இனி விஜய் சேதுபதி இடத்தில் சாண்டி! அந்த ஹிட் படத்தின் இரண்டாவது பாக ஹீரோ! ஆள் ரவுண்டரா கலக்குறாரே!
சென்னை: ஆரம்பத்தில் சாண்டியை டான்ஸ் மாஸ்டராக தான் பலருக்கும் தெரியும். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பல திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. விஜயுடன் வில்லனாக நடித்த பிறகு இப்போது அதிகமாக வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போதைக்கு விஜய் சேதுபதியின் ஹிட் திரைப்படம் ஒன்றில் இரண்டாவது பக்கத்தில் இவர்தான் இனி கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸில் பெருமை
சில நாட்களுக்கு முன்புதான் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் சாண்டி பற்றி பிக் பாஸ் பெருமையாக பேசியிருந்தார். சாண்டியின் நண்பரான கானா வினோத் உள்ளே செய்யும் அலப்பறையை பார்த்து காண்டான பிக் பாஸ் உங்க நண்பர் தானே சாண்டி அவர் இந்த நிகழ்ச்சியில் எப்படி இருந்தார் தெரியுமா? எல்லாரையும் சிரிக்க வச்சிட்டு இருந்தாரு என்று பெருமையாக பேசியிருந்தார். அதற்கு பிறகு சோசியல் மீடியாவில் சாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோக்கள் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இப்போது சாண்டியின் ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் கிடைத்திருக்கிறது.
விஜய் சேதுபதி படம்
அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குநர் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து பெரிய அளவில் ஹிட்டான "இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க முடியாது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற காமெடி டயலாக் இப்போதும் மீம்ஸ்களில் கூட பசுபதியின் ரியாக்சன் தான் வளம் வருகிறது. அதிலும் குமுதா ஹாப்பி அண்ணாச்சி என்று விஜய் சேதுபதி பேசி பேசியே அனைவரையும் போதுண்டா சாமி என்று சொல்ல வைத்திருப்பார்.
பல அவதாரம்
இந்த நிலையில் கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாவது பாகத்தில் சாண்டி மாஸ்டர் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சாண்டி மாஸ்டர் விஜய்யின் லியோ படத்திற்கு பிறகு வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறார். பல மொழிகளில் சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்த லோகா திரைப்படத்திலும் இவர் தான் வில்லன். அதுபோல கிஷ்கிந்தாபுரி திரைப்படத்திலும் பேயாக நடித்து மிரள வைத்திருந்தார். இப்போது இவர் சுமார் மூஞ்சி குமாராக நடித்தால் அந்த கேரக்டருக்கு அப்படியே பொருந்தி விடுவார், அடுத்த விஜய் சேதுபதி என்று பலர் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications