சமந்தாவுக்கு கோவை ஈஷா யோகாவில் கல்யாணம்.. அதென்ன ‘பூதசுத்தி விவாஹா’ முறை.. ஓஹோ இதுதான் அந்த ஸ்பெஷல்?
கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் எளிமையாக நடைபெற்ற சமந்தாவின் 2வது திருமண போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.. சமந்தாவுக்கு வாழ்த்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.. இந்நிலையில், கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த இந்த திருமணம் குறித்து, ஈஷா தரப்பில் விளக்கம் ஒன்று தரப்பட்டுள்ளது..
நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, அடுத்த 4 வருடங்களில் கருத்து வேறுபாடால் பிரிந்துவிட்டார்.. இவர்களுக்கு விவாகரத்தும் நடந்தது ..

பிறகு நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபலாவை மறுமணம் செய்துகொண்டார்... இந்த நேரத்தில் தசை அழற்சி நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார் சமந்தா.. இதனால் தீவிரமான சிகிச்சையை எடுத்து கொண்டு, மீண்டும் நடிக்க வந்தார்..
ரெண்டாவது திருமணம்
அப்படி நடிக்க வந்தபோதுதான், 'பேமிலி மேன், சிட்டாடல், ஹனி ஃபன்னி போன்ற வெப்சீரீஸ்களில் நடிக்க துவங்கினார்.. அப்போது, அதன் இயக்குநர்களில் ஒருவரான ராஜ் நிடிமொருவுடன் சமந்தாவுக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
பொதுவெளியில் இருவரும் ஜோடியாக நடமாடி வந்தார்கள்.. இதனால் இவர்களை பற்றி கிசுகிசுக்களும் வேகமாக பரவின. ஆனால் இருவருமே தங்களை பற்றின கிசுகிசுவை மறுக்கவில்லை..
கோவை ஈஷா யோகா மையம்
இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை சமந்தாவே சோஷியல் மீடியாவில் பதிவிட்டார்.. அப்படியானால் ராஜ் நிடிமொருவை சமந்தா 2 வது திருமணம் செய்ய போகிறாரோ? என்ற சந்தேகமும் இணையத்தில் வலுத்தபடியே இருந்தது..
இந்நிலையில், சமந்தாவும், ராஜ் நிடிமொருவும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.. சமந்தாவுக்கு 2வது திருமணம் என்பது போல, ராஜ் நிடிமொருவுக்கும் இது 2வது திருமணமாகும்.. இவரும் ஸ்யாமலி டே என்பவரை திருமணம் செய்து 2022ல் விவாகரத்தானவர்..
லிங்க பைரவி ஆலயம் - பூதசுத்தி விவாஹா
இன்று டிசம்பர் 1ம் தேதி, கோவை ஈஷா யோகா மையத்தில் இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்... ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி ஆலயத்தில் இவர்களது திருமணம் எளிய முறையில் நடந்துள்ளது. சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் "01.12.2025" என்று குறிப்பிட்டு, திருமணப் படங்களை ஷேர் செய்துள்ளார்..
இதுகுறித்து ஈஷா யோகா மையம் சார்பில் இதுகுறித்த விளக்கம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது.
அதில், "லிங்க பைரவி சன்னிதியில் வைத்து பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, தம்பதியர் இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுவதே "பூதசுத்தி விவாஹா" முறை. இம்முறை இருவர் இடையே ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்தை வழங்குகிறது'' என்று ஈஷா தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
அதென்ன பூத சுத்தி விவாஹ?
"லிங்க பைரவி சன்னதிகளிலோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலோ வழங்கப்படும் பூத சுத்தி விவாஹ திருமண செயல்முறையானது, தம்பதியருக்கிடைகயே, ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் யோக விஞ்ஞானத்துடன் வழங்கப்படுகிறது.. இதன்படி, பஞ்ச பூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுகிறது..
மேலும் தம்பதியர் தங்களது எண்ணம், உணர்ச்சி, உடல் தாண்டிய சங்கமத்தை உணர்வதற்கான சாத்தியத்தை பூத சுத்தி விவாஹம் வழங்குகிறது.. ஈஷா அறக்கட்டளை, சமந்தா, மற்றும் ராஜூக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது" என்று ஈஷா மையம் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
யோக அடிப்படையில் திருமணம்
நடிகை சமந்தாவை பொறுத்தவரை, யோகாவில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.. கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் சிவராத்திரி விழாக்களில் ஆண்டுதோறும் தவறாமல் கலந்து கொள்வார்.. இந்த மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் பல பிரபலங்களுடன் சேர்ந்து சமந்தாவும் நடனமாடுவார்.. இது சம்பந்தமான போட்டோக்களை சமந்தாவே தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்வதும் உண்டு..
இப்போது தன்னுடைய திருமணத்தையே இங்குதான் நடத்தி முடித்துள்ளார்.. அந்தவகையில் சமந்தாவுக்கு இது விசேஷ திருமணம் என்றே சொல்லலாம்..
அதாவது பாரம்பரிய திருமணங்களை விட, யோக அடிப்படையிலானது இன்று சமந்தாவுக்கு நடந்துள்ள திருமணம்.. அந்தவகையில், சமந்தாவின் ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்றபடியே அமைந்திருப்பது, அவரது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறது..
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications