For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

FACT CHECK: இந்தியாவில் ஒருவர் இருக்கிறார்? சீமான் பற்றி அறிக்கை வெளியிட்டாரா எலிசபெத்? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

லண்டன்: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி ராணி எலிசபெத் வெளியிட்ட அறிக்கை என்று கூறி இணையத்தில் ஒரு அறிக்கை உலவி வருகிறது.

யுனைட்டட் கிங்கிடமின் ராணி எலிசபெத் II இறந்துவிட்டதாக பக்கிம்ஹாம் பேலஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வயதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த ராணி எலிசபெத் உடல்நிலை நேற்று மோசமானது.

இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார்.

இவர் 70 வருடமாக அங்கு ராணி பதவியில் இருந்தார். அங்கு நீண்ட காலம் ராணி பதவியில் இருந்தவர் எலிசபெத் IIதான். இவருக்கு 96 வயது ஆகிறது.

Fact Check - “செருப்பு மேட்டர்”.. அண்ணாமலையுடன் மோதல்! அரசியலை விட்டு விலகுவதாக சொன்னாரா பிடிஆர்? Fact Check - “செருப்பு மேட்டர்”.. அண்ணாமலையுடன் மோதல்! அரசியலை விட்டு விலகுவதாக சொன்னாரா பிடிஆர்?

சீமான்

சீமான்

இந்த நிலையில் ராணி எலிசபெத் மரணத்தை தொடர்ந்து சீமான் தொடர்பாக சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ராணி எலிசபெத் உடலுக்கு சீமான் அஞ்சலி செலுத்த போவதாக சில வதந்திகள் இணையத்தில் உலவி வருகின்றன. இன்னும் சில வதந்திகள், ராணி எலிசபெத் என்னுடன் நெருக்கமாக நட்பாக இருந்தார். நான் அவர் வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். அவர் எனக்கு விருந்து கொடுத்துள்ளார் என்று சீமான் சொல்வதாகவும் பொய்யாக செய்திகள் பரவி வருகின்றன.

அஞ்சலி

அஞ்சலி

இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் சீமானும் எலிசெபெத்தும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். அவருடைய பென்சில்,பேனா, அழி ரப்பர், ஸ்கேல், இவைகளை கொடுத்து, சீமான் யூஸ் பண்ணி இருக்கிறார், என்றெல்லாம் வதந்தி பரப்பி வருகின்றனர். சீமான் முன்னதாக விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி சொன்ன விஷயங்களை அடிப்படையாக வைத்து இப்படி அவரை கிண்டல் செய்யும் விதமாக நெட்டிசன்கள் பலர் போஸ்ட் செய்து வருகின்றனர்.

விமர்சனம்

விமர்சனம்

இதை விட அத்துமீறி இன்னும் பலர் வித விதமான போஸ்ட்களை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ராணி எலிசபெத்தே வெளியிட்ட அறிக்கை என்று கூறி இணையத்தில் ஒரு அறிக்கை உலவி வருகிறது. அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் சீமான் என்ற நபர் இருக்கிறார். அவருக்கும் ராணி எலிசபெத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அவர் ஒருமுறை கூட இதுவரை ராணி எலிசபெத்தை சந்தித்தது இல்லை. அவர் எதிர்காலத்தில் கதைகள் ஏதாவது சொல்வார்.

 பொய்

பொய்

ராணியை பற்றி கதைகளை சொல்வார். ஆனால் அதற்கும் ராணிக்கும், இல்லை அரச குடும்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அந்த அறிக்கையில் உள்ளது. சீமான் பற்றி ராணி எலிசபெத் வெளியிட்டதாக கூறப்படும் இந்த அறிக்கை பொய்யானது ஆகும். இந்த அறிக்கை உண்மையில் வெளியிடப்படவில்லை. சீமானை கிண்டல் செய்வதற்காக சிலர் இணையத்தில் இதை வெளியிட்டு உள்ளனர்.

Fact Check

வெளியான செய்தி

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பற்றி ராணி எலிசபெத் வெளியிட்ட அறிக்கை என்று கூறி இணையத்தில் ஒரு அறிக்கை உலவி வருகிறது.

முடிவு

சீமான் பற்றி ராணி எலிசபெத் வெளியிட்டதாக கூறப்படும் இந்த அறிக்கை பொய்யானது ஆகும். இந்த அறிக்கை உண்மையில் வெளியிடப்படவில்லை.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
FACT CHECK: Did Queen Elizabeth release press statement about Naam Tamilar Seeman?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X