'இவையேதும் நிகழாமலும் போகலாம்....'

Subscribe to Oneindia Tamil

Bird
-ரிஷி சேது

நீ கிட்டத்தட்ட உன்
கடைசிக் கோப்பையை
காலி செய்திருந்தாய்

நான் ஜன்னல் வழி
மழை பின்னும் தறிவேலைகளை
ரசிக்க முயற்சித்திருந்தேன்
ஒரு மைனா இங்கும் அங்கும் அலைந்து
இறுதியாய் ஒரு மரக்கிளையில் அமர்ந்தது

இரவை தொடங்கியது இருள்
நீ கனத்த புத்தகத்துள் புதைந்திருந்தாய்
சலனமற்ற பொழுதுகளை
நீதான் எப்போதும் உடைத்திருக்கிறாய்
உன் ஆணாதிக்க ஆளுமை ஒருபோதும்
என்னை அனுமதித்ததில்லை மெளனம் உடைக்க
"இதுதான் உன் முடிவா?" என்றாய்
என் தலையாட்டலால் ஆமோதிதேன்

நீ உன் தலையை வேகமாய் கலைத்தாய்
உன் அசெளகரிய நேரங்களில்
இப்படித்தான் செய்வாய்
தீடிரென்று உன் காய் நகர்த்தல் முறைகளை
யோசித்திருப்பாய் எனப்பட்டது அதுபோலவே
''நான் முடியாதென்றால்?'' என்றாய்

நான் என் நிரப்பப்பட்ட பெட்டியையும்
என் சார்ப்பான விடுதலை பத்திரத்தையும்
எடுத்து வைத்தேன்

நீ உன் முடிக்கப்படா ஓவியத்தின் மீது
மீந்துபோன வண்ணங்களை வீசினாய்
என் பரிதாபங்கள் எனச்சொன்னேன்
நீ உன் அலட்சிய சிரிப்பால் என்னை பரிகசித்தாய்

ஒரு கருஞ்சிலந்தி நகர்ந்து நகர்ந்து கவனமாய்
மாட்டிக்கொண்ட மின்மினிப்பூச்சியை காலால் பிடித்தது
நான் உன்னிடம் மாட்டிக் கொண்டிருந்ததுபோல
நான் வலையறுக்க முடிந்ததை நினைத்து சந்தோஷித்தேன்

நீ அமர்ந்தபடியே உறங்கிப்போயிருந்தாய்
மழையிறங்கி நடந்தேன்

மைனாவிற்கு கூடில்லை, மின்மினிப்பூச்சி மெல்ல மெல்ல
இறந்து போகலாம்
உன் வண்ணங்களிரைத்த ஓவியத்தை
யாரேனும் ரசிக்கலாம் அப்படியே
நீ கூட மாறிப்போகலாம்
யாருக்குத் தெரியும் இவையேதும் நிகழாமலும் போகலாம்....

[email protected]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+