ஒரே நாளில் அமெரிக்காவில் ரூ.12,206 சரிந்த.. தங்கம் விலை.. மக்கள் ஷாக்.. இந்தியாவிலும் எதிரொலிக்குமா?
சென்னை: அமெரிக்காவில் திடீரென பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தங்கத்தின் விலை சரிந்து உள்ளது. தொடர்ந்து 2-3 மாதங்களாக விண்ணுக்கு சென்ற தங்கத்தின் விலை இன்று சரிந்து உள்ளது. தங்கத்தின் விலை விடாமல் உயரும் என்று நம்பிக்கையாக அதில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த சரிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தங்கத்தின் விலை இன்று அமெரிக்க வர்த்தகத்தில் ஒரு ட்ராய் அவுன்ஸ் ஒன்றுக்கு $140 குறைந்துள்ளது. அமெரிக்க Comex இல் தங்கம் ஒரு ட்ராய் அவுன்ஸ் ஒன்றுக்கு $3,275.80 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கத்தின் விலை அங்கே $143.60 அல்லது 4.20% குறைந்துள்ளது. கிட்டத்தட்ட அமெரிக்காவில் 12,206 ரூபாய் தங்கம் விலை இதன் மூலம் சரிந்து உள்ளது.
1 அவுன்ஸ் = 28.3495 கிராம் ஆகும். அங்கே ஒரு அவுன்ஸ் 3416 டாலராக இருந்தது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,824 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,005 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,460 ஆகவும் உள்ளது.

தங்கம் விலை உயருமா?
இதனால் உலக அளவில் தொடர்ந்து தங்கம் விலை சரியுமா அல்லது உயருமா என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால் தங்கத்தின் விலை சரியாது கண்டிப்பாக உயரும் என்று Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார். தங்கத்தின் விலை 10 மடங்கு உயரப்போவதாக ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.
அதிகம் விற்பனையாகி உலக அளவில் சாதனை படைத்த நிதி நிர்வாக புத்தகமான Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தங்கம் விலை குறித்து தைரியமாக கணித்துள்ளார், 2035-ம் ஆண்டுக்குள் பிட்காயின் $1 மில்லியனைத் தாண்டும், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $30,000 ஆக இருக்கும். வெள்ளி 2035-ம் ஆண்டுக்குள் ஒரு நாணயத்திற்கு $3,000-ஐ எட்டும் என்று கணித்துள்ளார்.
என்னிடம் ஏற்கனவே நிறைய வெள்ளி உள்ளது. வெள்ளி தங்கம் கொஞ்சம் இருந்தாலும் சேமித்து வையுங்கள். அதுதான் முக்கியம். வெள்ளியில் முதலீடு செய்ய நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டியதில்லை. உலகில் உள்ள அனைவராலும் குறைந்தபட்சம் 1 அவுன்ஸ் வெள்ளி வாங்க முடியும். வெள்ளி வாங்க வாங்க உங்கள் வாழ்க்கை மாறும். போலியான காகிதப் பணத்தைச் சேமிப்பதை விட வெள்ளியைச் சேமியுங்கள். தங்கம், சில்வர் மற்றும் பிட்காயின் ஆகியவற்றில் ஒன்றில் முதலீடு செய்பவர்களே புத்திசாலிகள்.
முட்டாள்களாக இருக்காதீர்கள். தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் சேமிக்கவும், என்று Rich Dad Poor Dad என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தெரிவித்துள்ளார்.
உலகளாவிய தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் தங்கத்தின் விலை இலக்கை அவுன்ஸ் ஒன்றுக்கு $3,300லிருந்து $3,700 ஆக உயர்த்தியுள்ளது. சமயத்தில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 4,500 டாலர்களைத் தொடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. பொதுவாக இந்த நிறுவனத்தின் கணிப்புகள் தங்கம் விலையில் துல்லியமாக இருக்கும். இவர்களே $3,700 என்று சொல்வதால் 10 கிராம் தங்கம் இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்தை அடையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.












Click it and Unblock the Notifications