Fact Check: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. தபால் ஓட்டுக்களில் நோட்டாவிடம் தோற்றதா நாதக.. உண்மை என்ன?
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி திமுக அதிகபடியான தபால் வாக்குகளை கைப்பற்றி இருக்கும் நிலையில், 2வது இடத்தில் ஆச்சரியமளிக்கும் விதமாக நோட்டாவுக்கு அதிக தபால் வாக்குகள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியது. இதன் உண்மைத்தன்மை குறித்து பார்க்கலாம்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதுவரை 30,657 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் முன்னிலையில் இருக்கிறார். இவருக்கு பின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 5,954 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் இருக்கிறார்.

இந்த இடைத்தேர்தலை அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. இதனால் திமுக vs நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரை கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் பெரியாரின் மண்ணில் நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முழுமையான முடிவுகள் வெளியாகியது. அதன்படி தபால் வாக்குகளில் திமுகவுக்கு 197 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 13 வாக்குகளும், நோட்டாவுக்கு 18 வாக்குகளும் பதிவாகி இருப்பதாக கூறப்பட்டது. அதாவது, தபால் வாக்குகளில் நோட்டாவிடம் நாம் தமிழர் கட்சி 5 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளதாக சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து விசாரித்த போது, தபால் வாக்குகளில் திமுக 197 வாக்குகளை பெற்றுள்ளது உண்மை தான். ஆனால் 2வது நோட்டாவுக்கு என்பது தவறான செய்தியாகும். அதாவது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 13 வாக்குகளும், நோட்டாவுக்கு 8 வாக்குகளும் கிடைத்துள்ளது. இதனை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உறுதி செய்துள்ளது.
இதனால் தபால் வாக்குகளில் நோட்டாவிடம் நாம் தமிழர் கட்சி தோல்வியடைந்தது என்ற தகவல் உண்மை கிடையாது. ஏனென்றால் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்தியில், நோட்டாவை விடவும் 5 வாக்குகளை நாம் தமிழர் கட்சி கூடுதலாக பெற்றிருக்கிறது. இருந்தாலும், நாம் தமிழர் - நோட்டா இடையே தபால் வாக்குகளில் போட்டி இருந்திருக்கிறது.
மேலும் அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோர் மத்தியில் திமுக அதிக ஆதரவை பெற்றிருப்பதாக பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவாளர்கள் தபால் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Fact Check
வெளியான செய்தி
5 வாக்குகள் வித்தியாசத்தில் தபால் ஓட்டுக்களில் நோட்டாவிடம் நாம் தமிழர் கட்சி தோல்வியடைந்தது
முடிவு
நாம் தமிழர் கட்சி பெற்ற தபால் வாக்குகள் 13; நோட்டா பெற்ற தபால் வாக்குகள் 08
ரேட்டிங்
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications