தேர்தல்-எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்...

"எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்"ன்ற கதையாக, "நாங்களும் வாக்களித்தோம்"னு சொல்லிக் கொள்கிற பொது ஜனத்தைத் தான் இன்றைக்குக் காண முடிகிறது...
நாம் வாக்களித்த வேட்பாளர் எவராவது ஒருவர், என்றாவது ஒரு நாள், தான் சொன்னதை எந்த அளவுக்கு நிறைவேற்றி இருக்கிறோம் என்று புள்ளி விவரத்துடன் வாக்காளர் மத்தியில் எடுத்துரைத்ததுண்டா? அல்லது வாக்காளர்கள் தான் அவர்களைக் கேள்வி கேட்கும் அளவுக்கு சிரமங்கள் எடுத்ததுண்டா?
போகிற போக்கில், காற்றில் கப்பல் விடுவேன் என்றும் கேப்பையில் இருந்து நெய் எடுப்பேன் என்றும் சொன்னால் கூட நமது வாக்காளர்கள் வாக்களித்து வெற்றிக் கனியை அவர்கள் தத்தம் தலைமையின் காலில் சமர்ப்பிதுவிதுவிட்டு வாக்களித்த நம்மையே சுரண்டக் கிளம்பிவிடுவார்கள்... இது தான் ஜனநாயக மரபு என்றே நம்மை இக்காலத் தலைவர்களும் நம்ப வைத்தும் விட்டார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதை சிந்தித்துப் பார்க்க கூட திருவாளர் பொது ஜனங்களுக்கு நேரமும் இருப்பதில்லை...
செய்தித் தாள்களைப் புரட்டி, உலக நடப்பு தெரிந்து, இவ்வளவு காலம் நடந்ததை திரும்பிப் பார்க்க நேர்ந்தால், இவைகளெல்லாம் பொது ஜனங்களுக்குப் புலப்படும்:
1. குற்றப் பின்னணி உடையவர்கள் எந்தனை பேரைத் வெற்றி பெற வைத்துள்ளோம்?
2. ஊழல் பெருச்சாளிகள் எத்தனை பேரிடம் ஏமாந்துள்ளோம்?
3. சபையில் நமக்காக ஒரு கேள்வி கேட்கக் கூட நேரமில்லாமல் உழைத்தே ஓடாய்த் தேய்ந்து போன (யாருக்காக?) எத்தனை பேரை மறுபடி வாக்களித்து சபைக்கு அனுப்பி வைத்துள்ளோம்?
4. கொள்கையும் கட்சியும் மாறி மாறி நம்மிடம் மறுபடி மறுபடி வாக்குப் பெற வரும் எத்தனை பதவி வெறியர்களை நாம் தாங்கிப் பிடித்துள்ளோம்?
5. வெற்றி பெறுவதற்கு முன்னும் வெற்றி பெற்ற பின்னும் இவர்களில் எத்தனை பேர் வாக்காளர்களை ஒரே மாதிரி மரியாதையுடன் நடத்துகிறார்கள்?
6. கட்சித் தலைமைக்குக் காட்டுகின்ற விசுவாசத்தில் நூற்றில் ஒரு பங்கு மக்களுக்குக் காட்டுகிறார்களா இவர்கள்?
7. காமராஜர் வழி, கக்கன் வழி வந்ததாகக் கூறும் இவர்களில் எத்தனை பேர் சுயநலத்தை விடப் பொது நலத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள்?
8. பொது மருத்துவமனையில் இவர்களில் எவ்வளவு பேர் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் சிகிச்சை பெறுகிறார்கள்? அரசு பேருந்துகளில் எத்தனை பேர் பயணிக்கிறார்கள்? அரசு பள்ளிகளில் எவ்வளவு பேரின் குழந்தைகள் பயிலுகிறார்கள்? இதற்கெல்லாம் பதில் தெள்ளத் தெளிவாகத் தெரிந்திருக்க, இவர்களில் எத்தனை பேருக்கு மக்களுக்கு சேவை ஆற்றுகின்ற மனப் பக்குவம் வரும்?
9. இவர்களில் எத்தனை பேர் மனசாட்சிக்கு மட்டும் கட்டுப்பட்டவர்கள்?
10. தாங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை இவர்களில் யாராவது பத்திரமாக எழுதித் தரத் தயாரா?
இவற்றை விட இன்னும் எவ்வளவோ கேள்விகள் மனதைத் துளைத்தெடுக்க, இதோ இந்தத் தேர்தலும் வந்து இவற்றுக்கு நல்ல பதில்கள் கிடைக்காமலேயே விடைபெறவும் போகிறது... எத்தனை பேர் இன்னும் "எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார்"னு சொல்லிக் கொண்டே இருக்கப் போகிறார்கள் என்று தான் தெரியவில்லை!!!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications