ஒருமுறை ரோடு போட்டா போதும்.. பள்ளமே வராது! தானாக குணமாகும் புது டெக்னாலஜி! அரசின் செம பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நாட்டில் சாலைப் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய புதுமையான தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகிறது.

இந்தியாவில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு முக்கிய பங்களிப்பான பள்ளங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் திறன் கொண்ட சுய-குணப்படுத்தும் திறனை கொண்ட அதாவது self healing எனப்படும் தானாக சரியாகும் திறனை கொண்ட சாலைகளை உருவாக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது.

India to get self healing roads soon in NHAI What does it mean

ஒரு குறிப்பிட்ட வகை asphalt மூலம் இந்த சாலைகள் உருவாக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு asphalt வகையின் சுய-குணப்படுத்தும் பண்புகள் குழி பிரச்சனைக்கு நீண்ட கால தீர்வை வழங்க முடியும். எவ்வாறாயினும், தொழில்நுட்பத்தை பெரிய அளவில் செயல்படுத்துவதற்கு முன், அதன் சாத்தியக்கூறு மற்றும் செயல்திறனை உறுதி செய்ய முழுமையான செலவு-பயன் பகுப்பாய்வு நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த சாலைகள் சேதம் அடைந்தால் தரை சூட்டில் விரிந்து சேதம் அடைந்த பகுதிகளை நிரப்பிக்கொள்ளும். ரப்பர் போல மேலே வாகனங்கள் செல்ல செல்ல சேதம் அடைந்த பகுதிகளை நிரப்பிக்கொள்ளும். இது சாலைகளின் ஆயுளை அதிகரிக்கவும், சாலை பராமரிப்புக்கான தேவையை குறைக்கவும், அதே நேரத்தில் போக்குவரத்து இடையூறுகளைக் குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும் முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த தொழில்நுட்பமானது asphalt உள்ளே சிறிய இரும்பு மற்றும் ரப்பர் அமைப்பை கொண்டது. ஒரு சாலையை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இதை வைத்து போடும் போது.. அது உடையும் போது சூடாகி அதில் ஒரு மின்சாரம் போன்ற ஆற்றல் பாயும். இதன் மூலம் உடைந்த பகுதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். அதாவது சாலை தானாக பழைய நிலைக்கு திரும்பும். இது விரிசல்களை திறம்பட சரிசெய்து, குழிகள் உருவாவதைத் தடுக்கிறது.

சாலைப் பராமரிப்பில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய இந்த புதுமையான தொழில்நுட்பத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நாட்டில் ஆராய்ந்து வருகிறது. விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் என்ன சொன்னார்?: சமீபத்தில் நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவுக்கு மூலதன முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி தேவை என்றால், நாட்டில் நல்ல உள்கட்டமைப்பு இருக்க வேண்டும். மத்திய அரசு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாடு முழு இந்த வருடம் பல புதிய எக்ஸ்பிரஸ் வேக்கள் திறக்கப்பட உள்ளன.

இந்த புதிய எக்ஸ்பிரஸ் வேக்கள் திறக்கப்பட்ட பின் நாட்டின் பொருளாதாரம் மொத்தமாக மாறும். முக்கியமாக நாட்டின் நெடுஞ்சாலை நெட்வொர்க் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவின் சாலை நெட்வொர்க்கிற்கு சமமாக மாறும்.

திறக்கப்படும் துவாரகா சாலை: துவாரகா விரைவுச் சாலையின் 18.7 கிமீ பகுதி இன்னும் இரண்டு வாரங்களில் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ்வேயின் குர்கான் பகுதி முதல் கட்டமாக திறக்கப்பட உள்ளது. எட்டு வழிகள் கொண்ட விரைவு சாலையானது , புதிய செக்டார் பகுதியில் இருந்து NH-8 சாலையை இணைக்கும் வகையிலும், குர்கான் நகரின் பிற பகுதிகளுக்கு பயணத்தை எளிதாக்கும் வகையிலும் திறக்கப்பட உள்ளது.

டெல்லியில் மீதமுள்ள 10 கிலோமீட்டர் எக்ஸ்பிரஸ்வே முடிக்க இன்னும் ஐந்து முதல் ஆறு மாதங்கள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது 1 மணி நேரமாக உள்ள 18.7 கிமீ தூரம் இந்த சாலை திறக்கப்பட்ட பின் 20 - 25 நிமிடம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எட்டு வழிகள் கொண்ட விரைவு சாலையாக இது கட்டப்பட்டு உள்ளது.

விரைவுச் சாலை கட்டுமானம்; விரைவு சாலைகள் : விரைவு சாலைகள் இந்தியாவின் மிக உயர்ந்த சாலைகள் ஆகும். ஜூலை 2023 நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 5,173 கிமீ (3,214 மைல்) அதிவேக நெடுஞ்சாலைகள் அதாவது எக்ஸ்பிரஸ் வே உள்ளன. இவை பெரும்பாலும் 6, வழி அல்லது 8 வழி சாலைகள் ஆகும்.

இங்கே அதிகபட்சம் 120 கிமீ வேகத்தில் கூட செல்ல முடியும். கட்டுமானத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலை இந்தியாவின் மிக நீளமான விரைவுச்சாலையாக இருக்கும். இது 2026 இறுதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+