என்னை நான் தேடுகின்றேன்...
Subscribe to Oneindia Tamil
-மணிவண்ணன்
எங்கே...?
என்னுள் இருந்த
வெளிச்சம் எங்கே...?
கள்ளம் கபடமின்றி
கருத்தறியாப் பாலகனாய்
மலர்ந்திருந்த முகத்தினிலே
மறைந்திருந்த ஒளி எங்கே...?
புழுதியில் புரண்டெழுந்து
புறம் அழுக்காயினும்
அகம் அழுக்காகாத
அவ்வயது மகிழ்ச்சி எங்கே...?
சேலையின் நுனிபிடித்து
முந்தானையில் முகம்மறைத்து
சோலையோரம் அன்னையோடு
சுற்றிவந்த கோலம் எங்கே...?
அக்காளின் சடையிழுத்து
அழவைத்துச் சிரித்தாடி
ஆனந்தமாய்த் துள்ளியோடும்
அந்திநேரப் பொழுது எங்கே...?
வாழ்வியல் வித்தைகளை
வழக்கம் கொள்ளாக் காலத்தில்
மனம் கண்ட நிம்மதியும்
மாயமாய்ப் போனதெங்கே...?
வாழ்க்கையோடு முட்டிமோதி
வலியில் இன்று நானிருக்க
விளையாட்டே வாழ்க்கைஎனச்
சென்றிருந்த காலம்எங்கே...?
எங்கே...?
என்னுள் இருந்த
வெளிச்சம் எங்கே...?!












Click it and Unblock the Notifications