For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன''...!

By A K Khan
Google Oneindia Tamil News

மக்களிடையே அறிவியலையும், ஆராய்ச்சிகளையும் எளிய முறையில் கொண்டு சேர்த்து பெரும் தொண்டு செய்து வரும் அமைப்பு நேஷனல் ஜியோக்ரபிக். இதன் இதழ்களும், தொலைக்காட்சிகளும் உலகப் புகழ்பெற்றவை.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 1888ம் ஆண்டு நிறுவப்பட்டது நேஷனல் ஜியோக்ரபிக் சொசைட்டி.

பயணம், அறிவியல் ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்ட அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் இணைந்து லாப நோக்கம் இல்லாத அமைப்பாக இதை உருவாக்கினர். இதில் கல்வியாளர்கள், விஞ்ஞானிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பேச்சுத் திறன் இல்லாதவர்களுக்காக முதல் முதலாக பள்ளியை ஆரம்பித்த கிரீன் ஹப்பர்ட் தான் இதன் முதல் தலைவரானார். இதையடுத்து இவரது மருமகனும் தொலைபேசியை கண்டுபிடித்தவருமான கிரஹாம் பெல் இதன் தலைவரானார்.

நேஷனல் ஜியோக்ரபிக் பத்திரிக்கை:

நேஷனல் ஜியோக்ரபிக் பத்திரிக்கை:

இந்த அமைப்பு தொடங்கப்பட்ட 9 மாதத்திலேயே நேஷனல் ஜியோக்ரபிக் பத்திரிக்கையும் ஒரு இதழாக ஆரம்பிக்கப்பட்டது. 2011ம் ஆண்டு கணக்கின்படி இந்த இதழ் உலகம் முழுவதும் 36 மொழிகளில் மாதந்தோறும் 83 லட்சம் பிரதிகள் விற்கப்பட்டு வருகிறது. இதில் இந்திய மொழிகள் ஏதும் இல்லை. நமக்கு அறிவியல் ஆர்வம் அப்படி!. அமெரிக்காவில் தான் மிக அதிகபட்சமாக 50 லட்சம் இதழ்கள் விற்கின்றன.

நேஷனல் ஜியோக்ரபிக் டிவி:

நேஷனல் ஜியோக்ரபிக் டிவி:

இந் நிலையில் கடந்த 1997ம் ஆண்டு நேஷனல் ஜியோகிராபிக் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. முதலில் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் ஒளிபரப்பான இந்தத் தொலைக்காட்சி இப்போது உலகின் எல்லா மூலைகளிலும் பரவிவிட்டது. இப்போது உலகம் முழுவதும் 143 நாடுகளில் 25 மொழிகளில் இந்த சேனல் ஒளிபரப்பாகிறது. இதில் தமிழும் இருப்பது நமக்குப் பெருமை. சீரியல் ஆண்டிகளையும் மீறி, 24 மணி நேர சினிமா பைத்திய டிவிக்களையும் மீறி, 24 மணி நேர நியூஸ் என்ற பெயரில் கத்திக் குவிக்கும் செய்தி சேனல்களையும் மீறி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ள தொலைக்காட்சி நேஷனல் ஜியோகிராபிக்.

125 ஆண்டில் வெற்றி நடை..

125 ஆண்டில் வெற்றி நடை..

நாளையோடு (ஞாயிற்றுக்கிழமை-13.01.2013) நேஷனல் ஜியோகிராபிக் சொசைட்டி ஆரம்பிக்கப்பட்டு 125 ஆண்டுகளை வெற்றிகரமாக முடிக்கிறது. இதையொட்டி அதன் இதழ்கள், தொலைக்காட்சிகளில் வெளியான முக்கிய செய்திகள் குறித்த படங்களை நேஷனல் ஜியோகிராபிக் வெளியிட்டுள்ளது. அவற்றில் சில இதோ...

தென் துருவத்தை அடைந்த முதல் நிருபர்:

தென் துருவத்தை அடைந்த முதல் நிருபர்:

அண்டார்டிகா பகுதிக்கு எத்தனையோ ஆராச்சியாளர்கள் போய்விட்டுத் திரும்பியிருந்தாலும் அங்கு சென்று வந்த முதல் நிருபர் நேஷனல் ஜியோகிராபிக்கின் தாமஸ் அபர்குரோம்பி தான். 1957ம் ஆண்டு அங்கு சென்ற அவர் நேஷனல் ஜியோகிராபிக் சொசைட்டியின் கொடியையும் ஏற்றினார். 1957ம் ஆண்டை சர்வதேச புவியியல் ஆண்டாக ஐ.நா. அறிவித்திருந்த நிலையில் அங்கு தனது நிருபரை அனுப்பியது நேஷனல் ஜியோகிராபிக்.

உலகை அதிர வைத்த படம்..

உலகை அதிர வைத்த படம்..

1985ம் ஆண்டு வெளியான இந்தப் படம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்த நிலையில், பாகிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகக் குடியேற, அங்கு சென்ற நேஷனல் ஜியோகிராபிக் போட்டோகிராபர் ஸ்டீவ் மெக்கர்ரி இந்தப் பெண்ணின் படத்தைப் பிடித்தார். எதிர்காலம் குறித்த கேள்வியும், அச்சமுமாக இந்தச் சிறுமியின் அவலம் நிறைந்த முகத்தை நேஷனல் ஜியோகிராபிக் இதழ் தனது அட்டைப் படத்தில் வெளியிட, உலகம் ஆடிப்போனது. இதுவரை வெளியான நேஷனல் ஜியோகிராபிக் அட்டைப் படங்களிலேயே மிகச் சிறந்த படமாக இன்று வரை இதுவே முன் நிற்கிறது.

கை குலுக்க வந்த குட்டி சிம்பன்சி:

கை குலுக்க வந்த குட்டி சிம்பன்சி:

1964ல் தான்சானியா காடுகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட நேஷனல் ஜியோகிராபிக் விலங்கியல் நிருபர் ஜேன் குட்டாலை நெடு நேரமாக தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு குட்டி சிம்பன்சி குரங்கு, அவர் கை நீட்டியதும் வந்து கையைத் தந்தது. இந்த கை குலுக்கலை படம் பிடித்தவர் ஹூகோ வேன் லவிக்.

இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன...

இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன...

இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன என்று நமது ஆட்கள் இன்று வரை பாட்டு மட்டுமே பாடிக் கொண்டிருக்க.. எவரெஸ்ட் சிரகத்தை ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு பகுதியினர் உள்ளிட்ட உலகம் முழுவதையும் சேர்ந்த பலரும் எட்டிப் பிடித்து வருகின்றனர். இதில் பல மாற்றுத்திறனாளிகளும் பெண்களும் அடக்கம். 1963ம் ஆண்டு முதல் அமெரிக்கக் குழு எவரெஸ்ட் சிகரம் ஏறச் சென்றபோது உடன் நேஷனல் ஜியோகிராபிக் நிருபர் பேரி பிஷப்பும் அந்தக் குழுவுடன் சிகரத்தைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார்.

நிலாவுக்குச் சென்ற நேஷனல் ஜியோகிராபிக் கொடி:

நிலாவுக்குச் சென்ற நேஷனல் ஜியோகிராபிக் கொடி:

1969ம் ஆண்டு நிலவில் முதன்முதலில் தரையிறங்கிய நீல் ஆர்ம்ஸ்ட்ராங் தலைமையிலான அமெரிக்க விண்வெளி வீரர்கள் தங்கள் நாட்டுக் கொடியை நிலவில் நட்டதை அனைவரும் அறிவோம். இவர்கள் தங்களுடன் நேஷனல் ஜியோகிராபிக் சொசைட்டியின் கொடியையும் கொண்டு சென்றனர். அமெரிக்க நாட்டு கொடியைத் தவிர நிலவுக்குப் போன இன்னொரு கொடி இது தான்.

500 வயது 'மம்மி':

500 வயது 'மம்மி':

தென் அமெரிக்காவின் பெரு மலைப் பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் தொல்பொருள் ஆய்வாளர் ஜோகன் ரெயின்ஹார்ட் படம் பிடித்த 500 வருடமான மம்மி. இறந்து போன ஒரு சிறுமியின் உடலை அந்த கால பெரு நாட்டு பழங்குடியினர் எதற்காகவோ பாடம் செய்து வைத்துள்ளனர்.

மாயா மாயா.. எல்லாம் மாயா:

மாயா மாயா.. எல்லாம் மாயா:

ஒலகம் அழியப் போகுதுறா என்று பீதி கிளம்ப காரணமாக இருந்த மாயன் நாகரிகத்தினர் உருவாக்கி வைத்துள்ள கோவில்கள், குகை வரைபடங்கள் ஆகியவை இன்னும் மக்களிடையே பீதியையும் ஆர்வத்தையும் கிளப்புபவை. 1984ல் தென் அமெரிக்காவின் கெளதமாலா நாட்டின் ரியோ அசுல் பகுதியில் உள்ள மாயா நாகரீகத்தின் குகையை ஆராயும் நேஷனல் ஜியோகிராபிக் ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் ஆடம்ஸ்.

டைட்டானிக்..

டைட்டானிக்..

டைட்டானிக் படத்தை எடுத்த ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து, அந்தக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற முழு ஆராய்ச்சியை நடத்தியது நேஷனல் ஜியோகிராபிக். 1912ம் ஆண்டு ஏப்ரலில் இந்தக் கப்பல் மூழ்கிய இடத்தில் ஏராளமான சிறிய நீர்மூழ்கிகள், தடயவியல் நிபுணர்கள், கடலடி ஆய்வாளர்கள் உதவியோடு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு கப்பல் மூழ்கியதற்கு, அது நேரடியாக பனிக் கட்டியில் மோதாமல், மோதலைத் தவிர்க்க கடைசி நேரத்தில் திருப்பப்பட்டு, பக்கவட்டில் மோதியதே காரணம் என்பது கண்டறியப்பட்டது.

இது கிராபிக்ஸ் வால் பேப்பர் அல்ல..

இது கிராபிக்ஸ் வால் பேப்பர் அல்ல..

அமெரிக்காவின் கிப்போர்ட் பின்சொட் தேசிய வனப் பகுதியில் எடுக்கப்பட்ட சூரியன் அஸ்தமிக்கும் காட்சி இது. இதைப் படம் பிடித்தது நேஷனல் ஜியோகிராபிக்கின் ஸ்காடிபாய்ப்டிக்ஸ் வெபர். இது உண்மையான படம் தான் என்று சொல்ல வேண்டிய அளவுக்கு நேர்த்தியும் அழகும் இணைந்து உலகைக் கலக்கியது.

மரத்திலிருந்து..

மரத்திலிருந்து..

உகாண்டாவின் குயீன் எலிசபெத் பார்க் வனப் பகுதியில் நேஷனல் ஜியோகிராபிக் போட்டோகிராபர் ஜோயல் சர்டோரை மரத்தின் மீது ஏறி நின்று மிரட்டிய சிங்கம்.

English summary
From the farthest reaches of the globe to groundbreaking encounters with chimpanzees, National Geographic explores our world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X