Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Price Today: இன்னைக்கும் அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. தொடர்ந்து சரிவு.. நகை பிரியர்கள் குஷி! இன்றைய ரேட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price) தாறுமாறாக உயர்ந்த நிலையில் தற்போது சில நாட்களாக குறையத் தொடங்கியிருக்கிறது. வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலை சரிந்து வருவதால் நகை பிரியர்கள் குஷியடைந்துள்ளனர்.

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.980 குறைந்து இன்ப அதிர்ச்சி தந்தது. இதேபோன்று வெள்ளி விலையும் நேற்று தடாலடியாக சரிந்தது. நேற்று மட்டும் ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.265-க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold price Chennai gold

வராலாறு காணாத உயர்வு

கடந்த ஆண்டு 2025 ஜனவரி மாதம் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.57 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. ஆனால் ஒரே ஆண்டில் அதாவது டிரம்ப் பதவியேற்ற பிறகு தாறுமாறாக உயரத் தொடங்கியது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக தினம் தினம் தங்கம் விலை புது உச்சம் தொட்டது.

ஒரு ஆண்டு முடிந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ.96,580 என்ற அளவுக்கு உயர்ந்தது. ஒரே ஆண்டில் சுமார் 40 ஆயிரம் உயர்ந்து தங்கம் விலை பேரதிர்ச்சியை கொடுத்தது. இதோடு நிற்காமல் அடுத்த ஒரு மாதத்திற்குள் தங்கம் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து மேலும் அதிர்ச்சியை தந்தது.

அதிச்சியில் மூழ்கிய மக்கள்

அதாவது 29 நாட்கள் கூட ஆகாத நிலையில், ஜனவரி 29 ஆம் தேதி தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவாக ஒரு சவரன் சென்னையில் ரூ.1,34,400-க்கு விற்பனை ஆனது. தங்கம் விலையை பார்த்து நகை பிரியர்கள் மட்டுமின்றி சாதாரண ஏழை, எளிய மக்களும் மிகுந்த கவலையடைந்தனர்.

ஆனால் அதற்கு பிறகு தங்கம் விலை சரிய தொடங்கியது. ஒரு லட்சத்து 34 ஆயிரம் சென்ற நிலையில் மீண்டும் ரூ.19 ஆயிரம் குறைந்து இருக்கிறது. மளமளவென அதிகரித்த தங்கம் விலையால் அதிர்ச்சியில் மூழ்கியவர்களுக்கு அடுத்தடுத்து தங்கம் விலை சற்று குறைந்து சற்று ஆறுதலை தந்தது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன

அந்த வகையில் நேற்றும் சென்னையில் தங்கம் விலை குறைந்தது. நேற்று ஒரு நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.120 குறைந்து ரூ.14,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.14,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.960 குறைந்து ரூ.1,14,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கடந்த 5 நாட்களாகவே எந்த வித மாற்றமின்றி சென்னையில் ஒரு கிராம் ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிரடியாக சரிந்தது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.15 குறைந்து ரூ.265-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை ஆகிறது. ஒரு கிராம் ரூ.265-க்கு விற்பனை ஆகின்றது.

தங்கம் விலை நிலவரம்:

17.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560 (இன்று)
16.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,520 (நேற்று)
15.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
14.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

13.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,200
12.02.2026- ஒரு சவரன் ரூ.1,16,800
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,320
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

10.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,640
09.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
08.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360
07.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360

06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,000 (மாலை)
06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,960 (காலை)
05.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560
04.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200

03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160 (பிற்பகல்)
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,240 (காலை)
02.02.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
01.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200

31.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,29,600 (காலை)
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,26,800 (மாலை)
29.01.2026 - ஒரு சவரன் ரூ.1,34,400
28.01.2026 - ஒரு சவரன் ரூ.1,24,880
27.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
26.01.2026 - ஒரு சவரன் ரூ.1,20,200
27.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680 (நேற்று)
26.01.2026 - ஒரு சவரன் ரூ.1,20,200
25.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000

24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000 (பிற்பகல்)
24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,16,690 (காலை)
23.01.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
22.01.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
21.01.2026 - ஒரு சவரன் ரூ.1,15,320 (பிற்பகல்)
21.01.2026 - ஒரு சவரன் ரூ.ரூ.1,14,00 (காலை)

20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,08,880 (காலை)
19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600
18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840

15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320
14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640

05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)
05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)
04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)
02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320
01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+