அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன்
சென்னை: நடிகர் விஜய் பற்றிய செய்திகள் தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அவர் அரசியலுக்கு வந்த பிறகு அவருடைய குடும்ப விஷயமும், அவருடைய சினிமா வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என்று அதிகமாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் விஜய் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை குறித்து அவருடைய நெருங்கி பழகிய ஒருவர் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

விஜயின் ஆரம்ப காலம்
விஜய்யின் அப்பா சந்திரசேகர் இயக்குனராக இருந்தபோது விஜய் ஆரம்பத்தில் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று சூட்டிங் பார்த்ததும் விஜய்க்கு நடிக்க ஆசை வந்தது. காலேஜ் படிக்கும் போது நான் இனி படிக்க மாட்டேன் நடிக்க தான் போவேன் என்று அடம்பிடித்ததாகவும் தன்னுடைய மகனின் ஆசைக்காக தானே படத்தை எடுத்ததாகவும் சந்திரசேகர் பல பேட்டிகளில் பேசியிருக்கிறார்.
விஜயும் இதை சொல்லி இருக்கிறார். காலேஜில் முதல் வருட அட்மிஷன் போட்டதுமே எனக்கு நடிப்புதான் வேண்டும் என்று நான் அடம் பிடித்தேன் அதனால் அப்பாவும் அதற்கு சப்போர்ட் பண்ணினாரு என்று பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். ஆனால் அவர் நடித்த முதல் படம் அதிகமான விமர்சனங்களை சந்தித்தது. இப்போது அவர் சினிமாவில் தளபதியாக வலம் வந்தாலும் ஆரம்பமான முதல் படத்தில் அவருடைய நடிப்பு மற்றும் முக அழகை பலர் விமர்சித்து இருக்கிறார்கள்.
பத்திரிக்கையில் வந்த செய்தி
அதிலும் ஒரு பத்திரிக்கையாளர் அவரைப்பற்றி உருவ கேலி செய்து எழுதியதால் அவர் அந்த நேரத்தில் அதிகமாக அழுது கொண்டிருந்தாராம். அது குறித்து சமீபத்தில் விஜயிடம் இருந்து விலகிய அவருடைய முன்னாள் மேனேஜர் பிடி செல்வகுமார் சில விஷயங்களை சொல்லி இருக்கிறார். அதில் அவர் சொல்லும்போது, விஜய் நடித்த நாளைய தீர்ப்பு படம் வெளியானதும் எல்லோரும் என்ன சொல்வார்கள் என்று எதிர்பார்ப்புடன் சந்திரசேகர் இருந்தார்.
அந்த சமயத்தில் ஒரு பத்திரிக்கையில் "இந்த தகர டப்பா மூஞ்சி எல்லாம் நடிக்க வரலைன்னு யாரு கேட்டது? இந்த முகத்தை பாக்குறதுக்கு நாங்க பணம் செலவழித்து போகணுமா? என்று எழுதிவிட்டார்கள். அதை எழுதியது வேறு யாரும் இல்லை எழுத்தாளர் சுஜாதா.. அவர் அப்படி எழுதியதும் அதை படித்து பார்த்த விஜய்க்கு ரொம்ப கோவம் வந்தது. தன்னுடைய ரூமுக்குள் கதவை பூட்டிக்கொண்டு அழுது கொண்டிருந்தார்.
கதறி அழுத விஜய்
அவருடைய அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ சமாதானம் செய்தார்கள். ஆனால் அவர் அப்போ சமாதானம் ஆகல. உடனே எஸ்ஏ சந்திரசேகர் எனக்கு போன் செய்து அந்த பத்திரிகையாளரை பார்க்க போகணும் என்று சொன்னாங்க. நான் தான் அவரை அந்த ஆபீசுக்கு கூட்டிக்கொண்டு போனேன். அங்கே என் மகனை பற்றி அப்படி எழுதியவர் யாரா இருந்தாலும் அவன் கையை வெட்டிட்டு நான் ஜெயிலுக்கு போக தயாராக இருக்கேன் என்று சண்டை போட்டாரு. அந்த பத்திரிகையாளர் பயந்து போயிட்டாரு.
அப்பாவின் பாசம்
அந்த இடத்தில் பெரிய சண்டையாகி விட்டது. அதற்குப் பிறகு நான் சமாதானம் செய்தேன் பிறகு பத்திரிகை ஆபீஸிலிருந்து நாங்கள் இனி உங்க பையன் பற்றி நல்லவிதமாகவும் எழுத மாட்டோம், நெகடிவ் ஆகவும் எழுதமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு பிறகு தான் சந்திரசேகர் அங்கிருந்து வந்தார். ஆனால் இவ்வளவு செய்த சந்திரசேகரை விஜய் ஒரு கட்டத்தில் ஒதுக்கி வைத்து விட்டார். அதுவெல்லாம் எங்களுக்கு வருத்தம் தான்.
சந்திரசேகர் தன்னுடைய மகன் ஆசைப்பட்டபடி வாழ வேண்டும் என்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். ஆரம்பத்தில் அவருடைய சொத்துக்களை எல்லாம் விற்று கூட விஜயின் படத்திற்காக செலவழித்தார். அதற்குப் பிறகுதான் விஜயகாந்த்திடம் ஒரு படத்தில் நடிக்க கேட்க, அவரும் சந்திரசேகருக்கு அதையும் செய்து கொடுத்தார்.
விஜய்க்கு கிடைத்த பிரபலம்
அதற்கு பிறகு தான் விஜய் யார் என்றே மக்கள் மத்தியில் பெரிய தொடங்கியது. விஜய் அப்பா தன்னுடைய மகனுக்காக அன்னைக்கு ஒரு ஹீரோ போல நின்றார். ஆனால் விஜய் இப்போது அவருடைய மகனுக்கு அதுபோல செய்யவில்லை. விஜயின் மகன் சினிமாவில் படம் எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்தாரு. ஆனால் விஜய் அதற்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன் என்று சொல்லிட்டாரு. அதனால் தான் அவர் தனியாகவே முயற்சி செய்து ஒரு படத்தில் கமிட் ஆகி இப்போ அந்த படமும் முடிய போகுது என்று அந்த பேட்டியில் பி.டி செல்வகுமார் பேசி இருக்கிறார்.
-
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
வேடன் விவகாரம்... அமைச்சர் சந்திப்பால் மீண்டும் வெடித்த சர்ச்சை! சின்மயி கேள்விக்கு ரசிகர்கள் சொல்வது என்ன? -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன்












Click it and Unblock the Notifications