திரிஷாவை வீட்டுக்குள்ள வச்சிருக்க கூடாதா? யாரை பழிவாங்க இப்படி? விஜய்க்கு குட்டு வைத்த சமுத்திரக்கனி! விரக்தி
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தற்போது அரசியலிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சர்ச்சைகளின் மையமாகி இருக்கிறார். ஒரு பக்கம் அவரது குடும்ப வாழ்க்கை தொடர்பான பிரச்சனைகள் நீதிமன்றம் வரை சென்றிருக்க, இன்னொரு பக்கம் நடிகை த்ரிஷா உடன் அவர் கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சி தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது. இது பற்றி இயக்குனர் சமுத்திரகனி ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார்.
சமீபத்தில் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் குடும்பத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு விஜயும் த்ரிஷாவும் சேர்ந்து வந்தனர். இருவரும் ஒரே நிறத்தில் இருக்கும் ஆடையை அணிந்து, ஒரே காரில் வந்தனர். அவர்கள் மணமக்களை சந்தித்து வாழ்த்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதும் அது வேகமாக பரவி விட்டது.

விவாகரத்து வழக்கு
இது சாதாரணமாக நடந்த ஒரு நிகழ்ச்சி என்றாலும், அதே நேரத்தில் விஜயின் மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் சூழ்நிலை காரணமாக, இந்த சம்பவம் பெரிய சர்ச்சையாக மாறியது. "இப்படி ஒரு நேரத்தில் அவர் த்ரிஷாவுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமா?" என்ற கேள்வி ரசிகர்களிடையே கூட எழ ஆரம்பித்துள்ளது.
அதிருப்தியில் ரசிகர்கள்
விஜயின் இந்த நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அவரை ஆதரித்து வந்த சில ரசிகர்களே இப்போது குழப்பத்தில் உள்ளதாக பேசப்படுகிறது. "இதெல்லாம் தேவையில்லாத வேலை. அரசியலுக்குள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்படிச் செய்தது ஏன்?" என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சர்ச்சைகள்
அதே நேரத்தில் விஜயை ஆதரித்து வந்த சிலர், "கரூர் சம்பவம் முதல் பல சர்ச்சைகளில் அவர் மீது விமர்சனங்கள் வந்தபோது கூட ரசிகர்கள் அவருக்கு முழு ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் இந்த விஷயத்தில் அவருக்கு ஆதரவு சொல்லவே கடினமாகி விட்டது" என்று கூறுகிறார்கள்.
சங்கீதாவின் புதிய மனு
இதற்கிடையில் இன்னொரு புதிய தகவலும் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் மனைவி சங்கீதா, இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஒரு மனு கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், "நீலாங்கரையில் உள்ள வீட்டுக்குள் விஜய் தன்னை அனுமதிக்க மறுக்கிறார்" என்று குற்றம் சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளிவந்ததும், இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பாக பேசப்பட ஆரம்பித்துள்ளது.
இந்த சம்பவங்கள் அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி அடுத்த சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இப்படியான தனிப்பட்ட சர்ச்சைகள் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விவகாரம் குறித்து சினிமா வட்டாரத்திலும் பலர் பேச தொடங்கியுள்ளனர். குறிப்பாக நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி இதைப் பற்றி மிகவும் கோபமாக பேசியதாக ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சமுத்திரகனி ஆதங்கம்
அந்த வீடியோவில், ஒரு பட பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சமுத்திரகனி, இயக்குநர்கள் பாலா மற்றும் ஆர்.வி. உதயகுமார் ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் விஜய் திரிஷா ஒன்றாக கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி கேட்கப்பட்டது, அதற்கு அவர் "இது என்ன விளையாட்டா? இவ்வளவு விஷயங்கள் நடந்திருக்கிறது. அவங்களை வெளியே கூட்டிட்டு போகிறீங்க. நான்கு சுவற்றுக்குள்ள வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? யாரை நீ பழி வாங்குற?" என்று கோபமாக பேசுகிறார்.
மேலும், "எல்லாம் நல்லபடியாக வந்துகொண்டிருந்தது. கட்சிக்காரனே இனிமேல் நம்மால் முடியாது என்று சொல்கிறான்" என்று அவர் வருத்தமாக கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், விஜய் அரசியலுக்கு வந்தபோது அவரை மனதார வரவேற்று பாராட்டியவர்களில் சமுத்திரகனி ஒருவராக இருந்தார். அந்த நிலையில்தான் இப்போது அவர் இப்படிப் பேசுவது கூட அதிகமாக கவனத்தை ஈர்த்துள்ளது.
மொத்தத்தில் பார்த்தால், ஒரு பக்கம் விவாகரத்து வழக்கு, இன்னொரு பக்கம் த்ரிஷாவுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது, அதோடு மனைவி மீண்டும் நீதிமன்றத்தில் மனு கொடுத்தது - இப்படி பல விஷயங்கள் சேர்ந்து தற்போது விஜயை சுற்றி பெரிய அளவில் சர்ச்சைகள் உருவாகி இருக்கின்றன. இந்த விவகாரம் அடுத்த நாட்களில் எப்படி மாறும், அதற்கு விஜய் என்ன பதில் சொல்வார் என்பது தான் தற்போது ரசிகர்களும் அரசியல் வட்டாரங்களும் கவனித்து பார்க்கும் விஷயமாக உள்ளது.












Click it and Unblock the Notifications