Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உணர்வுகளின் பிரமாண்டம்.. விஸ்வரூபம் எடுத்த "ஆதித்யன் 2".. நூல் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

முதல் பிரமாண்டம்.. முற்றிலும் பிரமாண்டம் என்பார்கள்.. அதுபோல அமைந்திருக்கிறது எழுத்தாளர் சுசரிதாவின் ஆதித்யன் 2 வது பாகம்.

Recommended Video

    எழுத்தாளர் சுசரிதாவின் ஆதித்யன் 2 வது பாகம்.. நூல் விமர்சனம் | Book Review | Adhityan 2

    தனது பிரமாண்ட எழுத்தால் முதல் பாகத்திலேயே முத்திரை பதித்தவர் எழுத்தாளர் சுசரிதா. ஆதித்யன் என்ற சரித்திரப் புதினத்தின் மூலம் அனைவரின் மூக்கின் மேலும் விரல் வைத்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவர், தனது 2வது பாகத்தில் இன்னும் ஒரு படி மேலே உயர்ந்து விஸ்வரூபம் காட்டியுள்ளார்.

    Adhityan 2 book review

    ஆதியன் முதல் பாகத்தில் காதலும், வீரமும் துள்ளி விளையாடின என்றால் 2வது பாகத்தில் உணர்ச்சிகளை மோத விட்டு வித்தை காட்டியுள்ளார்.

    ஆதித்யன் முதல் பாகத்தைப் படித்தவர்களுக்கு அதன் 2வது பாகமும் திகட்டாத தெள்ளமுதமாக மேலும் சுவைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. (Book Review: மின்னல் மொழி நடை.. புத்தகப் பிரியர்களுக்கு பிரமாண்ட வேட்டை.. ஆதித்யன்!?)

    முதல் பாகத்தில் இன்பயாழினி - ஆதித்யன் இடையிலான சந்திப்பு, காதல், ரகசிய மணம், தாய் பார்த்து நடத்தி வைத்த மனதுக்கு ஒவ்வாத வாள் மணம் என நீண்ட நெடிய சம்பவங்களைத் தொகுத்தளித்திருந்த சுசரிதா, 2வது பாகத்தில் வேறு விதமான சம்பவங்களைக் கோர்த்தெடுத்திருக்கிறார்.

    இன்பாவையும், அவளது நினைவுகளையும் பிரிந்து அரண்மனைக்கு வரும் ஆதித்யன் சந்திக்கும் மன ரீதியான போராட்டங்களே இந்த பாகத்தின் முக்கிய பொருளாக அமைந்துள்ளது. ஆதித்யனை வாள் மணம் புரிந்து மகாராணியாக அரண்மனைக்குள் வரும் வேதவல்லியின் காமப் போராட்டம், மகனின் மனதைப் புரிந்து கொள்ளாமல் தாய் நடத்தும் பாசப் போராட்டம், ஆதித்யனைப் பிரிந்து இன்பா நடத்தும் உணர்வுப் போராட்டம்.. என்று 2வது பாகத்தின் முதல் அத்தியாயம் முதல் கடைசி வரை விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை.

    காதல், காமம், தாய்மை என எல்லாம் கலந்து ஆதித்யனை மட்டுமல்ல படிக்கும் நம்மையும் கூட உணர்வுக் கடலுக்குள் மூழ்கடித்து விடுகிறார் சுசரிதா. வார்த்தை ஜாலங்கள், தமிழ்ப் புலமை, சங்க கால இலக்கியங்களின் மேற்கோள் என்று கை தேர்ந்த எழுத்தாளர்களுக்கு மட்டுமே வசமாகக் கூடிய அத்தனை புலமையையும் கொண்டு பிரமாண்டம் காட்டியுள்ளார் சுசரிதா.

    இந்த 2ம் பாகத்தின் முக்கிய அம்சமே வேதவல்லி குறித்த அத்தியாயங்களும், பின்னர் வரும் போர்க்காட்சிகளும்தான். வேதவல்லியை வைத்து தனியாகவே ஒரு விருந்து படைக்கலாம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு அவளது கேரக்டரை அத்தனை அற்புதமாக வடிவமைத்துள்ளார் சுசரிதா. நிச்சயம் அவரைப் பாராட்டியாக வேண்டும்.

    கணவருடன் உறவு கொள்ள வேதவல்லி மேற்கொள்ளும் தந்திரங்கள், மறுபக்கம் தனது மகனுக்கு வாரிசை உருவாக்க தாய் போடும் திட்டங்கள், பிள்ளையைக் காப்பாற்ற ஒரு தாயாக இன்பா படும் அவஸ்தைகள், மனைவி அருகே இருந்தும் அவளை உணர்ந்தும் கூட முழுமையாக கூட இயலாமல் தவிக்கும் ஆதித்யன், துரோகங்கள், மோதல்கள், சண்டைகள், சவால்கள் என சகலத்தையும் கலந்து ஒரு வரலாற்றுக் காவியத்தை ஜஸ்ட் லைக் தட் கொடுத்து அசத்தியிருக்கிறார் சுசரிதா.

    மொத்தம் 80 அத்தியாயங்கள். முதல் அத்தியாயம் முதல் 80வது அத்தியாயம் வரை களைப்பே இல்லாமல் படிக்க முடியும்.. அது இன்னும் வியப்பைக் கூட்டுகிறது. எங்குமே போரடிக்காமல், ஒரு நதி போல அழகாக வளைந்து, நெளிந்து செல்கிறது இந்த புதினம்.. நிச்சயம் அனைவரும் படித்து ரசிக்க வேண்டிய ஒரு அருமையான நூல்தான் ஆதித்யன் பாகம் 2.

    அமேஜானில் இதைப் படிக்கலாம்.. இணைப்பில் சென்று படியுங்கள்.. இந்த வரலாற்றுக் காவியத்தை நுகர்ந்து இன்புறுங்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+