Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்றைக்கு பாரதிராஜா, இளையராஜாக்கு.. இன்று ஜானகிக்கும் அதே சோகம்! கலையுலகம் கண்ட கண்ணீர் கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா உலகம் எப்போதும் ஒளி, புகழ், கைதட்டல் என்பவற்றால் மட்டுமே நிரம்பியதல்ல. அந்த ஒளிக்குப் பின்னால், சொல்ல முடியாத அளவிலான வலி, இழப்பு, கண்ணீர் ஆகியவையும் நிறைந்திருக்கின்றன. சமீப காலமாக திரையுலகில் தொடர்ச்சியாக நடைபெறும் துயர சம்பவங்கள், ரசிகர்களின் மனங்களையும் கனக்கச் செய்துள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு, இயக்குநர் பாரதிராஜா தன் வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பை சந்தித்தார். அவரது ஒரே மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். "என் மகன் தான் என் உலகம்" என்று பல பேட்டிகளில் சொல்லி வந்த பாரதிராஜா, முதுமையின் வாசலில் நிற்கும் இந்த காலகட்டத்தில், தன்னுடைய ஒரே மகனை இழந்து, சொல்ல முடியாத சோகத்தில் மூழ்கி இருக்கிறார்.

Tamil cinema Bharathiraja Ilaiyaraaja S Janaki

அதே போன்று, இப்போது இசை உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருப்பது, பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த பேரிழப்பு.

ஜானகியின் உடைந்த உலகம்

பல ஆயிரம் பாடல்கள், பல கோடி ரசிகர்கள், தேசிய விருதுகள், உலகப் புகழ் - இவை எல்லாவற்றையும் தாண்டி, ஜானகி அம்மாவுக்கு வாழ்க்கை என்றால் அது தன் ஒரே மகன் முரளி கிருஷ்ணா தான். அவருடன் தான் அவர் வாழ்ந்தார், அவருக்காக தான் அவர் வாழ்ந்தார்.

அப்படிப்பட்ட நிலையில், தன் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில், தன்னுடைய ஒரே மகனை இழந்திருக்கிறார் ஜானகி. இந்த இழப்பு, அவருக்கு ஒரு சாதாரண துயரம் அல்ல... அது வாழ்க்கையே சிதறிய ஒரு கணம்.

ஒரு தாய் தனது பிள்ளையை இழப்பது என்பது, எந்த விருதும், எந்த புகழும் ஆறுதல் தர முடியாத வலி. அந்த வலியை இன்று ஜானகி அம்மா அனுபவித்து வருகிறார்.

கலையுலகில் மீண்டும் மீண்டும் நடந்த இதே வலி

பாரதிராஜாவாகட்டும், ஜானகியாகட்டும் - இவர்கள் மட்டுமல்ல. தமிழ் சினிமா துறையில் பல இயக்குநர்கள், நடிகர்கள், பாடகர்கள், தங்களுடைய பிள்ளைகளை காலத்துக்கு முன்பே இழந்து, வாழ்நாள் முழுவதும் அந்த வலியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

வெளியில் அவர்கள் சிரிப்பார்கள்... மேடையில் கைதட்டல் வாங்குவார்கள்... ஆனால் வீட்டுக்குள் சென்றால், அந்த வெறுமை அவர்களை தினமும் கொன்று கொண்டே இருக்கும். இந்த துயரம், புகழ் பார்க்காது... பணம் பார்க்காது... பிரபலமா, சாதாரணமா என்று வேறுபாடு பார்க்காது.

கடந்த 2024 ஆம் ஆண்டு இளையராஜா வீட்டிலும் ஒரு பெரிய துயரம் நடந்தது. இளையராஜாவின் ஒரே மகளான பவதாரணி தன்னுடைய 41வது வயதில் உடல்நிலை குறைபாடு காரணமாக திடீரென காலமானார். அப்போது இளையராஜாவும் அவருடைய மகன்களும் நொறுங்கிப் போய் இருந்தனர். வருடங்கள் ஓடினாலும் இன்னும் அந்த வருத்தத்தில் இருந்து நாங்கள் மீண்டு வரவில்லை என்று பல இடங்களில் இளையராஜா சொல்லி இருக்கிறார்.

Tamil cinema Bharathiraja Ilaiyaraaja S Janaki

ரசிகர்களின் ஆறுதல் குரல்கள்

இந்தச் சம்பவங்களை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

"ஒரு பெற்றோருக்கு பிள்ளையை இழப்பது தான் மிகப்பெரிய தண்டனை", பாரதிராஜாக்கும், ஜானகி அம்மாவுக்கும் இந்த வலியை தாங்கும் சக்தியை கடவுள் தர வேண்டும்.. இந்த செய்தி குழந்தைகளை இழந்த அனைத்து பெற்றோர்களுக்கும் நெஞ்சை உடைக்கிறது.. என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களது ஆறுதலையும், கண்ணீரையும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த செய்தி, ஜானகி அம்மாவிற்கும், பாரதிராஜா சாரிற்கும் மட்டுமல்ல... தங்களுடைய குழந்தைகளை இழந்து, அமைதியாக வலியை சுமந்து வாழும் அனைத்து பெற்றோர்களுக்கும்.

உங்கள் வலி யாருக்கும் தெரியாமல் போகலாம்... ஆனால் அது சிறியதல்ல. உங்கள் கண்ணீர், இந்த உலகத்தின் மிகப் பெரிய உண்மை. இந்த துயரத்தில் இருக்கும் அனைவருக்கும், ரசிகர்கள் சார்பாக ஒரு மௌன அஞ்சலியும், ஆழ்ந்த அனுதாபமும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+