நடிகை ராதாவின் கோடிக்கணக்கான சொத்து.. ஸ்டார் ஓட்டல் பிசினஸில் டாப்.. தங்க ஸ்பூனில் சாப்பிட்ட மகள்கள்
சென்னை: ஆரம்பக் காலத்தில் நடிகர் விஜய் பல விமர்சனங்களையும், அவமானங்களையும் திரை உலகில் சந்தித்தவர்.. அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரின் முயற்சியும், விஜய்யின் கடின உழைப்பாலேயே இன்று அவர் ஒரு உச்சத்தில் இருக்கிறார், பெரும்பாலும் வாரிசு நடிகர்கள், நடிகைகள் திறமைசாலிகளாகவே இருந்தாலும், அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது" என்று சினிமா விமர்சகர் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
Metro Mail என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த சினிமா விமர்சகர் திண்டுக்கல் வெங்கடேஷ், "ராதா அற்புதமான நடிகை.. கடுமையான உழைப்பாளி, அவர் நடித்த பல படங்கள் அன்றைய காலகட்டத்தில் ஹிட்டடித்தவை..

தொடர்ந்து 10 வருடங்கள் ராதா பிரபலமாகவே இருந்தார்.. ஆனால் உச்சத்தில் இருந்தபோதே திருமணம் செய்து கொண்டார்.. படுபிஸியாக சினிமாவில் நடித்து கொண்டிருந்தபோதே திருமணம் செய்துகொண்டார்.. தொழிலதிபரான ராஜசேகர் நாயர் என்பவரை திருமணம் செய்து, மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.. அம்பிகாவுக்கு முன்பே ராதாவுக்கு திருமணமாகிவிட்டது.
பிசினஸ் சாம்ராஜ்யம்
சினிமா இவருக்கு இப்போது வாழ்வாதாரத்திற்காக தேவைப்படவில்லை.. தற்போது இவரது குடும்பம் கேரளா, லண்டன், சென்னை போன்ற இடங்களில் 5 ஸ்டார் ஓட்டல்கள், கேட்டரிங், காட்டேஜ் உட்பட பல பிசினஸ்களை நடத்தி வருகிறது. இந்த பிசினஸ்களை ராதாவின் பிள்ளைகள் கவனித்து வருகிறார்கள்..
சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இவர்களிடம் பணிபுரிகின்றனர்.. பிசினஸ் விஷயமாக ஒவ்வொரு மாநிலம், நாடுகளுக்கு பறந்து கொண்டேயிருக்கிறார்கள்.
ராதாவின் மகள்கள் சினிமாவில் பெரிதாக சோபிக்கவில்லை. மகள்கள் நடிப்பதில் ராதாவுக்கு ஆரம்பத்தில் உடன்பாடு இல்லை.. ஆனால் மகள்களின் விருப்பம் என்பதால், அவர்கள் நடிக்க சம்மதம் சொன்னார்..
மகள்களின் கால்ஷீட்
ராதாவுக்கு அவரது அம்மாதான் கால்ஷீட், பண விவகாரங்களை கவனித்து வந்தார்.. அதுபோல தன்னுடைய மகள்களுக்கும் ராதா தான் பட விஷயங்களை கவனித்து வந்தார்..
ஆனாலும் கார்த்திகா, துளசி இருவரும் நடித்த தமிழ்ப் படங்கள் ஃபிளாப் ஆகிவிட்டன.. இவர்கள் இருவரும் பிறக்கும்போதே வசதியான வீட்டு பிள்ளைகள் என்பதால் சினிமாவில் நடிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு எழவில்லை.. தங்கத்தட்டில் சாப்பிட்ட கோடீஸ்வரிகள் ராதாவின் மகள் இருவருமே என்பதால் சினிமா இவருக்கு இப்போது வாழ்வாதாரத்திற்காக தேவைப்படவில்லை..
கார்த்திகா, ராதா
கதைக்கு தேவை என்றால் அத்தகைய கவர்ச்சி வேடங்களில் நடிப்பதில் தவறில்லை என்பது ராதாவின் கருத்தாக அன்றே இருந்தது.. அதற்காக வல்கராக ஒருபோதும் நடித்ததில்லை..
'முதல் மரியாதை' படத்தில் பிளவுஸ் அணியாமல் நடித்திருந்தார்.. கார்த்திகா 'அன்னக்கொடி' படத்திலும் அப்படித்தான் நடித்திருந்தார்.. அதாவது கேரக்டருக்கு தேவையென்றால் மட்டுமே இப்படி நடித்தனர். இது சினிமாதானே? கதைக்கு பொருத்தமானதில் நடித்துதான் ஆகவேண்டும்.
வாரிசுகள் பலர் திறமைசாலிகளாக இருந்தாலும், அதிர்ஷ்டமும் தேவைப்படுகிறது. முன்னணி நடிகர்களான சத்யராஜ், பாக்யராஜ், முரளி,. கமல்ஹாசன் போன்றோர் பெற்ற வெற்றிகளை, அவர்களது பிள்ளைகள் தமிழ் சினிமாவில் பெற முடியவில்லை..
வாரிசுகள் - விமர்சனங்கள்
சினிமாவில் திறமை இருந்தாலும், ஒரு நடிகராக நிலைத்து நிற்க அதிர்ஷ்டம் மிகவும் அவசியம்.. அது வாரிசு நடிகர்களுக்குப் பல நேரங்களில் அமைவதில்லை.. இதற்கு உதாரணமாக பாரதிராஜாவின் மகன் மனோஜ், சத்யராஜ் மகன் சிபி, பாக்யராஜின் மகன் சாந்தனு போன்றோரின் படங்களும் தோல்வியடைந்தன. அவ்வளவு ஏன் உலகநாயகன் மகன் ஸ்ருதிஹாசனாலும் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை..
ஆரம்பக் காலத்தில் நடிகர் விஜய் பல விமர்சனங்களையும், அவமானங்களையும் சந்தித்தவர்.. அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரின் முயற்சியும், விஜய்யின் கடின உழைப்பாலேயே இன்று அவர் ஒரு உச்சத்தில் இருக்கிறார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications