2 ஹீரோ, 1 ஹீரோயின், 1 இயக்குனர்: தனுஷை டேமேஜ் செய்யும் 4 பேர் இவங்க தானா? உடையுதே திரையுலக சீக்ரெட்
சென்னை: அன்றைய காலகட்டத்தில் சினிமாவில் நடிகர்களுக்குள் போட்டி இருந்தது.. ரஜினிகாந்த், கமல்ஹாசன் காலகட்டத்தில் பொறாமை இருந்தது.. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சினிமா முழுவதுமே காழ்ப்புணர்ச்சியின் கூடாரமாக மாறிவிட்டது"' என்று ஆஸ்கார் மூவிஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வேதனை தெரிவித்துள்ளார்.. அத்துடன் தனுஷ் மீது தொடர்ந்து தாக்கப்படும் தாக்குதல்கள் குறித்தும் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Fine Time Cine என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, தன் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக பல மேடைகளில் தனுஷே சொல்லி உள்ளார்.. "தனுஷை பலரும் டார்கெட் வைத்து அட்டாக் செய்கிறார், ஆனால் எப்படி டார்கெட் செய்தாலும் அவைகளை எல்லாம் தனுஷ் எதிர்த்து நிற்பார்" என்று அவரது மேனேஜர் ஸ்ரேயாஸ் என்பவரும் சமீபத்தில் கூறியிருந்தார்..

எப்போதுமே தனுஷ் மீது இப்படியொரு புகார் வந்தவண்ணம் உள்ளது. குறிப்பாக, தனுஷின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போதும், தனுஷை பற்றி இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புவதாகவும், இதற்கெனவே ஒரு குரூப் திட்டமிட்டு இயங்கி வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
தனுஷ் மீதான இமேஜ்
அன்றைய காலகட்டத்தில் சினிமாவில் நடிகர்களுக்குள் போட்டி இருந்தது.. ரஜினிகாந்த், கமல்ஹாசன் காலகட்டத்தில் பொறாமை இருந்தது.. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சினிமா முழுவதுமே காழ்ப்புணர்ச்சியின் கூடாரமாக மாறிவிட்டது.
தன் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தனுஷ் மட்டுமே இப்படி புலம்பவில்லை. தான் சம்பாதித்ததை பிடுங்கி விடுகிறார்கள், மிரட்டல்கள் வருகின்றன என்றெல்லாம் சிவகார்த்திகேயனும் அழாத குறையாக ஒரு மேடையில் பேசியிருந்தார். அவ்வளவு ஏன்? வளர்ந்து வரும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஒரு மேடையில், நான் துளிர்த்து வரக்கூடிய ஒரு சிறிய செடி, ஆனால் என் மீதே ஆசிட் ஊற்றுகிறார்கள் என்று கூறியிருந்தார்.
மானசா ஆனந்த் - போன் கால்
அந்தவகையில்தான், தற்போது டிவி சீரியல் நடிகை மானசா ஆனந்த்தின் குற்றச்சாட்டும் உள்ளது.. தனுஷின் மேனேஜர் தனக்கு போன் செய்து, நடிக்க அழைப்பு வந்ததாகவும், அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகேவா? என்று கேட்டு போனில் கேட்டதாகவும் கூறியிருந்தார். அந்த போன் கால் உண்மையா? என்று தெரியவில்லை என்று கூறிய நடிகை மானசா ஆனந்த், தனுஷையும் அலர்ட் செய்திருந்தார்.
"ஒரு செங்கல்லைகூட உருவ முடியாது" என்று தனுஷ் ஆவேசத்துடன் சொல்கிறார் என்றால், அந்த அளவுக்கு தனுஷூக்கு யாரோ பிரச்சனையை தந்து வருகிறார்கள் என்று தெரிகிறது.
2 பிரபல நடிகர்கள், 1 பிரபல நடிகை
பிரபல 2 நடிகர்கள், பிரபலமான 1 நடிகை, பிரபலமான 1 இயக்குனர் என்ற கூட்டணியில் தனுஷூக்கு எதிராக எப்போதுமே பிரச்சனை செய்கிறார்கள், தனுஷின் பெயரை கெடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இதில் அந்த பிரபலமான நடிகர், ஆரம்ப காலத்திலிருந்தே தனுஷூக்கு போட்டியாளர்.. இன்னொருவர் தனுஷே வளர்த்துவிட்ட நடிகர்.. இன்னொரு நம்பர் நடிகை, இயக்குனரை திருமணம் செய்தவர். இவர்கள்தான் தனுஷ் மீதான தாக்குதல்களை தொடுத்து வருபவர்கள் என்ற பேச்சு சோஷியல் மீடியாவில் உள்ளது.. இது உண்மையா பொய்யா தெரியவில்லை..
PR Team = விஷமத்தனமானது
ஆனால், ஒரு விஷயம் மட்டும் உண்மை,.. ஒரு சில நடிகர்களை தவிர, PR Team வைத்து தங்களை பற்றி சோஷியல் மீடியாவில் புரமோட் செய்துகொள்கிறார்கள்.. மற்றொரு புறம், தங்களுக்கு பிடிக்காத, விரோதமாக நினைக்கும் நடிகர்களை பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார்கள்.. முக்கியமாக கேரக்டர்களை டேமேஜ் செய்துவிடுகிறார்கள்..
பிஆர் டீமை வைத்து இப்படி செய்வது, விஷமத்தனமானது.. சினிமாவுக்கு ஆரோக்கியம் இல்லாதது.. ஒருவரின் வளர்ச்சியையும் சரி, ஒருவரின் வீழ்ச்சியையும் சரி, யாராலுமே எப்போதுமே தடுக்க முடியாது"என்றெல்லாம் தெரிவித்து உள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications