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு இணையாக இருக்கும். எரிபொருள் இறக்குமதிக்கு ஆண்டுக்கு ₹22 லட்சம் கோடி செலவிடப்படுவதால், நாட்டின் முன்னேற்றத்திற்கு தூய்மையான எரிசக்தி அவசியம்.

automobile tamil nadu license

அடுத்த ஐந்து ஆண்டுகளில், உலக அளவில் இந்தியாவின் வாகனத் துறையை முதலிடத்திற்குக் கொண்டு வருவதே எங்கள் இலக்கு. நான் போக்குவரத்து அமைச்சராகப் பொறுப்பேற்றபோது இந்திய வாகனத் துறையின் மதிப்பு ₹14 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது அது ₹22 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

தற்போது, அமெரிக்காவின் வாகனத் துறையின் மதிப்பு ₹78 லட்சம் கோடி, சீனா ₹47 லட்சம் கோடி, இந்தியா ₹22 லட்சம் கோடியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. சோளத்திலிருந்து எத்தனால் உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகள் கூடுதலாக ₹45,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

2027-க்குள் நாட்டில் உள்ள அனைத்து பிரிக்கப்பட்ட திடக்கழிவுகளையும் சாலை கட்டுமானத்தில் பயன்படுத்த ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் கழிவுகளில் இருந்து மதிப்பை உருவாக்குகிறோம், என்று தெரிவித்து உள்ளார்.

உலகம் முழுக்க மக்கள் இடையே EV கார், பைக் வாங்கும் மோகம் அதிகரித்து வருகிறது. இந்த மோகத்திற்கு பின்னணியில், மார்க்கெட் மாறியதே காரணம். உலகம் முழுக்க வெப்பமயமாக்கலுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. இதன் காரணமாக உலகின் பல நாடுகள் இவி வாகனங்களை வாங்க ஊக்குவிக்கின்றன.

இந்தியாவிலும் கூட கடந்த வருடம் வரை இவி வாகனங்களை வாங்க வரி விலக்கு, சலுகைகள், நிதி உதவிகள் கூட வழங்கப்பட்டு வந்தன. இது போக காற்று மாசை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐநா பல நாடுகளுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதற்கு இவி வாகனங்கள் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் போக மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் காலியாக தொடங்கி உள்ளது. உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம் அடைந்து உள்ளது. ரஷ்யாவின் எண்ணெய்யை உலக நாடுகள் பல வாங்குவது இல்லை. இப்படி பல காரணங்களால் இவி வாகனங்கள் அதிகம் விற்கப்படுகிறது.

இந்தியாவில் மாற்றம்

ஆனால் இந்தியாவில் இவி வாகனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இவி வாகனங்களுக்கு நிறைய வரி சலுகைகள் கொடுக்கப்பட்டன. இது போன்ற சலுகைகள் வேகமாக குறைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மின்சார வாகனங்களின் (EV) விலை பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு சமமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வாகன ஸ்கிராப்பிங் கொள்கை மாற்றப்பட உள்ளது. வாகனங்கள் வெளியேற்றும் மாசுபாட்டின் அடிப்படையில் வாகனங்களை அகற்றுவதற்கான கொள்கையை அரசாங்கம் உருவாக்கி வருகிறது.

நாடு முழுக்க தற்போது 15 வருட பழைய வாகனங்களை அகற்ற கொள்கை உள்ளது. இதை தீவிரமாக கடைபிடிக்கவில்லை என்றாலும்.. 15 வருட பழைய வாகனங்களுக்கு எப்சி கிடைக்காது. இந்த நிலையில்தான் வாகனங்கள் வெளியேற்றும் மாசுபாட்டின் அடிப்படையில் வாகனங்களை அகற்றுவதற்கான கொள்கையை அரசாங்கம் உருவாக்கி வருகிறது. இதனால் வரும் காலங்களில் ஆட்டோமொபைல் மார்க்கெட் பெரிய அளவில் மாற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+