அசுர பலம் பெறப்போகும் டாலர்.. தங்கம் சட்டென சரியப்போகிறது.. ரொம்ப கவனமாக இருங்க! என்ன நடக்கும்?
சென்னை: சர்வதேச தங்கம் விலை நேற்று அவுன்ஸுக்கு 4,000 டாலரை எட்டி புதிய உச்சத்தைப் தொட்டுள்ளது. உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், நடப்பு நிதியாண்டில் சர்வதேச தங்கம் விலை 30% உயர்ந்துள்ளது.
இந்தியாவில், தங்கம் விலை கணிசமான ஏற்றம் கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், தங்கம் 37.5% உயர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும் 6% அதிகரித்துள்ளது.

எனினும், இந்த விரைவான ஏற்றம் விரைவில் சரிவை சந்திக்கும். தங்கம் விலை சட்டென குறையும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கம் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் அமைதி ஒப்பந்தத்திற்கான சாத்தியக்கூறுகள் போன்ற உலகளாவிய நிகழ்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.
இதற்கு இடையே டாலர் குறியீடு இரண்டு மாத உச்சத்தை எட்டி, 99-ஐ நெருங்கியுள்ளது. இது தங்கம் மற்றும் வெள்ளி மீதான ஆர்வத்தை திடீரென குறைக்கும். டாலர் குறியீடு இந்த வாரம் 1.27% உயர்ந்து 98.7-ல் வர்த்தகமாகிறது. இது தங்கம் மற்றும் வெள்ளியின் சரிவிற்கான அறிகுறி.
அதாவது டாலர் மதிப்பு உயர்ந்தால் தங்கத்தின் மதிப்பு சரியும். தங்கத்தின் விலை சரியும். பலர் டாலரை நோக்கி ஓடுவார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வாளர் நிகாம் அரோரா, "தங்கம் மிகவும் அதிக அளவில் வாங்கப்பட்டு வருகிறது. இது தங்கம் விலையை உயர்த்துகிறது. ஆனால் டாலர் விலை வேகமாக உயர்கிறது. அப்படி உயர்ந்தால் அந்த தங்கத்தின் சரிவுக்கு காரணமாக அமைந்துவிடும்" என்று குறிப்பிடுகிறார். வலுவான டாலர், அமெரிக்க அரசாங்க முடக்கம் முடிவுக்கு வருகிறது மற்றும் அக்டோபரில் வட்டி விகிதங்களை பெடரல் ரிசர்வ் குறைக்காதது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை வேகமாக சரியும் வாய்ப்புகள் உள்ளன.
சர்வதேச அரசியல்
பிரான்ஸ் மற்றும் ஜப்பானில் பத்திர வருமானங்கள் அதிகரித்து வருகின்றன. பிரான்சில் புதிய அரசாங்கம் பட்ஜெட்டை நிறைவேற்றினால், அல்லது ஜப்பானில் அடுத்த பிரதமராக வருபவர் நிதி கொள்கையை கட்டுப்படுத்துவதாக அறிவித்தால், தங்கம் விலையில் சரிவு ஏற்படலாம்.
தங்கம் மட்டுமல்லாமல், வெள்ளி விலையும் சீராக சரியும். அதாவது, தங்கம் விலை குறையும் போது, வெள்ளியின் விலை 1.7 மடங்கு சரியும். இந்த சரிவு, விரைவான ஏற்றத்தைப் போலவே, மிக வேகமாக இருக்கலாம்.
தங்கம் சரியும்
தங்கம் விலை உயர்வு நீண்ட காலம் நீடிக்காது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 2011-ம் ஆண்டில் தங்கம் ஒரு உச்சத்தை எட்டியது. ஆனால், பின்னர் ஒரு பெரிய மற்றும் நீண்ட சரிவைக் கண்டது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 14 வருடங்களுக்கு முன் மிக அதிக விலை உயர்வை அடைந்து.. பின்னர் மிக மோசமான சரிவை சந்தித்தது. அதேபோல் மீண்டும் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன.
தற்போது, சந்தைகள் வரவிருக்கும் அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளை உன்னிப்பாகக் கவனிக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), உற்பத்தி மற்றும் சேவைத் துறை அறிக்கைகள், பணவீக்கக் குறியீடு போன்ற தரவுகள் தங்கத்தின் விலை தொடர்ந்து உயருமா அல்லது சரியத் தொடங்குமா என்பதற்கான தெளிவைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் தங்கத்தின் விலை இதனால் சரியும் வாய்ப்புகள் உள்ளன.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
வெள்ளியில் முதலீடு செய்ய ஆசையா.. MCX கொண்டு வந்த வரபிரசாதம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications