For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவில் ராணுவ புரட்சியா? அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக களமிறங்கிய "ஆர்மி" படைகள்? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் பலரும் போஸ்ட் செய்து வருகின்றனர். முக்கியமாக #XiJinping என்ற டேக்கின் கீழ் ட்விட்டரில் பலர் போஸ்ட் செய்து வருகின்றனர்.

சீனாவில் தற்போது ஒற்றை கட்சி ஆட்சி முறை இருக்கிறது. அங்கு எதிர்க்கட்சிகள் என்று எதுவும் இல்லை. சீன கம்யூனிஸ்ட் பார்ட்டி என்ற ஒரே ஒரு கட்சி மட்டுமே சீனாவில் உள்ளது.

1921ல் இந்த கட்சி தொடங்கப்பட்டது. இதன் பொதுச்செயலாளராக தற்போது ஜி ஜின்பிங் இருக்கிறார். 2012ல் இருந்து இவர் அந்த பதவியில் இருந்து வருகிறார்.

அதோடு 2013ல் இருந்து சீனாவின் அதிபராகவும் இருக்கிறார்.

4 மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுத்த செந்தில் பாலாஜி! கோவை மாவட்ட திமுகவில் குஸ்தி! 4 மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுத்த செந்தில் பாலாஜி! கோவை மாவட்ட திமுகவில் குஸ்தி!

சீனா

சீனா

சீனாவில் தற்போதுஜி ஜின்பிங்கை எதிர்க்க ஆள் இல்லை என்றுதான் கூற வேண்டும். சொந்த கட்சிக்கு உள்ளே அவரை எதிர்க்க பெரிய தலைவர்கள் இல்லை. முன்னாள் அமைச்சர்கள், அவருக்கு போட்டியாக இருந்த அமைச்சர்கள் பலர் ஊழல் புகாரில் சிறைக்கு சென்றுவிட்டனர். அவருக்கு எதிராக குரல் கொடுத்த பலர் காணாமல் போய்விட்டனர்.இன்னும் சிலர் வேறு வேறு குற்றங்களில் அடைக்கப்பட்டு உள்ளனர். சீனாவில் அந்த அளவிற்கு எதிர்ப்பாளர்களை மிக கடுமையாக ஜி ஜின்பிங் கட்டுப்படுத்தி வருகிறார்.

ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்

ஜி ஜின்பிங்கை அவ்வளவு எளிதாக அங்கு கட்டுப்படுத்த முடியாது. அதோடு சீனாவின் நிரந்தர அதிபராக அவர் முயன்று வருகிறார். கடந்த 2018ல்தான் சீனாவின் காங்கிரஸ் அவையில் அதிபருக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. அதன்படி ஒரு நபர் இரண்டு முறை மட்டும்தான் அதிபராக முடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டது. இதன் மூலம் ஜி ஜின்பிங் வாழ்நாள் முழுக்க அதிபராக இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டன.

கட்டாயம்

கட்டாயம்

அதாவது 2023ல் ஜி ஜின்பிங் பதவி காலியாகாது. மாறாக அவர் தொடர்ந்து அதிபராக இருக்க போகிறார். மீண்டும் அவர் அதிபராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சீனாவில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் பலரும் போஸ்ட் செய்து வருகின்றனர். முக்கியமாக #XiJinping என்ற டேக்கின் கீழ் ட்விட்டரில் பலர் போஸ்ட் செய்து வருகின்றனர்.அதிபருக்கு எதிராக ராணுவம் புரட்சியில் குதித்து உள்ளதாக கூறப்படுகிறது.

புரட்சி

புரட்சி

அந்நாட்டு ராணுவ தளபதி லி சியோசாங்க் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக புரட்சியில் குதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது நெட்டிசன்கள் மட்டும் செய்யும் போஸ்ட் ஆகும். உண்மையில் இது தொடர்பாக சீன ஊடகங்கள் எதுவும் செய்தி வெளியிடவில்லை. வேறு எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அந்நாட்டு ராணுவம் அதிபருக்கு எதிராக கலகம் செய்து, பாராளுமன்றத்தை கைப்பற்றிவிட்டதாகவும் போஸ்ட்கள் போடப்படுகின்றன. ஆனால் இதில் உண்மை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Fact Check

வெளியான செய்தி

சீனாவில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் பலரும் போஸ்ட் செய்து வருகின்றனர். முக்கியமாக #XiJinping என்ற டேக்கின் கீழ் ட்விட்டரில் பலர் போஸ்ட் செய்து வருகின்றனர்.

முடிவு

இது தொடர்பாக சீன ஊடகங்கள் எதுவும் செய்தி வெளியிடவில்லை. வேறு எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Fact Check: No, Chinese army did not take over the Xi Jinping government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X