மொட்டை மாடியில் தள்ளாடி விழுந்த பிரபல நடிகை.. திவ்ய பாரதி முதல் ஸ்ரீதேவி வரை! சொத்துக்கு என்ன பஞ்சம்
சென்னை: நடிகைகளின் தற்கொலைகள் அதிகரித்து வருவது கவலையை தருவதாகவும், இதில் பெரும்பாலான நடிகைகளின் தற்கொலைகள் கொலைகளாகவே உள்ளன என்றும், அந்த தற்கொலைகளின் மர்மம் நீடித்து வருவதாகவும் பிரபல நடிகை சார்மிளா கருத்து கூறியிருக்கிறார்.. பேட்டி ஒன்றில் பேசும்போது, சில நடிகைகள் திருமணம் செய்யாதது குறித்தும், தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
உங்கள் நிலம் என்ற யூடியூப் சேனலில் பேட்டி தந்துள்ள நடிகை சார்மிளா, "நடிகை சித்தாரா இன்னமும் நடித்து கொண்டிருக்கிறார்.. நடிகை ஷோபனா தன்னுடைய வாழ்க்கையை பரத நாட்டியத்துக்கே அர்ப்பணித்து விட்டார்.. பரதம்தான் அவரது உயிர்.. அதை ரசிக்கக்கூடிய நபர் கிடைத்தால்தானே அவர் திருமணம் செய்வார்? அதேபோல சித்தாரா அந்த காலத்திலேயே கிளாமராக நடித்தது கிடையாது..

இதையெல்லாம் விரும்பி வருபவரைத்தான் சித்தாராவும் திருமணம் செய்ய முடியும்.திருமணம் செய்வது செய்யாதது அவரவர் விருப்பம்..
எனினும் திருமணம் செய்ய விரும்பாதவர்கள், குழந்தைகளை தத்தெடுத்து கொள்ளலாம்.. அல்லது ஐவிஎஃப் முறைப்படி கருத்தரித்தும் குழந்தையை பெற்றெடுத்து கொள்ளலாம்.. சோதனைக் குழாய் குழந்தை பெற்றெடுப்பதால், ஒருவரையொருவர் யாரென்று அறிய முடியாது.. குழந்தைகள் தத்தெடுப்பது அல்லது ஒரு குழந்தை பெற்றுக்கொள்வதும் தனிப்பட்ட விருப்பங்கள்தான்..
சபாஷ் சதா தேர்வு
நடிகை சதாவும் திருமணம் செய்யவில்லை.. ஆனால் போட்டோகிராபியில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.. மிக அற்புதமான தேர்வு இது.. இப்படியான பாசிட்டிவ் செயல்கள் பிறருக்கு ஊக்கத்தையும் அளித்து வருகிறது.. இதனால் வேறு சில நடிகைகளும் போட்டோகிராபியை தேர்ந்தெடுக்கலாம்..
எனவே காதல், கல்யாணம் என்பதற்குள் செல்லாமல், தங்களுக்கு விருப்பமான பாதையை நடிகைகள் தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள்..
சில்க் ஸ்மிதா - சொத்துக்கள்
மற்றொருபுறம் நடிகைகள் தற்கொலைகள் என்பது தொடர்கதையாகி வருகிறது.. ஆனால் நடிகைகள் தற்கொலை என்று சொல்லப்படுவது கொலையாகவே உள்ளது.. அல்லது நிரூபிக்கப்படாமலேயே உள்ளது..எனக்கு முன்பிருந்த சீனியர்கள் ஷோபா, படாபட் ஜெயலட்சுமி போன்றோர் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்தார்கள்.
ஆனால், சில்க் ஸ்மிதா மரணம் தற்செயலானது கிடையாது.. அவருக்கு எத்தனையோ பட வாய்ப்புகள் அந்த நேரத்தில் காத்து கிடந்தன, பணத்துக்கு ஒரு பிரச்சனையும் அவருக்கு இல்லை.. அவர் இறந்தும் கூட, அவரது படங்கள் பல ரிலீஸ் ஆனது.. அப்படியிருக்கும்போது, எப்படி அவர் தற்கொலை செய்து கொள்வார்? ஆரம்பத்தில் அதனை தற்கொலை என்றார்கள், இறுதியில் அது நன்கு திட்டமிடப்பட்ட கொலை என்கிறார்கள்.
மொட்டை மாடி - நடிகை திவ்ய பாரதி
நடிகை திவ்யபாரதியும் இப்படித்தான் மர்மமாக இறந்தார்.. எனக்கு நெருங்கிய தோழியும்கூட.. மும்பை கலாச்சாரத்தில் வளர்ந்தவர் என்றாலும், மிகவும் தைரியமான பெண்.. அதற்காக தண்ணி அடித்துவிட்டு, மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார் என்ற செய்தியும் நம்ப முடியாமல்தான் இருக்கிறது..
இத்தனைக்கும் நாங்கள் எல்லாரும் அவருடன் நெருங்கி பழகியவர்கள்.. எங்களாலும் அதை நம்ப முடியாது.. இதுவும் தற்கொலைக்கு சாத்தியமே இல்லை..
தினம் தினம் மது குடித்த பெண், திடீரென தடுமாறி எப்படி மாடியில் இருந்து கீழே விழ முடியும்? அது நம்புகிற மாதிரி இல்லை. இது விபத்து அல்ல, இது ஒரு திட்டமிட்ட நிகழ்வு.. பணமும், படமும் அதிகம் இருந்த நடிகை திவ்ய பாரதி.. இதேபோல வாய்ப்புகளும், பணமும் அதிகம் இருந்த சுஷாந்த் எதற்காக தற்கொலை செய்ய வேண்டும்? அதுவும் நம்ப முடியவில்லை..
நடிகை ஸ்ரீதேவி - தண்ணீர் டப்
நடிகை மோனல் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பேயில்லை.. காரணம், அந்த நேரத்தில் உச்சத்தில் அதிக படங்களில் நடித்து கொண்டிருந்தார்... நடிகை ஸ்ரீதேவியும் தண்ணீர் டப்பில் விழுந்து இறந்தார் என்றால் யாராவது நம்புவார்களா?
நானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவள்தான்.. 19 வயதில் கையை வெட்டி கொண்டு தற்கொலை செய்ய முயன்றேன்.. காதல் தோல்விக்கு நானும் ஆளானேன்.. நானே இதற்கு நேரடி சாட்சியாக உள்ளேன்.. ஆனால் இப்போது அப்படியொரு தவறை செய்ய மாடேன். காதல் என்பது காற்று போலத்தான், அது யாராலும் தவிர்க்க முடியாதது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications