For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Fact check: ராணி எலிசபெத் இறுதி சடங்கில் சமஸ்கிருதத்தில் மரியாதை? மதுவந்தி பகிர்ந்த வீடியோ உண்மையா

Google Oneindia Tamil News

டெல்லி: ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் சமஸ்கிருத மொழியில் ஓம் சொல்லி மரியாதை அளிக்கப்பட்டதாக இணையத்தில் பரவி வருகிறது. அது உண்மை தானா?

பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்றவர் ராணி எலிசபெத். 1952இல் தொடங்கி சுமார் 70 ஆண்டுகளாக இவர் பிரிட்டன் ராணியாக இருந்துள்ளார்.

96 வயதான ராணி எலிசபெத்தின் உடல்நிலை கடந்த சில மாதங்களாகவே மோசமாகவே இருந்து வந்தது. வயது மூப்பு காரணமாக அவரால் நீண்ட காலம் நிற்கவும் நடக்கவும் முடியவில்லை என்று சொல்லப்பட்டது.

ராணி எலிசபெத் மறைவால் முடிவுக்கு வந்த குடும்ப சண்டை! நேரடியாக ஃபோன் செய்த மன்னர்.. இணைந்த சகோதரர்கள்ராணி எலிசபெத் மறைவால் முடிவுக்கு வந்த குடும்ப சண்டை! நேரடியாக ஃபோன் செய்த மன்னர்.. இணைந்த சகோதரர்கள்

 ராணி எலிசபெத்

ராணி எலிசபெத்

இந்தச் சூழலில் கடந்த வியாழக்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ராணி எலிசபெத் இருந்த ஸ்காட்லாந்து அரண்மனைக்கு விரைந்தனர். இந்திய நேரப்படி வியாழன் இரவு அவர் உயிரிழந்தார். ராணியின் மறைவு லண்டன் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவரது மகன் சார்லஸ் மன்னராகப் பதவியேற்றார்.

பரவும் வீடியோ

இதனிடையே பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் இரண்டாம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது "ஓம்" எனச் சமஸ்கிருத மொழியில் இறுதி மரியாதை அளிக்கப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவியது. பல குழந்தைகள் ஒன்றாக "ஓம்" என்று கூறும் இரு நிமிட வீடியோக்களும் இணையத்தில் பலரால் பகிரப்பட்டது.

மதுவந்தி

பாஜகவைச் சேர்ந்த மதுவந்தியும் கூட இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். மேலும், ட்விட்டர் வாசிகள் பலரும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து.. சமஸ்கிருத மொழியின் தொன்மை ஆங்கிலேயர்களுக்கே புரிவதாகவும் குறிப்பிட்டு வந்தனர். இந்த வீடியோ உண்மை எனக் கருதியே பலரும் இதைப் பகிர்ந்தனர். ஆனால், இது உண்மையில் எலிசபெத் மகாராணி இறுதிச் சடங்கில் எடுக்கப்பட்டதா? என்ற கேள்வியையும் பலர் எழுப்பி உள்ளனர்.

உண்மையா

இந்த சம்பவம் மகாராணி இறுதிச் சடங்கில் நடந்தது இல்லை. ஏனென்றால் ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு இன்னும் நடைபெறவே இல்லை. அவரது உடல் இன்றைய தினம் தான் ஸ்காட்லாந்து நாட்டில் இருந்து லண்டனுக்கு எடுத்து வரப்பட்டு உள்ளது. அடுத்த சில நாட்கள் ராணி எலிசபெத் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படும். ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் செப்டம்பர் 19ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டரில் நடைபெறுவதாகப் பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

 எங்கு எடுக்கப்பட்டது

எங்கு எடுக்கப்பட்டது

இதன் மூலம் மகாராணி இறுதிச் சடங்கில் ஓம் என்ற கூறி மாணவிகள் இறுதி மரியாதை அளித்ததாகப் பரவும் செய்தி பொய் எனத் தெரிகிறது. சரி அந்த வீடியோவுக்கு வருவோம் அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வீடியோ லண்டனில் கடந்த 2009ஆம் ஆண்டு டெல்லி காமன்வெல்த் போட்டிகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது

 எப்போது எடுக்கப்பட்டது

எப்போது எடுக்கப்பட்டது

2009 அக்டோபர் 29இல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சியில் செயின்ட் ஜேம்ஸ் பள்ளி பாடகர் குழு குழந்தைகள் சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்கள் கூறியுள்ளனர். மேலும், அந்த வீடியோவில் 2010 டெல்லி காமன்வெல்த் போட்டிகளின் லோகோவும் உள்ளது தெரிகிறது. இதன் மூலம் மகாராணி இறுதிச் சடங்கில் எடுக்கப்பட்ட வீடியோ எனப் பரவும் தகவல் பொய் என்பது உறுதியாகி உள்ளது.

 இறுதிச் சடங்கு எப்போது

இறுதிச் சடங்கு எப்போது

வரும் செப்டம்பர் 19ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டரில் ராணி எலிசபெத்திற்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் விண்ட்சர் கோட்டையின் கிங் ஜார்ஜ் VI மெமோரியல் சேப்பலில் அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது மறைந்த கணவர் மன்னர் பிலிப்பின் உடலும் எலிசபெத் உடல் அருகே கிங் ஜார்ஜ் VI மெமோரியலுக்கு மாற்றப்பட உள்ளது.

Fact Check

வெளியான செய்தி

மகாராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் "ஓம்" என்று சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்கள் சொல்லி மரியாதை அளிக்கப்பட்டது

முடிவு

எலிசபெத் ராணிக்கு இன்னும் இறுதிச் சடங்கு நடக்கவே இல்லை. இது 2009இல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Video of Sanskrit slokas in queen elizabeth funeral is not true: All things to know about queen elizabeth funeral fact check.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X