Jananayagan Audio Launch: கின்னஸ் சாதனையை நோக்கி ஜனநாயகன் ஆடியோ லான்ச், இத்தனை ஏற்பாடு நடக்குதாம்!
சென்னை : விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெரிய செய்தி காத்திருக்கு! விஜய் அரசியலுக்கு போயிட்டதால, அவருடைய கடைசி படம் என்று கூறப்படுகிற 'ஜனநாயகன்' திரைப்படத்தோட இசை வெளியீட்டு விழா பத்தி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியிருக்கு. இந்த விழா சாதாரணமா இல்லாம, தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு பெரிய உலக சாதனையை (கின்னஸ் ரெக்கார்டை) படைக்கும் விதமா நடக்கப்போகுதாம்!

மலேசியாவில் மாபெரும் திருவிழா
ஹெச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்க இந்த படத்தோட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கும்னு அதிகாரப்பூர்வமா உறுதிப்படுத்தியிருக்காங்க. விஜய் ரசிகர்களுக்கான இந்த உலகளாவிய கொண்டாட்டம் வரும் டிசம்பர் 27, 2025 அன்று நடக்கப்போகுது. "மலேசியா, வி ஆர் கமிங்" என்கிற வாசகத்தோட வெளியான 45 விநாடி அறிவிப்பு வீடியோ சமூக ஊடகங்கள்ல ரொம்ப பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கு.
இடம் மற்றும் ரசிகர்கள்
மலேசியாவில் உள்ள தலைநகரான கோலாலம்பூர்ல இருக்கும் புக்கிட் ஜலீல் விளையாட்டு மைதானத்தில் இந்த விழா நடக்குதாம். இது ஆசியாவிலேயே மிகப் பெரிய விளையாட்டு திடல்களில் ஒண்ணு. 80,000 பேர் வரைக்கும் அமர்ந்து பார்க்க முடியுமாம். ஒரு லட்சம் பேர் வரைக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க.
கின்னஸ் சாதனைக்கு முயற்சி
அப்படிப் பார்க்கும்போது ஒரு லட்சம் பேர் வரைக்கும் கலந்துகொள்ளுற ஒரு திரைப்படத்தோட இசை வெளியீட்டு விழான்னு கின்னஸ் சாதனைப் புத்தகத்துல இந்த ஜனநாயகனை இடம் பெறச் செய்யும் முயற்சிகளையும் படத் தயாரிப்பு நிறுவனம் செய்து வருதாம். இந்த மாபெரும் இடத்தை தேர்ந்தெடுத்தது படத்துக்கான சர்வதேச அடையாளத்தை மேலும் உயர்த்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ரசிகர்களின் கொண்டாட்டம்
இந்த அறிவிப்பு வந்த முதல் சில மணிநேரங்கள்லயே ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் (#jananayakanaudiolaunch) என்கிற குறியீடு ட்விட்டர் (எக்ஸ்) ட்ரன்டிங்ல முதல் இடத்தை அடைஞ்சிருக்கு. மலேசியத் தமிழர்கள் ஏற்கனவே ரசிகர்கள் உருவாக்கிய பதாகைகள், எல்.இ.டி கட்அவுட்கள், ஃப்ளாஷ்மாப் நடனங்கள் என கொண்டாடத் தொடங்கிட்டாங்க.
ஜனநாயகம் படத்தின் விவரங்கள்
இந்த படம் பொங்கலை குறிவச்சு ஜனவரி 9, 2026 அன்று உலகெங்கும் வெளியாகவுள்ளது.
இந்த ஜனநாயகன் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உட்பட பலரும் நடித்திருக்காங்க. பல படங்கள்ல வில்லனா நடிச்ச பாபி தியோல் இந்தப் படத்துலேயும் வில்லனா நடிச்சிருக்கார். இது தெலுங்குல பாலகிருஷ்ணன் நடிச்ச சூப்பர் ஹிட் அடிச்ச பகவந்த் கேசரி படத்தோட தமிழ் மறுவுருவாக்கம் (ரீமேக்) எனச் சொல்லப்படுது. படத்தோட தலைப்பு, விஜயோட நடை ஆகியவற்றைப் பார்த்த ரசிகர்கள், இது ஒரு அரசியல் பின்னணியில அமைஞ்ச சஸ்பன்ஸ் கதையாக இருக்கும்னு கணிச்சிருக்காங்க.
ஆடியோ லாஞ்ச்ல பாடல்கள் நேரலையில வெளியிடப்படுறதும், விஜயோட பேச்சு என்னவா இருக்கும் என்பதும் தான் இப்போ ரசிகர்கள் நடுவுல ரொம்ப பெரிய ஆர்வத்தை உருவாக்கியிருக்கு. டிசம்பர் 27, 2025 அன்று உலகம் முழுக்க தளபதி ரசிகர்களுக்கு மாபெரும் திருவிழா காத்திருக்குன்னு சொல்லலாம்!
-
சங்கீதாவுக்கு வீட்டில் உரிமை உள்ளது.. தவெகவினர் ஆபாச அவதூறு டூ மச்.. விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம் -
விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால்.. வீட்டிலேயே அனுமதி இல்லை என்றார் விஜய்.. சங்கீதா குற்றச்சாட்டு! -
“திரிஷா வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது…” விஜய்க்கு குட்டு, ஓபனாக பேசிய பார்த்திபன் -
யூடர்ன் போட்டு.. டேபிளை உடைச்சு! பழைய திட்டங்களுக்கு ’மரு’ வைத்த விஜய்! சர்க்கார் டயலாக் பொய்யா? -
மகளிருக்கு மாதம் ரூ.2,500.. குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.. தவெக தேர்தல் வாக்குறுதிகள் விஜய் அறிவிப்பு -
Vijay Divorce: விஜய் விவாகரத்து விவகாரம்.. சங்கீதாவுக்கு நியாயம் கிடைக்கணும்.. தமிழிசை சவுந்தரராஜன் -
"உயிர் முக்கியம் பிகிலு”.. தவெக தலைவர் விஜய் வாகனத்தை விரட்டும் ரசிகர்களுக்கு நடிகர் விமல் அட்வைஸ்! -
தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் – விஜய்க்கு வானதி சீனிவாசன் அட்வைஸ் -
Kiruthiga: பிரபலம் யார்னு கேட்ட கிருத்திகா! இதெல்லாம் லிஸ்ட்லேயே இல்லைனு சொன்ன கஸ்தூரி! "வினோதம்" -
“வொர்த் இல்லாத என் வாழ்க்கை?” - உடைந்த சங்கீதா.. இனி அமைதி காப்பதில் அர்த்தமில்லை.. வருது அணுகுண்டு! -
நீதிமன்றத்துக்கு ஒருவரின் பெயரைச் சூட்ட முடியுமா? விஜய் வாக்குறுதியை விளாசும் இடும்பாவனம் கார்த்திக் -
விஜயை சுற்றும் பிரச்சனை.. பெற்றோர் பார்த்த பொண்ணை கல்யாணம் பண்ணுங்க! ரசிகர்களுக்கு கொடுத்த அட்வைஸ்












Click it and Unblock the Notifications