அருவியில் கவர்ச்சி காட்சி.. 21 வயதில் நடிகை தற்கொலை! உச்சத்தில் இருந்த விஜயஸ்ரீக்கு நடந்தது என்ன?
சென்னை: சினிமா என்பது எந்தளவுக்கு பெயரையும் புகழையும் பணத்தையும் ஒருவருக்கு பெற்று கொடுக்குமோ.. அதே அளவுக்கு சினிமா பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தும். அப்படி தான் 13 வயதில் சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் உச்சத்திற்கு சென்ற ஒரு நடிகையை எடுக்கவே கூடாத முடிவை எடுக்க வைத்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்!
ஒரு காலத்தில் மலையாள சினிமாவின் ரசிகர்களை தன் அழகால் கட்டிப்போட்ட நடிகை விஜயஸ்ரீ. 13 வயதிலேயே சினிமாவில் அறிமுகமான அவர், மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் பிரேம் நசீருடன் அவர் நடித்த படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

ஆனால், அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற அதே கவர்ச்சி பிம்பம், பின்னர் அவருக்கு பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. வெறும் 21 வயதிலேயே விஜயஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பது இன்றுவரை முழுமையாக தெரியவில்லை.
விஜயஸ்ரீ
1953 ஜனவரி 8ஆம் தேதி திருவனந்தபுரத்தில் பிறந்த விஜயஸ்ரீ, 1966ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான சிட்டி மூலம் தனது 13வது வயதில் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த அவர், 1969ஆம் ஆண்டு பூஜாபுஷ்பம் திரைப்படம் மூலம் மலையாள சினிமாவுக்குள் நுழைந்தார். 1970களின் தொடக்கத்தில் லங்கா தஹனம், டாக்ஸி கார், அரோமலுண்ணி, போஸ்ட்மேன் கண்ணனில்லை, அங்கத்தட்டு உள்ளிட்ட படங்கள் அவரை முன்னணி நடிகையாக மாற்றின.
அடுத்தடுத்து ஹிட் படங்களாக அமைந்ததால் மலையாள சினிமாவில் குறுகிய காலத்தில் அவர் உச்ச நடிகையாக உருவெடுத்தார். அப்போது மலையால சூப்பர் ஸ்டாராக இருந்த பிரேம் நசீருடன் அவர் நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், இருவரின் ஜோடி மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமானதாக மாறியது.
அழகு தேவதை
விஜயஸ்ரீயின் அழகு அவரது நடிப்பை போலவே பிரபலமானது. ஹாலிவுட் நடிகை ரீட்டா ஹேவொர்த்துடன் ஒப்பிடப்பட்ட அவர், பின்னர் 'மலையாள சினிமாவின் மர்லின் மன்றோ' என்றும் அழைக்கப்பட்டார். இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை வெற்றிகளைப் பெற்ற நடிகை வேறு யாரும் இல்லை என்று புகழ்பெற்ற இயக்குநர் ஜெயராஜ் அவரை பற்ரி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த புகழ் ஒரு கட்டத்தில் அவருக்கே பிரச்சினையாக மாறியது. கவர்ச்சியான கதாபாத்திரங்களிலேயே தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவரை புக் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் கவர்ச்சியாகவே அவரை புக் செய்தனர். ஆனால், அந்த பிம்பத்திலிருந்து விலகி வேறு கதாபாத்திரங்களில் நடிக்க விஜயஸ்ரீ விரும்பியதாக கூறப்படுகிறது.
அந்த ஒரு சம்பவம்
இந்த சூழலில் தான் 1973ஆம் ஆண்டு வெளியான பொன்னாபுரம் கோட்டா திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி அவரது வாழ்க்கையை மொத்தமாக புரட்டி போட்டது. அந்த பாடல் காட்சியை படக்குழுவினர் அருவி ஒன்றின் அருகே படமாக்கினர். விஜயஸ்ரீ வெள்ளை நிற மெல்லிய ஆடை அணிந்திருந்தார். ஷூட்டிங் போய் கொண்டு இருக்கும்போது, நீரின் வேகம் காரணமாக அவரது ஆடை விலகிவிட்டது. அதை சமாளிக்க அவர் முயன்றபோதும் கேமராமேன் தொடர்ந்து ஷட் செய்து கொண்ட இருந்துள்ளார்.
இவரது இந்த எதிர்பாராத நிர்வாண காட்சியை படத்தில் யூஸ் செய்ய மாட்டார்கள் என்றே விஜயஸ்ரீ நம்பியிருந்தார். இது தொடர்பாக அவர் படக்குழுவிடமும் கேட்டு கொண்டதாக தெரிகிறது. இருப்பினும், படம் வெளியானபோது விஜயஸ்ரீவுக்கு மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த நிர்வாண காட்சியை அப்படியே கட் செய்யாமல் வைத்திருந்தனர். அந்த சர்ச்சை காட்சி காரணமாகவே படம் மிக பெரியளவில் ஓடியது.
மிரட்டல்?
இருப்பினும், திரைமறைவில் பல சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிரது. பட ரிலீஸுக்கு முன்பு அந்த காட்சியை வைத்து படக்குழுவில் இருந்த சிலர் விஜயஸ்ரீவை மிரட்டியதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், அவரது மரணத்திற்கு இதுதான் காரணமா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆம், இம்த படம் வெளியாகி ஓராண்டு கூட ஆகாத நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டார்.
1974 மார்ச் 17ஆம் தேதி, வெறும் 21 வயதில் விஜயஸ்ரீ தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவர் தனது திரை வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தார். மேலும் பல படங்களில் நடிக்க புக் ஆகியிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் அவரது வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்தது. தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. போலீஸ் விசாரணையிலும் கடைசி வரை மரணத்திற்கான காரணம் வெளியே வரவில்லை.
பகீர்
திரைப்பட சர்ச்சை, தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதற்கு காரணமாக சொல்லப்பட்டது. குறிப்பாக விஜயஸ்ரீ ஒரு ஆணுடன் நெருக்கமாக இருந்ததாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் இருப்பினும் சில காரணங்களால் அது நடக்காமல் போனதாக சொல்லப்படுகிறது. விஜயஸ்ரீ தற்கொலைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. பல ஆண்டுகள் கடந்தும், மிக குறுகிய காலத்தில் மலையாள சினிமாவில் உச்சத்திற்கு உயர்ந்த விஜயஸ்ரீயின் மரணம் மர்மமும் வேதனையும் நிறைந்த கதையாகவே தொடர்கிறது.


Click it and Unblock the Notifications
