Sivakarthikeyan: மீண்டும் கமல் கூட்டணியில் சிவகார்த்திகேயன்? – கோலிவுட்டில் சூடுபிடிக்கும் புதிய அப்டேட்!
சென்னை: தமிழ் சினிமாவின் இன்றைய டாப் ஸ்டார்களில் ஒருவராக வளர்ந்து நிற்கிற நடிகர் சிவகார்த்திகேயன், அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு பிரமாண்ட படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த படம் மிக அதிக பட்ஜெட்டில் உருவாக இருப்பதால், தயாரிப்பு பணிகளில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த இடைவெளியில், தொடர்ந்து ரசிகர்களிடையே தன் இருப்பை உறுதி செய்யும் வகையில், சிவகார்த்திகேயன் இன்னொரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஓகே
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் 'தாய்க்கிழவி' படத்தை இயக்க உள்ள சிவக்குமார் முருகேசன், தற்போது சிவகார்த்திகேயனுக்காக ஒரு புதிய கதையை ரெடி செய்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த கதையை கேட்ட சிவகார்த்திகேயன், அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்.
இதில் இன்னும் பெரிய சுவாரஸ்யம் என்னன்னா... இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாகவும் கிசுகிசுக்கள் வெளியாகி இருக்கிறது.
மீண்டும் கமல் சிவகார்த்திகேயன் கூட்டணி
ஏற்கனவே கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்த படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு, கமர்ஷியல் ஹீரோ இமேஜைத் தாண்டி ஒரு சீரியஸ் பர்ஃபார்மராக அவரை நிறுவியது.
அந்த அனுபவம் வெற்றிகரமாக அமைந்ததால், மீண்டும் கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் கூட்டணி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கோலிவுட்டில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சிவகார்த்திகேயன் பயோகிராபி
சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரையில் ஜெயித்தவர்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் கவனத்திற்கு வந்தவர். அந்த நேரத்தில் தான் மெரினா (2012) திரைப்படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியை வாங்கி கொடுத்தது.
முக்கிய படங்கள்
மெரினாவை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், ரெமோ, டான், மாவீரன், அமரன் என காமெடி ஹீரோ இமேஜில் தொடங்கிய சிவகார்த்திகேயன், தற்போது ஆக்ஷன், சீரியஸ் கதாபாத்திரங்கள் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு, ஒரு முழுமையான நடிகராக வளர்ந்துள்ளார்.
அமரன் விருதுகள்
கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான 'அமரன்' படம், சிவகார்த்திகேயனின் கேரியரில் ஒரு முக்கியமான மைல்கல். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ஒரு ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை.
அமரன் படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு மிகவும் இயல்பாக இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டினர். கமர்ஷியல் ஹீரோவாக மட்டுமல்ல, சீரியஸ் கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான நடிகர் என்பதைக் காட்டிய படம். அதேபோல இப்போது கமல் கூட்டணியில் இணைந்திருக்கும் புதிய படமும் இருக்குமா? அல்லது புது பாதையில் இது பயணிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
-
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications